தமிழனாக இருங்கள் !!
தமிழிலேயே பேசுங்கள் !!
உலகெங்கணும் வாழ்ந்து வரும் எனது உயிரினும்
மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
வாழ்த்துகளுடன் கூடிய வணக்கம் பல.
இன்றைய தினம் உங்கள் அனைவரிடமும் நான்
பகிர்ந்துகொள்ளும் செய்தி, தலைப்பினில் குறிப்பிட்-
டுள்ள M.G.R. நினைவலைகளில் நான் பார்த்திருந்த
கேட்டிருந்த விஷயங்கள் பலவற்றினை இந்தக்கால
இளைய தலைமுறையினர் தெரிந்திருக்க வாய்ப்பு
இல்லாதகாரணத்தினால்அவர்களுக்கு தெரிவிக்கும்
பொருட்டு இந்த கட்டுரையை பதிவு செய்கிறேன்
அன்பர்களே.
தி.மு.க. வைப்பொருத்தவரை MGR ஒரு கற்பக
விருட்ஷமாகவே, காமதேனு பசுவாகவே, அவர்
வாழ்ந்து வந்தார் என்றால் அது மிகை இல்லை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் காலம் தொட்டே
அவரது நிலை கட்சியைப் பொறுத்தவரை நான்
மேலே குறிப்பிட்டுள்ளது போலத்தான். அண்ணா
அவர்களே சொன்னதுண்டு. நானே எனது காதுபட
கேட்டுள்ளேன். ஒருமுறை தேர்தல் பொதுக்
கூட்டத்தில் அண்ணா பேசியபோது கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறார்:-
நான் உங்களுக்கு ஒன்றினைத் தெளிவாக குறிப்பிட
கடமைபட்டுள்ளேன். MGR அவர்கள் இன்று என்னை
சந்தித்து தேர்தல் நிதியாகஒரு லட்சம் ரூபாயினைத்
தருவதாகச் சொன்னபோது நான் சொன்னேன். தம்பி
உன் முகத்தை மக்களிடம் காண்பித்தால் அதுவே
எனக்கு போதுமானது. தாங்கள் அளிக்க விரும்பும்
ஒரு லட்சம் பணத்தைவிட உன் திருமுகம் எனக்கு
ஒரு கோடி வாக்குகள் பெற்றுத் தரும் தம்பி MGR
அவர்களே !!
இவ்வாறாக பாராட்டுப்பெற்றவர்தான் மறைந்த MGR
திரை உலகிலும் சரி கட்சி மட்டத்திலும் சரி என்றும்
தனது செல்வாக்கினை தக்க வைத்துக் கொள்வதில்
அவருக்கு நிகர் அவரே.
அண்ணா அவர்களின் திடீர் மறைவுக்குப்பின் யார்
முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று
தீர்மானித்து முடிவெடுத்ததில் இவரது பங்கு
அளவிடற்கரியது. நெடுஞ்செழியனா இல்லை
கருணாநிதியா என்ற போட்டியின் போது இவர்
( MGR) கருணாநிதி பக்கமே இருந்து கலைஞரை
முதல்வராக்கி அழகு பார்த்தார்.
ஆனால் அதற்கு கலைஞர் செய்திட்ட கைம்மாறு
எப்படிப்பட்டது தெரியுமா அன்பர்களே.
சொல்கிறேன். சற்று நாளைவரை பொருத்திருங்கள்.
நன்றி வணக்கம்.
அன்புடன் மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment