உண்மையில் கவலை இல்லாதவர்கள் யார் ?
உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இறைவனால் படைக்கப்பட்ட
இந்த உலகத்திலே உண்மையில்
கவலை இல்லாதவர்கள் யார் ? இதுதான்
அன்பர்களே இன்றைய நமது
கட்டுரையின் தலைப்பு. இந்தக்
கேள்விக்கு பெரும்பான்மையோர்
சொல்லிடும் பதில் என்னவாக
இருக்கும் தெரியுமா அன்பர்களே
கடைநிலைத்தட்டுமக்கள்தான்
என்பதுவே பதிலாக இருக்கும்.
ஆனால் உண்மை அதுவல்ல.
ஏன் என்றால் ஆழாக்கு அரிசி
என்றாலும் அடுப்புக் கட்டி மூன்று
தேவைப்படும் இந்தப் பொல்லாத
உலகத்திலே அவனவன் இருக்கும்
பொருளாதார அடிப்படியில் சிறு
சிறு கவலைகள் இருந்திடதான்
செய்திடும். ஆனால் உண்மையில்
எந்தக்கவலையும் இல்லாதது அது
பறவைகள்,விலங்குகள் மற்றும்
தாவர இனங்கள் மட்டிலுமே ஏன்
என்றால் அவைகள் அனைத்திற்கும்
இந்த கீழ்க்கண்ட பிரச்சனைகள்
எதுவுமே இல்லை. அப்படி எதுவுமே
இல்லை என்றால் அங்கே கவலை
நிச்சயமாக இல்லை.
1) வீட்டு வாடகை,பால்,கரண்ட் பில்,
தயிர்,மோர்,நெய் வெண்ணை
பலசரக்கு மருந்து டாக்டர் பீஸ்,
குழந்தைகள் வளர்ப்பு, பள்ளிக்கூட
அனுமதி பெறுதல், படிப்புச் செலவு,
வண்டி வாகனம், பைனான்சியர்
மாதத் தவணை கட்டுதல்,வீடு
கட்டுதல், பொண்டாட்டிக்கு நகை,
பட்டுச்சேலை,அவளது குடும்ப
வகையறாக்களுக்கு செலவுசெய்தல்,
மாமனார்,மாமியார்,நாத்தனார் இது
போன்ற பிரச்சனைகள், காதல் அது
தோல்வியானால் சாதல், கல்யாணம்
புள்ளைப்பேறு, கோவில் காணிக்கை,
காவல்துறையில் பிரச்சனைகள்,
நீதிமன்றம் செல்லுதல் , பாஸ்போர்ட்,
வெளிநாட்டுப் பயணம், மருமகனுக்கு
வண்டி வாகனம் தரவேண்டியது,
கண்டதும் காதல்,கல்லூரிக்காதல்,
ஒருதலைக்காதல், காதல் தோல்வி,
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வர
வேண்டியது, கட்டிய வீட்டிற்கு மாதா
மாதம் .L.I.C ஹவுசிங் லோன், வங்கி
கணக்கு வழக்கு, இடம்பூமி நிலம்
வாங்குதல்,இதுபோன்ற இன்னும்
சில சில சில்லறைத்தனமான செலவு
இனங்கள் என அதுவுமே இல்லாதது
ஒரு காரணமாக இருக்கலாம்.
2) அரசியலில் ஈடுபாடு, அலுவலக
நடைமுறையில் கூட இருக்கும் பல
கருங்காலிகள் தொந்தரவு,அடியாட்கள்,
தேர்தல், ஓட்டுக்குப் பணம், இலவச
திட்டங்களை அறிமுகம் செய்தல், அதை
நடைமுறைப்படுத்துதல், அப்படித்
தரப்பட்ட இலவசங்களைப் பெற்றிட
வரிசையில் நிற்பது, மாதாமாதம்
ரேஷன் கடை சென்று பொருட்கள்
வாங்கிடுவது, இவை எல்லாவற்றிலும்
மிக மிக முக்கியமானது என்பது
டாஸ்மாக் கடை காலை பத்து
மணிக்கு முன்பாக அந்தக் கடை
திறக்காமல் இருத்தல், அதுபோலவே
இரவு பத்து மணிக்குள் அந்தக்கடை
அடைத்திடுவானே என்று மனப்பிராந்தி-
-யோடு இருப்பது, இவை எதுவுமே
கிஞ்சித்தும் தங்களுடன் இல்லாததால்
சுதந்திரம் இடறி வாழ்தல், தைரியத்துடன்
வாழாமல் \இருப்பது தினசரி காய்கறி வாங்குவது.
பணம் கையில் இல்லாமல் இருப்பது,
விற்பனைவரி ,வருமானவரி, விற்பனை
என்று ஏதும் இல்லாதது. பொண்டாட்டி,
கணவன் வயித்துக்கும் வாழ்க்கைக்கும்
எவனையுமே கெடுத்து வாழ்வது, பேருந்து
பயணம், அப்போது முந்திய இருக்கையில்
இருக்கும் அழகான பெண்ணின்முந்தானைக்குள்
கைவிடுவது, பக்கத்துவீட்டில் இருக்கும்
மனிதனின் மனைவிமீது ஆசைப்படுவது,
முடிந்தால் வசப்படுத்துவது, இல்லையேல்
கற்பை அழிப்பது, தீபாவளி,பொங்கல்,புது
வருஷம், பிறந்தநாள் என்று எதையுமே
வருஷம் தவறாமல் கொண்டாடுவது,
இதற்குப் பணம்தேடி பணம் தேடி அலைந்து
பிறகு திண்டாடுவது இது போன்ற இத்யாதி
இத்யாதி செலவினங்கள் எதுவுமே இந்த
பறவை,விலங்கு,தாவர செடி கொடி மரம்
போன்ற இனங்களுக்கு இல்லாது இருப்பதுவே.
இது போன்ற எவையுமே இல்லாமல்
நிம்மமதியோடு உண்மையில்
கவலை இல்லாமல் வாழபவர்கள் எனது
கண்ணோட்டத்தில் மரம்,செடி,கொடி
பறவைகள் இனம், விலங்கு இனங்கள்
என்றென்றும் இந்த 3 இனங்கள் மட்டுமே.
இவைகள் எவையுமே கவலைப்படுவது?
என்பது கிடையவே கிடையாது.
எல்லா ஜீவ ராசிகளையும் படைத்து
அழகு பாராட்டிமகிழ்ந்திடும் இறைவன்
இந்த மூன்று இனங்களுக்கு மட்டிலுமே
எந்த விதமான கடுமையான, மேலே
சொன்னது போன்ற நிகழ்வுகளும்
விதிகளும் இல்லாது படைத்ததால் .இந்த
மூன்று இனங்களில் செடி,கொடி,
தாவர மரங்கள் போன்றவைகள் எந்த
கவலையும் இல்லாது வாழ்கின்றன.
இந்த இனங்களின்
அன்றாடத் தேவை தண்ணீர் மட்டுமே.
ஆனால் பறவை,மிருக இனங்களுக்குத்
தேவை உண்ண உணவு,அருந்திட நீர்,
இனப்பெருக்கத்தின்போது உறவு நாடல்,
இவைகள் மட்டிலுமே.
ஆகவே உண்மையில் கவலை
இல்லாததுகள் இவைகள் மட்டிலுமே.
எனது கருத்து சரியோ, இல்லை தவறோ
யான் அறியேன் பராபரமே!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment