Wednesday, 12 February 2014

நமது இந்தியத் திருநாட்டின் சீரழிவிற்கு மூல காரணம் யார் ? அதன் காரணம் என்ன ? தெரியுமா உங்களுக்கு ? எல்லாம் நம்பிக்கைத் துரோகம்தான் !!







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!




உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்



என் உயிரினும் மேலான அன்புத்



தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் 



அனைவருக்கும் என் வணக்கம்.




இன்றையதினம் நான் தனிமையில் 



இருக்கும்போதுஎண்ணிப்பார்த்தேன் 



ஏன் நமது நாட்டிற்கு இந்த அளவுக்கு 



சோதனைக்குமேல்சோதனையாவே 



எல்லாம் அமைகிறது. இதற்கு யார் 



மூலகாரணம்அடிப்படையாக என்ன 



காரணம் என்று யோசித்தேன்.



அப்போதுதான் எனது கேள்விக்கு 



விடை கிடைத்தது.




அந்த சம்பவம் நடந்து இன்றைக்கு 



ஏறத்தாழ 44 ஆண்டுகட்கும் மேலாக 



ஆகிவிட்டது.அப்போதுஎனக்குவயது 



சுமார்16இருக்கும்என நினைக்கிறன்.



அப்போதைய பிரதம மந்திரியாக  



இருந்த  அன்னை  இந்திராகாந்தி



அவர்கள்தான் நம் இந்திய நாட்டின் 



இவ்வளவுசீரழிவிற்கும்மூலகாரண



மாக இருந்ததை இப்போது நான் 



அன்புத்தமிழ் நெஞ்சங்களிடம் 



நான் பகிர்ந்து கொள்கிறேன்.





இந்திய நாட்டிற்கு விடுதலை தர 



ஆங்கிலேயர்கள் முடிவெடுத்து



அதை மகாத்மாவிடமும் பண்டித 



ஜவஹர்லால் நேருவிடமும் 



எப்படிச் சொன்னார்கள் என்றால் 



உங்கள் நாட்டிற்கு விடுதலை தர 



நாங்கள்தயார்.ஆனால்அதற்குமுன்



முதலில் உங்களது நாட்டில் உள்ள 



அனைத்து சமஸ்தானங்களையும் 



நீங்கள் ஒன்றிணைத்துக்காட்டிட 



வேண்டியது மிகவும் அவசியம்.



அப்படி நீங்கள் காட்டிய அடுத்த 



நொடியே உங்கள் நாட்டிற்கு 



நாங்கள் விடுதலை அளிக்கத் 



தயாராக இருக்கிறோம் என்று



சொன்னவுடன், இந்த சமஸ்தான 



இணைப்புகள் சம்பந்தப்பட்ட 



பொறுப்புகளை இரும்பு மனிதர் 



என்று அழைக்கப்பட்ட சர்தார் 




வல்லபாய்படேலிடம்பொறுப்புகளை 



ஒப்படைத்தனர் நேருவும் காந்தியும்.



அவரும் அனைத்து சமஸ்தான 



மன்னர்களிடமும் சாமர்த்தியமாகப் 



பேசி சமாதானமாக இணைப்பிற்கு 



ஏற்பாடு செய்தார். இது எப்படி 



சாத்தியம் ஆனது என்றால் அந்தந்த 



சமஸ்தானமன்னர்களுக்குவாழ்நாள் 



மானியம் அதன் பின்னர் அவர்களின் 



பின் வாரிசுகளுக்கும் மானியம் 



அவர்கள் விரும்பும்வரை 



தருகிறோம் என்று ஒரு ஒப்பந்தம் 



செய்யப்பட்டு, இந்தியத்திருநாட்டின் 



சார்பாக படேலும், அந்தந்த 



சமஸ்தானங்களின்   சார்பாக அந்த 



சம்பந்தப்பட்டமன்னர்களும்ஒருசேர 



சம்மதித்துசாசனம்எழுதிஅனைவர் 



கையொப்பம் செய்தும் சத்தியப்



பிரமாணபத்திரம்எழுதி அதில் 



உறுதிசெய்ததால் அந்த அனைத்து 



சமஸ்தானங்களையும் 




இணைத்தல் என்பது சாத்தியமானது.





ஆனால் அதன்பின் நடந்தது என்ன ?




என்பதனை இந்த நாடே அறியும்.



197௦ம் ஆண்டில் அன்றைய பாரதப் 



பிரதமராக இருந்த உண்மையான 



புரட்சித் தலைவி அன்னை 



இந்திராகாந்தி அம்மையார் என்ன 



செய்தார் தெரியுமா அன்பர்களே ?



தனியாரிடம் இருந்த அனைத்து



வங்கிகளையும் தேசிய உடைமை 



ஆக்கினார். இத்தோடு விட்டாரா?



இல்லையே. சத்தியத்தை மறந்து 



(இவரது தந்தை,தேசப்பிதா, மேலும் 



சர்தார்படேல்இவர்செய்துகொண்ட 



பிரமாண பத்திரத்தில் எழுதிய 



ஒப்பந்தத்தை மீறி, அனைத்து 



சமஸ்தான மன்னர்களுக்கும் 



அவர்களது வாரிசுகளுக்கும் 



அவர்கள் விரும்பியவரை(அதுவரை 



மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 



மன்னர் மானியத்தை ஒழித்துக்கட்ட 



முடிவுசெய்தார். இதற்கான அவசரச் 



சட்டம் இயற்றி அதற்குபாராளுமன்ற



ஒப்புதலும் பெற்று இந்திய நாட்டு 



அரசியல் அமைப்புச் சட்டத்தில்அந்த 



சரத்தை இணைத்து 



நடைமுறைப்படுத்தினார் அவர்.)





இந்த ஒரு நம்பிக்கைத் துரோகம் 



செய்த வேலையை பாருங்கள்.



முதலில் அன்னை இந்திராகாந்தி



அம்மையார் தமது மெய்க் 



காவலர்களால் எந்திரத் துப்பாக்கி 



மூலம் சுடப்பட்டு படுகொலைக்கு 



ஆளாகினார். இவரது இரண்டு புத்திர 



பாக்கியங்களான சஞ்சய் காந்தி புது 



தில்லியில் ஹெலிகாப்டர் விபத்தில் 



நெருப்புக்கு மரணம். இது மட்டுமா ? 



இல்லையே !! இவரது இளைய மகன் 



ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் 



பொது சென்னைக்கு மிக அருகில் 



உள்ள ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட 



மைதானத்தில் மனித வெடிகுண்டு 



மூலம் அகால மரணம் அடைந்தார். 



இந்த நம்பிக்கை துரோகம் தந்த 



பலன்களைப் பார்த்தீர்களா ? எனது 



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! இதில் 



இருந்து நாம் கற்றுக்கொள்ள 



வேண்டிய பாடம் என்ன என்றால் 



நாம் நமது வாழ்நாளில் நமக்குத் 



தெரிந்து யாருக்கும் எவருக்கும்இந்த 



நம்பிக்கைத் துரோகம் என்பதனைச் 



செய்திடவே கூடாது என்பதுதான். 



இந்த இறைவனால்தந்த தண்டனை 



அன்னை இந்திராகாந்திக்குஇன்னும் 



சற்று சீக்கிரமே கிடைத்து இருக்க 



வேண்டும். அப்படி நடக்காததற்கு 



காரணமே அவர் விடுதலைப் 



புலிகளுக்கு தனது மனதார 



அனைத்து பொருள், ஆயுதஉதவிகள் 



பல செய்ததினால் அவருக்கு இந்த 



தண்டனை வர 13 ஆண்டுகள் 



காலதாமதம் ஆயிற்று.



அந்தக்காலத்தில் தேவர் பிலிம்ஸ் 



புரட்சி நடிகர் M.G.R.ஐ நடிக்க வைத்து 



எடுக்கப்பட்ட படம்தான் "விவசாயி ".



இந்தப்படத்தில் கவிஞர் A.மருதகாசி 



இயற்றி வெளியான பாடல் இது :-




கடவுள் என்னும் முதலாளி !!

கண்டெடுத்த தொழிலாளி !!-

விவசாயி !!

என்ன வளம் இல்லை இந்தத் 

திருநாட்டில் !!

ஏன் கையை ஏந்த வேண்டும் 

வெளிநாட்டில் !!

ஒழுங்காய் பாடுபடு 

வயல்காட்டில் !!

உயரும் உன் மதிப்பு 

அயல்நாட்டில் !!




என்று மிக அருமையாக எழுதினார், 



அன்று கவிஞர் A.மருதகாசி.



ஆகநம்இந்தியநாட்டின்சீரழிவிற்குக் 



காரணம்,நம்பிக்கைத்துரோகம்தான்.



அந்த அத்தனை சமஸ்தானத்தின் 



மன்னர்களுக்கும் தந்துகொண்டு 



இருந்த ராஜமானியத்தை தராமல் 



அவர்களை ஏமாற்றி அவர்களது 



நெற்றியில் இந்திரா காந்தி பட்டை 



நாமம் போட்டதுதான்ஒரே காரணம்.



இன்னும் எத்தனை நூற்று 



ஆண்டுகள் கடந்தாலும் 



சென்றாலும்இந்தியாஇப்படியேதான் 



சீரழிந்துகொண்டு இருக்கும். இதில் 



கடுகின் முனை அளவுகூட எனக்கு 



சந்தேகம் என்பது இல்லவேஇல்லை.






நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R.பாலு.

1 comment:

  1. The Casino at Harrah's Reno - Mapyro
    The 전라북도 출장안마 Casino at Harrah's Reno 과천 출장안마 has 경기도 출장샵 a location in the downtown area that's on the map and 전라남도 출장마사지 easy to see and recommend for travelers 신규 바카라 사이트 visiting the Reno-

    ReplyDelete