Sunday, 28 April 2013

அறிவில்லாத அரசனோடு ஒரே சிரிப்பு மழை !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக ! 

(தமிழர்களிடமாவது ) 



  சிரிப்புக் கதை !!                   

அது ஒரு விநோதமான புத்தி 

கொண்ட மக்கள்வாழ்ந்துவரும் 

வித்தியாசமான நாடு.  மக்கள் ஆட்சி 

தத்துவம்என்பதுபெயரளவில் கூட 

அந்நாட்டில்நடைமுறையில் செயல்

படவில்லை.மக்கள்எக்கேடுகெட்டா-

லும்அதைப்பற்றிஆட்சியாளர்களுக்-

கும்கவலைஇல்லை. அந்த மக்களும் 

அதைப்பற்றிகவலைப்படுவதுஇல்ல

வே இல்லை. எல்லாம் நமது தலை 

எழுத்து என்று எண்ணி வேதனைப் 

பெருமூச்சுடனேயே மக்கள் வாழ்ந்து 

வந்தனர். அந்நாட்டு அரசர், அவரும் 

சரி,ஒரு புத்தி சுவாதீனம் அற்ற மன 

நிலை சரி இல்லாதநோயாளியும் சரி

இருவரும்ஒன்றுதான்.துக்ளக் தர்பார்

ஆட்சி தான் அங்கே நடைபெற்றுக் 

கொண்டு வந்தது.  உம்! என்றால் 

சிறைச்சாலை ! ஏன் ! என்றால் வன 

வாசம்தான்.  அந்த நாட்டின் அரசர் 

ஜெயந்தன் அதைப் பற்றி எல்லாம் 

கவலைப்படுவதுஇல்லை.அவருக்கு

துதிபாடும் மந்திரிப்பிரதானிகள் ,

ஜால்ரா போடும் ஆட்சிமன்றத்தின் 

நியமன உறுப்பினர்கள். இவர்கள் 

அனைவரது வேலையும் என்ன

என்றால்அரசர்ஜெயந்தன்அவையில் 

பேச எழுந்தது முதல் பேசி அமர்வது 

வரை கைதட்டிக் கொண்டே விசில் 

அடிப்பதும் பேச்சுக்கு பேச்சு "அப்பா"

"அப்பா"என்று ஆயிரம் தடவைகள் 

அழைப்பதும்தான்.  அரசருக்கு என 

தெரிந்தது ஒன்றேஒன்றுதான். நன்கு 

உடையுடுத்தி மிடுக்காக சபைக்கு 

வரத் தெரியும். மற்றபடி ஆட்சி எப்படி 

நடத்துவது மக்களின்தேவைகள் எது 

அதைப் பூர்த்தி செய்திட என்னென்ன 

செய்வது என எதுவும் அறிந்திடாத 

பூஜ்யஅறிவுகொண்டஅரசர்ஜெயந்த

-னென்பது அந்த நாட்டு மக்கள் அறிந்

-த ஒன்றுதான். மன்னரின் முக்கிய 

பொழுதுபோக்கு என்னவென்றால் 

அவரும் அவரது நெருங்கிய தோழர்

காசிராம் இருவரும் சதா அரட்டை 

அடித்துக்கொண்டு இருப்பதுதான். 

இந்த சூழலில் ஒரு நாள் அரசர் 

அவசரமாக தனது முக்கிய மந்திரி 

சோமன் அவர்களை அழைத்து 

நான் இதுவரை பார்திடாத சுவைத்-

-திடாத கனியை எவர் ஒருவர் வரும் 

வாரத்திற்குள் என்னிடம் கொண்டு 

வந்து காண்பிக்கிறார்களோ அந்த 

நபருக்கு அரசாங்கத்தில் வேலையும் 

தங்க சொந்தவீடும் கையில்பணமாக

5 லட்சம் அமெரிக்க நாட்டு டாலரும் 

வழங்கப்படும் எனபறைஅறிவித்திட

உத்திரவு இட்டான்.ஆனால்கனி நான் 

இதுவரை பாராத,சுவைத்திராத கனி 

அதில் எவரும் மாறியோ அல்லது 

மீறியோ பார்த்த சுவைத்த கனியைக் 

கொண்டு வந்து தந்தால் அவரது 

செய்கை கண்டிக்கப்படும்.அவரின் 

தேர்வு தண்டிக்கப்படும். அவரது கை 

துண்டிக்கப்படும்.இதுஅரசின்ஆணை


போட்டிக்குஉண்டானநாளும்வந்தது

அரசர் ஜெயந்தனின் வேண்டுதலை 

ஏற்று அவரவர் அவருக்கு தெரிந்த 

கனி வகைகளை எடுத்துக்கொண்டு 

மக்களும் வரிசையாய் நின்றனர்.

அரசாங்கவேலை,5லட்சம்அமெரிக்க 

நாட்டுப் பணம் என்றால் என்ன கசக்-

-குமா?ஆனால் யாருமே போட்டியில்

வென்றிட முடியவில்லை.அவர்கள் 

கொண்டுவந்த கனிகள் எல்லாமே 

அரசர் ஜெயந்தன் அறிந்தது,தெரிந்த,

சுவைத்தது. அப்போது ஒருவர் அவர் 

பெயர்காமன்பாபு.அவர்தன் கையில் 

அன்னாசிப்பழம் கொண்டு வந்து 

அரசர் ஜெயந்தனிடம் காண்பிக்க 

மன்னர் மிகக் கோபமுற்று நான் 

என்ன இந்தக் கனி அறியாதவனா?

என ஆவேசத்துடன் கூறியதுடன் 

அவனது வாயிலேயே வைத்து அந்த 

அன்னாசிப்பழத்தைதிணிக்கசொல்-

-லி உத்தரவு இட்டார்.  காமன் பாபு 

வாயில்வைத்து பழத்தை திணித்து 

திருகத்திருக வாய் கிழிந்து உதிரம் 

ஒழுகியது. ஆனால் அந்த நிலையில

கூட காமன் பாபு சிரித்துக் கொண்டு 

இருப்பது கண்டு அரசர் ஜெயந்தன் 

காமன்பாபுவிடம்ஏன்சிரிப்பு? உனக்கு

வலிக்கவில்லையா? என கேட்க 

அதற்கு காமன் பாபு இல்லை அரசரே  

எனக்குபின்னால் எனது சகலபாடி

சாய்சங்கர் கையில் பலாப்பழம் 

வைத்துள்ளார் !! அவரது நிலையை 

எண்ணிப்பார்த்து சிரிக்கிறேன் என்று 

காமன் பாபு சொன்ன சிரிப்பு மழை 

எப்படி இருக்கு?அன்பர்களே !!        


சிரித்து வாழ வேண்டும் !! பிறர் 

சிரிக்க வாழ்ந்திடாதே !! உழைத்து 

வாழ வேண்டும் !! பிறர் உழைப்பில் 

வாழ்ந்திடாதே !!


மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.

நன்றி.வணக்கம்.அன்புடன்.மதுரை 

T.R.பாலு.








     

No comments:

Post a Comment