தமிழர்களாக இருங்கள் !!
தமிழர்களிடமாவது
தமிழிலேயே பேசுங்கள் !!
கலைவாணரின் நகைச்சுவைத் துளிகள் !!
அன்புள்ள உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! இன்றைய தினம்
உங்கள் சிந்தனைக்கு நான் தரும் விருந்துதான்
"கலைவாணரின் நகைச்சுவைத் துளிகள்" என்னும்
ஒரு காலத்தால் அழிந்திடாத நினைவுப் புத்தகத்தின்
ஒருசிலபக்கங்களைநேயர்களின்அன்புப் பார்வை--
-க்கு அளிப்பதில்நான்மிகவும்பெருமைஅடைகிறேன்
பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் என
எத்தனை எத்தனையோ நபர்கள் இருந்துள்ளார்கள்
என்றாலும் கலைவாணரது நகைச்சுவை என்பது
மலையில் இருந்து ஊற்றெடுத்து வரும் அருவி
நீரின் சுவைபோன்றது. ஆம் நேயர்களே இதோ
நீங்களேபடித்துபாருங்கள்.அன்னாரதுநகைச்சுவைத்
துளிகளின் சிறப்புகளை :-
ஒரு சமயம் கலைவாணர் வெளியில் சென்றுவிட்டு
வீடு திரும்பும்போது அவரது மனைவி மதுரம்
அம்மையார் அவர்கள் ஒரு கிணற்றின் பக்கமாக
அமர்ந்து கொண்டு கலைவாணரைப் பார்த்து
கேட்பார். ஏனுங்க ! தோஷம் அப்படின்னா என்னங்க
சந்தோசம்என்றால்என்னாங்கஎன்றுகேள்விகணை
தொடுப்பார். உடனே அவர் மனைவி மதுரம் அவர்க-
ளிடம்சொல்வார்.யம்மா ! நல்லகேள்விதான் கேக்க.
சொல்லுதேன் நல்ல கேட்டுக்க. ஒருதரம் தான் நான்
சொல்லுவேன். அப்பறமா ஓயாம கேக்கப்படாது
.ஆமா நான் சொல்லிபுட்டேன். நல்லா கேட்டுக்க
புள்ள! உம் ! அதை எப்படி உண்ட்டேயே சொல்றது?
சரி பரவால்ல !! அதாவது நீயா கிணத்துலே விழுந்து
விட்டாய் எனவச்சுக்க ! உம்! அது சந்தோசம் !! என்ன
அப்புறம் நான் உன்னை பிடிச்சு கிணத்துலே தள்ளி
விட்டேன்னு வச்சுக்க. உம் அது எனக்கு தோஷம்.
உம் ! எப்படி உனக்கு சவுரியம்.......
அப்படீன்னு ரொம்ப சர்வ சாதரணமா கேப்பார்
பாருங்க திரை அரங்கம் முழுவதும் ஒரே
சிரிப்புஅலை தான். அப்படி ஒரு இயற்கையான
சிரிப்பு உணர்வுங்க.இப்பவும் படங்களில் " ஆயி"
போறதுபத்தி நடிகர்சந்தானம் பேசுறார். இதெல்லாம்
காமெடி. ஆண்டவன்தான் எங்களைப்போல
பெருசுகளை எல்லாம் காப்பாத்தணும் அய்யா !!
முருக அய்யா !!
அப்புறம் "மதுரை வீரன்" என்ற பெயரில் ஒரு படம்.
கவியரசர் கண்ணதாசன் கதை,திரைகதை,வசனம்.
இந்தப் படத்தில்கலைவாணர்அவர்கள்என்னவேடம்
என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியர் வேடம்.
புரட்சி நடிகர் M.G.R. கலைவாணரது வளர்ப்பு மகன்
வேடம்தனில் நடித்திருப்பார். அப்போது நடிகை
பானுமதி அந்நாட்டு அரசியாக "பொம்மி" என்ற
கதா பாத்திரத்தில் கச்சிதமாக நடித்துஇருப்பார்.
மக்கள் திலகம் மேல் காதல் வலையில் வீழ்ந்த
பொம்மி நள்ளிரவில் வீரனைத்தேடி (MGR) சேரிக்கு
வரும்போது மதுரம்அம்மையாரைபார்த்துபானுமதி
"அத்தை" நான்போயிட்டுவர்றேன்என்றுசொல்வது
போல ஒரு வசனம் வரும். உடனே கலைவாணர்
TA.மதுரத்தை பார்த்து அத்தை நீ "செத்தை" என்று
முகத்தை மிகவும் இறுக்கமாகவைத்துகொண்டு
சொல்லும்போது திரை அரங்கம்தனில் சிரித்திடாத
இரசிகர்களே இல்லை என்று சொல்லலாம் . அந்த
அளவு ஒரு பண்பாடான நாகரீகமான சிரிப்பும் அதை
சொல்லிடும் வசனமும் அந்தக் கால படங்களில்
இருந்தது அன்பர்களே.
அதுபோல மற்றும் ஒரு திரைப்படம் "முதல் தேதி"
அதில் கலைவாணர் சொந்தக்குரலில் அவரே எழுதி
பாடிய மிகவும்பிரசித்தி பெற்ற பாடல் இதோ:-
சம்பளத் தேதி ஒன்னில இருந்து இருபது வரையில்
கொண்டாட்டம் !
இருபத்தி ஒண்ணுலஇருந்து முப்பது வரையில்
திண்டாட்டம் !!
தென்பழனி,திருப்பதிக்கும்,ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லறையை போட்டுவைப்பார் தேதி ஒண்ணிலே!
அன்புடனே சேர்த்துவைத்த உண்டியல் வாயைக்
கொஞ்சம் அகலமாக்கி ஆட்டிப்பார்பார் இருபத்தி
ஒன்னிலே !!ஆமா அகலமாக்கி ஆட்டிபார்பார்
இருபத்தி ஒன்னிலே !!
சினிமா டிராமா டிக்கெட் கிடைக்காது தேதி அந்த
ஒண்ணிலே ! தியேட்டர் காலி ஆள் இருக்காது
தேதி இருபத்துஓன்னிலே !!
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பார் ஒண்ணிலே ! தேதி
ஒண்ணிலே!! பின்னர் மூணாம் பேஸ்த்தில்
வீழ்ந்தது போல முகம் கோனிடும் இருபத்தி
ஒண்ணிலே ! தெருவில் எறிந்த துண்டுபீடிக்கு
கிராக்கி அதிகம் இருபத்தி ஒன்னுலே !!
இந்தப் பாடலில் இந்த வரிகளை கேட்டவுடன்
மொத்த அரங்கமும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
கைகொட்டி அப்படி ஒரு சிரிப்பு அன்பர்களே. அந்தக்
கால பெருசுகளிடம் இருந்து அப்பப்பா. இனிமேல்
அது போன்ற ஒரு ஒட்டுமொத்த சிரிப்பு அலைகள்
எங்கே பார்ப்பது ? இறைவன்தான் அருள்புரிய
வேண்டும். இன்னும் கலைவாணர் நினைவு
அலைகள் இந்த யுகம் முடியும் வரை நாம்
பேசிக்கொண்டே இருக்கலாம். இருந்தாலும் அடுத்த
கட்டுரை வெளியீடு உள்ளது அதனால் பொறுமை
காத்து படித்திட்ட அனைத்து அன்பு நிறைந்த தமிழ்
உள்ளங்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்து
இந்த அளவில் உங்கள் அனைவரிடமும் நன்றி
பாராட்டி விடை பெறுகிறேன். மீண்டும்சந்திப்போம்.
வணக்கம். அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment