தமிழனாக இருங்கள் !! தமிழிலேயே பேசுங்கள்! !
ஆஸ்கார் விருது கிடைக்குமா ?
உலகெங்கும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் !!
இன்றைய தினம்நான் உங்களுடன் கலந்து கொண்டு
அலச உள்ள விஷயம் ஆஸ்கார் விருது பற்றியது.
அது நமது தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்குமா
அல்லது கிடைக்கவே கிடைக்காதா என்று எண்ணி
எண்ணி ஏங்கிடும் பல கோடி இதயங்களுள் எனது
இதயமும் ஒன்று.
முதலில் இந்த விருது உலகெங்கிலும் எடுக்கப்பட்டு
வரும் திரைப்படங்கள், அவை நாடு,மொழி, இனம்,
கலாச்சாரம் இவைகள் எல்லாவற்றையும் கடந்து
தனித் திறமைகளுக்கு உண்மைத் திறனாளிகளுக்கு
வழங்கப் பட்டு வருகின்ற ஒரு மிக உயரியதோர்
விருது என்று சொன்னால் அது மிகை அல்ல நேயர்
பெருமக்களே.
சரி இதுபோன்ற விருதுகள் ஏன்,எதற்காக, நமது
தமிழ்த் திரைப்படங்களுக்கு வழங்கப்படுவது
இல்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.
அன்பர்களே.
ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனம் அதற்காக
உள்ள தேர்வுக் குழுவினர்கள் உலகம் முழுவதும்
விருதினை நாடி தேடிவரும் எல்லா வகையான
ஆயிரம் ஆயிரம் திரைப்படங்கள் அனைத்தையும்
அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அதன்
உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் மட்டுமே
விருதுகள் வழங்கப் படுவதினால்தான் நமது தமிழ்த்
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைப்பது
என்பது இதுவரை கைகூடாமல் இருந்து வருகிறது .
இதுவே உண்மை.
சரி. இப்ப சொல்லுங்க நமக்கு எப்படிங்க இந்த
ஆஸ்கார் விருது கிடைக்கும். என்னாங்க நான்
சொல்றது உங்களுக்கு புரியுதா? புரியல்லையா ?
இந்த விருது
திரைப் படத்தின் உண்மைத் தன்மைகளின்
அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதால் இது
நமக்கு எப்படி கிடைக்கும். இதுதானுங்க இப்ப நான்
உங்க முன்னாள் வைக்கும் கேள்வி. ஏனுங்க நம்ம
படத்தில எங்கைங்க உண்மை இருக்குது. நாம இந்த
விருதுக்கு ஆசைப்படும்படியாக ?
கதாநாயகனும் கதாநாயகியும் திடீர்னு ஒரு
பூங்காவிலே சந்திப்பாங்க. அப்ப ஒருத்தர் கையை
ஒருத்தர் பிடிச்சவுடன் அப்படியே சிலை மாதிரி
மாறினவுடன் ஒரு சாரட் வண்டிவரும். நாலு
வெள்ளை அரபுக் குதிரைகள் அதில்பூட்டி இருக்க
ஹீரோயின் ராணி மாதிரியாகவும் ஹீரோ ராஜா
மாதிரியாகவும் ஆகி பின்னணிஇசை வேறு இசைக்க
உடனே பாட்டு வேற பாட ஆரம்பிச்சுடுவார்கள்.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் அது இதுன்னு.
ஏன் சார் இப்படி படம் எடுத்தா எப்படி சார் நமக்கு
அந்த ஆஸ்கார் விருது கிடைக்கும் ?
அட இதுகூட பரவா இல்லைங்க. நம்ம கதாநாயகன்
இருக்காரே சும்மா ஒல்லியா நோஞ்சான் மாதிரி
இருப்பாருங்க. கேட்டா மூத்தவர் இளையவர் அப்படி
இப்படிம்பாங்க பாத்தீங்கன்னா ஒரு மாமிச மலை
மாதிரி ஒரு வில்லனை டிஷ்யூம் டிஷ்யூம் என ஒரு
குத்து விடுவார் உடனே அவர் ஆறு பல்டி அடிச்சு
கீழே விழுவார். ஏன் சார் இப்படி படம் எடுத்தா
எப்படி சார் நமக்குஅந்தஆஸ்கார்விருது கிடைக்கும்.
இதுவாவது பரவாயில்ல. ஒரே மாதிரி முகம் ஒரே
மாதிரி உடம்பு ,ஜாடை இதுக்கு பேரு எல்லாமே
இரட்டை வேடமாம். அது எல்லாம் உண்மையா
நம்புற மாதிரியா இருக்கு. ஏன் சார் இப்படி படம்
எடுத்தா எப்படி சார் நமக்கு அந்த ஆஸ்கார் விருது
கிடைக்கும்.
அப்புறம்கதாநாயகியைவில்லன்கெடுத்துடுவான்.
அந்த ஒரே சந்திப்பிலே கதாநாயகி மூணாம் மாசம்
உண்டாகி விடுவாளாம். இது எல்லாம் எப்படி சார்
நம்புறது.இப்படி படம் எடுத்தா எப்படி சார் நமக்கு
அந்த ஆஸ்கார்விருது கிடைக்கும்.
கதாநாயகன் ஒருத்தன் இருபதுபேரை அடிச்சு
போட்டு விட்டு தனி ஆளாக வில்லனையும் அடிச்சு
மயங்க வச்சுட்டு கட்டிபோட்டுஉள்ள கதாநாயகியை
தூக்கிட்டு போய் விடுவாராம். இப்படி படம் எடுத்தா
எப்படி சார் நமக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும்.
ஒரு பாட்டு ஆரம்பிச்சு அதுமுடியறதுக்கு முன்னாடி
அந்த ஹீரோ சைக்கிளில் பால் விற்றுக்கொண்டு
இருப்பவர் பெரிய முதலாளி ஆகி விடுவார்.சும்மா
பென்ஸ் காரிலே தான் போவார் வருவார்.இப்படி
எல்லாம் படம் எடுத்த எப்படி சார் நமக்கு அந்த
ஆஸ்கார் விருது கிடைக்கும்.
அதனாலே சொல்றேன்.உண்மைத்தன்மையை ஒரு
சிறிதும் மறைக்காமல் வசூல் வேட்டையை நம்பி
படம் எடுக்காமல் தொழில் நுட்பத்தின்
திறமையுடன் உண்மையுடன் விசுவாசத்துடன்
கலையை மட்டும் நம்பி படம் எடுத்தா ஒரு நாள்
இல்லை என்றாலும் ஒரு நாள் நமது தமிழ் படம்
ஆஸ்கார் விருது வாங்கும். அது உறுதி.
தயவுசெய்து அது எப்ப வரும் என கேட்காதீர்கள்.
வரும்.வரும்.வரும்.வரும்.வரும்.வரும்.
நம்மகமல் மாதிரி நடிகர்கள் அவர்களது முழு
திறமையையும் நம்பி வசூலை பற்றிக் கவலைப்
படாமல் ஒரு திரைப் படம் எடுத்தா நிச்சயம் ஒரு
நாள் நமக்கும் ஆஸ்கார் விருது கிடைக்கும் சார்.
என்ன நான் சொல்றது சரியா. நம்பிக்கைதான் சார்
வாழ்க்கை.யோசிங்க.நான் சொன்னதை.
நன்றி.வணக்கம்.
அன்புடன்.மதுரை TR.பாலு.

No comments:
Post a Comment