Thursday, 27 February 2014

எப்போதெல்லாம் ஒரு ஆணுக்கு கடுப்பு ( கோபம் ) வரும் ?







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 


என் உயிரினும் மேலான அன்புத்


தமிழ் உடன்பிறப்புகளே !!



உங்கள் அனைவருக்கும் எனது 


இதயம் கனிந்த வாழ்த்துக்களோடு 


கூடிய வணக்கங்களை உரித்தாக்கிக் 


கொள்கிறேன்.



அன்பர்களே !!


இறைவனால் படைக்கப்பட்ட  மனித 


இனங்களில் இரு பிரிவுகள் அது 


ஆண் என்றும் பெண் என்றும் உள்ளது.

\

இதில் பொறுமையின் சிகரமாகவே 


அந்தக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் 


இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று 


நிலைமை அப்படி இல்லை. ஏன் எனில் 


அந்தக்கால பெண்கள் வீட்டைப் பார்த்துக்


கொண்டு உண்மையான இல்லத்தரசிகளாக


வாழ்ந்து இருந்தனர்.  ஆனால் இன்று 


பெண்களும் (மனைவி) வேலைக்குச் 


சென்று பொருள் ஈட்டினால் மட்டுமே 


குடும்பச்செலவுகளை தாங்கிட முடியும் 


என்ற நிலைமைக்கு பெண்கள் வந்ததற்கு  


காரணம், விண்ணை முட்டிடும் அளவிற்குச் 


சென்றுவிட்ட விலைவாசி மட்டும்தான்  


என்று சமூகத்தில் சொல்லப்பட்டு 


இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள என்னைப்


போன்ற அந்தக்காலப் பெருசுகளால் 


முடியவில்லை என்பதே உண்மை.



சரி அன்பர்களே நிலைமை இப்படி மாறி


விட்ட பின்பு இந்த ஆண் இனத்தினால் 


முன்பு போல மனைவியை விரட்ட,


அவளை வேலை செய்யச்சொல்ல, 


கடிந்து கொள்ள, கோபப்பட முன்புபோல் 


இயலவில்லை. காரணம் அவளும் வேலைக்குச் 



செல்வதினால். சம்பாதித்து பணம் குடும்பச் 



செலவுகளுக்கு தருவதினால்.எனவே தனது 


உள்ளத்து உணர்ச்சிகளை இவன் அடக்கி 


வாசிக்கக்கற்றுகொண்டான் என்றால் அதற்கு 


காரணம் என்ன என்றால் இதுதான். 



காலம் இந்த ஆணுக்குத் தந்த பாடம் என்றும் 


சொல்லலாம்.





அன்பர்களே !!நாம் இப்போது கட்டுரையின் 


தலைப்பிர்குள்ளாகச் செல்வோம். இங்கே 


ஆண்மகனால் உள்ளத்தில் அடக்கி வைக்கப் 


பட்ட அந்த கோப,தாப, உணர்ச்சிகள் சில 


நேரம் அவனையும் மீறி, எரிமலை வெடித்தது 


போல பல சந்தர்ப்பங்களில் சிதறுவதையும் 


நம்மால் பார்த்திட முடிகிறது. அவைகளை 


நான் இங்கே வரிசைப்படுத்திச் சொல்லிடக் 


கடமைப்பட்டுள்ளேன்.




1)  அதிகாலையில் 5 மணிக்கு எழுப்பிடச் 


சொல்லிவிட்டு இரவு படுத்த கணவன், 


மனைவி நான் மறந்துட்டேங்க என்று 


காலை 7 மணிக்கு எழுப்பி  சொல்லும்போது  



2) சரி இன்னைக்கு என்ன டிபன் என்று கேட்டு 


சாப்பிடும் மேசை முன்பாக அமர இந்த ஆண் 


எத்தனிக்கும் வேளையில், மனைவி சாரிங்க,


நேத்தைக்கு இட்லி மாவு அரைக்க மறந்து 


போய்விட்டேங்க என்று சொல்லும்போது 


3)  அவசர அவசரமாக நகரப் பேருந்திற்குள் 


சென்ற இவன் பயணச் சீட்டிற்காக 5௦ ரூபாய் 


நோட்டை எடுத்து வண்டி நடத்துனர் வசம் 


தந்தபோது அவர், ஏன்யா சில்லறை மாத்து-


-வதற்கு என்றே பயணம் செய்ய வந்துடீங்களா 


என்று கோபத்துடன் கேட்கும்போது 



4)  அப்படி 5௦ ரூபாய்க்கு பத்து ரூபாய் டிக்கெட் 


காசுபோக மீதி கேட்கும்போது நடத்துனர் 


என்ன ? இறங்கப்போறீன்களா? நான் என்ன 


தராம இப்படியே ஓடியா போயிருவேன் 


கொஞ்சம் பொறுங்க என வெறுப்போடு 


சொல்லும்போது 



5)   வள்ளுவர் கோட்டத்தில்  இறங்க வேண்டும் 


என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 


ஓட்டுனர் அடுத்த நிறுத்தத்தில் வண்டியை 


நிறுத்தும்போது 


6)  அலுவலகத்திற்குள் செல்ல எத்தனிக்கும் 


போது போன மாசமே மேலாளரிடம் வாங்கிய 


கைமாத்து பணத்தை கேட்டு அவர் வழியை 


மறைத்து கடனைக் கேட்கும்போது 



7)  பசி தாங்கிட முடியாமல் ஆபீஸ் கேண்டீனில் 


வடை காபி சாப்பிடும்போது வடையில் உப்பு 


இல்லாமலும், காபியில் சக்கரை இல்லாமலும் 


அவன் தரும்போது அதனை ஒரு வாய் சாப்பிட்டு 


காபி குடிக்கும்போது 



8)  அலுவலக வேலையில் நாம் செய்த தவறை 


மேலதிகாரி எப்பப்பார்த்தாலும் சுட்டிக் காட்டும் 


போது நமக்கு வருவது 



9)  மாதக் கடைசி,மதியஉணவுஇடைவேளையின் 

போது மனைவி போனில் கூப்பிட்டு, ஏங்க..


நாளைக்கு வடிக்க அரிசி இல்லங்க..மறக்காமல் 


வாங்கிட்டு வந்துருங்கோ என்று 



சொல்லும்போது 




1௦)  அலுவலகம் முடிந்து அரிசி வாங்க பக்கத்து 


சீட் கிளார்க்கிட்டே ஒரு நூறு ரூபாய் கைமாத்து 


கேட்டபோது ஐம்பது தான் இருக்குது வேணுமா 


இல்ல வேணாமா என கேட்கும்போது 



11)  டாஸ்மாக் கடைக்குச் செல்லும்போது 



நாம் கேட்கும் சிக்னேச்சர் விஸ்கி இல்லை 



R.C.தான் இருக்குது அதுவும் ஹாப் இல்லை 


வேணா ரெண்டு குவார்ட்டர் தரவா என கடை 



விற்பனையாளர் கேட்கும்போது 



12)   வீட்டிற்கு வந்து குளித்து முடித்து சாமி 


கும்பிட்டபின் சேரில் அமர்ந்து கிளாசில் ஒரு 


கட்டிங் ஊற்றி சொடவைக் காணமல் எங்கே 


என மனைவியிடம் கேட்கும்போது அவ அம்மா 



செரிமானம் ஆகாம நெஞ்சுகறிச்சல் எடுத்ததால் 


கொடுத்துவிட்டதாக பொண்டாட்டி கையைப் 


பிசைஞ்சுகொண்டே சொல்லும்போது  



13)   அதன் பின்னர் விஸ்கி கிளாசைக் கையில் 


எடுத்து உதட்டின் அருகே கொண்டுசென்று 


அதை உறிஞ்சிக்குடிக்க முற்படும்போது 


மனைவியின் சித்தப்பா குடும்பத்துடன் வந்து 


வீட்டுக்கதவைத் தட்டிடும்போது 


14)  அலுவலக வேலை நிமித்தமாக 15 நாட்கள் 


வெளியூர் சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் 


வீட்டிற்கு வந்து பார்த்தால், அங்கே தனது 


மனைவியின் மாமா குடும்பத்தோடு அங்கே 


பிரசன்னமாகி இருப்பதும் மனைவி ப்ளீஸ் 


கோவிச்சுக்காதீங்க என்று கெஞ்சும்போது 



15) ஒரு வழியாக பத்துநாட்கள் தங்கியிருந்த 


பின்பு கும்பகோணம் தனது ஊருக்கு கிளம்ப 


 நடுநிசியில் மனைவியை எழுப்பி கட்டிலில் 


அமரவைத்த வேளையில் கடைக்குட்டி 


பையன் அம்மா வவுத்த வலிக்குது என்று 


சொல்லி அழுதிட, அவனை டாக்டர்கிட்டே 


காண்பிச்சுட்டு வீடு திரும்பி பாத்தால் அங்கே 


மனைவி ஆழ்ந்த நித்திரையில் இருந்ததை 


பார்க்கும்போது கணவனுக்கு சட் என்று 


வருவது.



16)  இதன்பின்பு ஒருவாரம் கழித்து நடுநிசி 


மனைவியோடு இணைந்திட கணவன் எண்ணி 


மனைவியோடு உறவுகொள்ள ஆரம்பிக்கும் 


வேளையில்  அவளது உள்பாவாடை நாடா 


கடுமுடிச்சு விழுந்தபோது (மனைவிக்கு இடை 


என்று ஒன்று இருப்பவர்களுக்கு மட்டும்) 



அன்பர்களே !! இதுபோல ஒரு ஆண்மகன் 


வாழ்க்கையில் இன்னும் கடுப்பாகும் சூழல் 


விஷயங்கள் எவ்வ்வளவோ உள்ளது.அதை 


எல்லாம் எழுதிட நினைத்தால் அதற்கு என் 


முழுஆயுட்காலமும் போதவே போதாது. 



அதனால் நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் .


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment