உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிருக்கும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
பெருந்தலைவர் காமராஜ் இந்தத்
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக
பதவி ஏற்று முதன்முதலாக தனது
சொந்தத் தொகுதியான விருதுநகர்
வருகிறார். சென்னை to மதுரை
இரயில் பயணம்தான் அதுவும்
2nd A/C தான். (என்னே ஒரு எளிமை
ஒவ்வொருத்தரைப்போலத்
தனி விமானம்/ஹெலிகாப்டர்
போன்றவற்றில் பறக்கத் தெரியாத
பறக்க விரும்பாத உத்தமர்
என்றே சொல்லவேண்டும்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து
விருதுநகர் காரில் பயணம்.
இவர் காருக்கு முன்பாக போனது
பாதுகாப்பு அலுவலர் ( செக்யூரிட்டி
ஆபீசர்-SECURITY OFFICER )வாகனம்
காமராஜ் மாலை பூச்செண்டு
மரியாதைகளை ஏற்றுக்கொண்டு
அவரது காருக்குள் ஏறி அமர்ந்தார்.
ஓட்டுனர் அவரிடம் அய்யா நாம
போகலாமா அய்யா என்று கேட்டார்.
அதற்கு காமராஜ் சிரித்துக்கொண்டே
உம்..பிறவு...நாம் என்ன ..இங்கேயா
உக்காந்து இருக்கப்போறோம்னேன்.
முதல்ல அந்த முன் வண்டியை
எடுக்கச் சொல்லுன்னேன். உடனே
காமராஜ் வாகன ஓட்டுனர் வண்டி
ஒலிப்பானை(HORN)அழுத்தினார்.
வண்டிகள் இரண்டும் மெதுவாக
நகர ஆரம்பித்ததும் பாதுகாப்பு
வண்டி ஓட்டுனர் சைரனை இயக்கி
ஒலி எழுப்பச் செய்தார். இதனை
சற்றும் எதிர்பாராத பெருந்தலைவர்
யோவ்.அங்கே என்னய்யா சத்தம்
என வினவிட, ஓட்டுனர் இல்ல
ஐயா அது வந்து....உங்களுக்குப்
பாதுகாப்புக்கு வர்ற வண்டியிலே
இருந்துதான் அய்யா சத்தம் வருது
என்றார். உடனே காமராஜ் அது
எதுக்கு அந்த சத்தம்னேன் என்று
கேட்டார். இல்ல ஐயா நீங்க வந்து
தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சர்
அல்லவா. அதற்கு ஒரு அறிவிப்பும்
எல்லோரையும் எச்சரிக்கத்தான்
அய்யா இந்த ஒலிதேவைப்படுது
அதான் அவர் அதை இயக்கச்
செய்து இருக்கிறார் என்றார். இப்ப
நீ வண்டியை உடனே நிறுத்துன்னேன்
என்று சொன்ன காமராஜ் தனது
வாகன ஓட்டுனரிடம், ஏன்யா,
நான் செத்ததுக்கு அப்புறம் கேக்க
வேண்டிய ஒலியை, நான் உசுரோட
இருக்கப்பையே கேக்க வச்சுட்டீங்க.
உங்களுக்கே நல்லாயிருக்கான்னேன்.
இப்படிச் சொன்னதோடு விட்டுவிட
வில்லை அவர், அந்த பாதுகாப்பு
அலுவலரை அழைத்து, ஏன்யா
இந்த சத்தத்தை ஒலிக்கச் செஞ்சே
என்று கேட்டார். அதற்கு அலுவலர்
இல்ல ஐயா, நீங்க தமிழ்நாட்டுக்கு
முதலமைச்சர். நீங்க வருவதை
மக்களுக்கு அறிவிப்பதற்குத்தான்
இந்த ஒலி என்றவுடன், காமராஜ்
இந்தாய்யா இப்படி சத்தம்
கொடுத்துதான்
காமராஜ் வர்றான் என்று மக்களுக்குத்
தெரிவிக்க வேண்டிய அவசியம்
இல்லைன்னேன். என்ன புரியுதா?
இதுதான் முதலும் கடைசியும் இந்த
சத்தம் இனிமே நான் எங்க போனாலும்
வரக் கூடாது. நான் செத்ததுக்கு
அப்புறம் வேணா இந்த சத்தத்தை
கொடுத்துக்கங்க என்றாராம்
பெருந்தலைவர் காமராஜ். என்னே
அடக்கம். நற்பண்பு. இது எல்லாம்
இந்தக் காலத்து அரசியல்வாதிகளுக்கு
சுட்டுப் போட்டாலும் வருமா. உம...
இல்ல.. நான் கேக்றேன். இருந்த
இடத்துலே இருந்துகிட்டு காணொலி
காட்சி மூலம் வெறும் அறிவிப்புத்
திட்டங்களை வெளியிடுவதற்கு
நாட்டில் உள்ள அத்தனை தமிழ் &
ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் பல
கோடிகள்,மக்கள் வரிப் பணத்தை
செலவு செய்து மகிழ்ந்திடும் இந்தக்
கால அரசியல்வாதிகள் காமராஜ்
வாழ்க்கையைப் பார்த்து திருந்திட
வேண்டும். எங்க திருந்தப் போறாங்க.
அந்தக் காலத்தில் கவியரசர்
கண்ணதாசன் ஒரு படத்தில் பாடல்
ஒன்று இயற்றியதுதான் எனக்கு
இப்போது நினைவுக்கு வருது.
உன்னைச் சொல்லி குற்றம் இல்லை
என்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
காலம் செய்தகோலமடி இலவச
பொருட்களுக்கு ஆசைப்பட்டு விலை
மதிப்பில்லாத ஓட்டுக்களை இந்த
நாட்டு மக்கள் விற்று விட்டதனால்
வந்த நிலை இது.
அந்த ஆண்டவன்தான்
இந்த நாட்டை காப்பாற்றவேண்டும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment