Wednesday, 10 April 2013

மரணம் என்பது சம்பவமா ? அல்லது சாபமா ?


மரணம் என்பது சம்பவமா ? 
அல்லது விதியின் சாபமா?

அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.
இன்றைய தினம் வேறு ஒரு புதிய தலைப்பினில் 
உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நிற்க.

பொதுவாக ஒருவர் திடீர் என்று மரணம் அடைகிறார் என்று வைத்துகொள்வோம்.அந்த சமயத்தில் நாம் எண்ணுவதெல்லாம் இப்படி இளம்வயதில் இறந்துவிட்டாரே இவருக்கு இப்படி கோரமான மரணமா என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.  ஆனால் அது சரியல்ல என்பதே ஜோதிடர்களின் கருத்து. ஆம் அன்பர்களே.
.  
ஒருசிசுஅதுஅதன்தாயின்கருவறையில்உருவாகும்
போதேஅதன்பிறப்பு,வாழ்க்கை,திருமணம்,மூப்பு,
பிணி,மற்றும்,மரணம் இவைகள் எல்லாம் இறைவனால் நிச்சயிக்கப் படுகிறது என்பதே உண்மை.

அதற்குமேல் ஒரு வினாடி கூட அந்த உயிர் இந்த பூமியில் வாழ வழியும் இல்லை.வாழ வகையும் இல்லை என்பதே ஜோதிடசாஸ்திர வித்தகர்களின் கணக்கு.

எவ்வளவு உணவு எவ்வளவு காற்று எவ்வளவு தண்ணீர்இவை அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு பருக்கை கூட சாதம் உண்ண முடியாது. கடுகு அளவு கூட காற்று சுவாசிக்க முடியாது.அனுமதிக்க பட்டதற்கு மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூடகுடிக்க முடியாது.

வாழ்வும் சாவும் பூர்வபுண்ணிய பலன்களின்  அடிப்படையில் மட்டுமே மனித உயிர்களுக்கு கிட்டுகிறது.இதனை கூட்டவோ குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை. எல்லாமே இறைவனின் செயல். இதற்கு துணையாக ஆதாரமாக இருப்பது நமது போன ஜென்ம பூர்வ 
புண்ணிய பலன்கள். 

அதானால் தான் நான் என்னைத்தேடி ஆரூடம் பார்க்க வரும் அன்பர்களிடம் வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் போன ஜென்மத்தில் நீ என்ன பாவம் செய்தாயோ இப்படிஅவதிப்படுகிறாய். ஆகவே இந்த ஜென்மத்திலாவது நாலு பேருக்கு எட்டு நன்மைகளை செய். அப்போதாவது அடுத்த ஜென்மம் உனக்கு நற்கதி நிறைந்ததாக அமையும் என்று சொல்வேன்.

சிந்திப்பீர் செயல் படுவீர் அன்பர்களே.


நன்றி.வணக்கம். மதுரை T.R.பாலு.

மீண்டும்அடுத்த விளக்கத்தில் சந்திப்போம்

No comments:

Post a Comment