ஆண்கள் மனசே அப்படித்தான் !! அது அடிக்கடி மாறும் இப்படித்தான் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தாய்தாய்மொழியைப்பழித்தவனை
தாய் தடுத்தாலும் விடமாட்டேன்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அன்புள்ள ஆண்குலத்தின் அருமை
சிங்கங்களே !! சிறுத்தைகளே !! சிறு
சிறுநரிகளே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக தமிழில் ஒரு
சொல்வழக்கு ஒன்று உண்டு அது
என்ன என்றால் :-
கிளிபோல பெண்டாட்டி
இருந்தாலும் குரங்கு போல
வைப்பாட்டி வைத்துக்கொள்ளுமாம்
இந்த கேடு கெட்டஆண்கள் இனம்.
என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
ஆனால் ஒன்று, இந்தப் பழமொழி
எப்போது உருவானது/கண்டுபிடிக்கப்
பட்டது என்று பார்த்தோமேயானால்
அது ஆண்கள் என்று ஒரு இனம்
இந்த மண்ணில் என்று
தோன்றியதோ அன்றே இதுவும்
தோற்றுவிக்கப் பட்டது. இதுதான்
ஆண்களின் பிறவிக்குணம். நம்மில்
எத்தனைபேர் அவரவர்கள்
மனைவியுடன் வெளியில் வரும்
போது பிற பெண்களைப் பார்க்காத
இராமபிரான்களாக இருக்கிறார்கள்
சொல்லுங்கள் பார்ப்போம் !!
இங்கிருப்போர் அத்தனை பேர்களும்
கெட்ட இராவணன்களே!! (நான்
இங்கே ஏன்? எதற்காக ? கெட்ட
இராவணன்கள் என குறிப்பிட்டேன்
என்றால் புராணகால இராவணன்
சீதையின் அனுமதிக்காக காத்துக்
கிடந்தவன். ஆனால் இங்குஇருக்கும்
இராவணன்கள் எல்லாம்
எவர் அனுமதிக்கும் காத்து இருப்பது
எல்லாம் கிடையவே கிடையாது.
ஆகவேதான் கெட்ட இராவணன்கள்
என்றே இங்கே குறிப்பிட்டுள்ளேன்)
சரி இது ஆண்களின் நிலைமை.
அடுத்து பெண்களின் நிலையைப்
பாப்போம். ஒரு ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் இருந்த
தாய்க்குலம் தத்தமது கணவர்களை
பெயர் சொல்லி அழைப்பதைக்கூட
பாவமான செயலாகவே கருதி
வாழ்ந்திருந்தார்கள். ஆனால்
தற்போது நிலைமை அப்படியா
உள்ளது ? பெயரைச் சொல்வதுடன்
கூடவே ஒரு " டே " பட்டம் வேறு
அவர்கள் வழங்கியே கூப்பிடுவது
அவர்களது வழக்கமாகவே ஆகி
விட்டது அன்பர்களே. டேய் ராம்,
டேய் பாலாஜி, டேய் வேல் இப்படி
எல்லாம் அழைப்பதுதான் இங்கே
வாடிக்கையாக ஆகி விட்டது. இந்த
பழக்கம் இந்தக்கால யுவதிகள்
கிட்டத்தட்ட அனைவருமே இப்படி
தத்தமது கணவர்களை கூப்பிட்டே
பழகிவிட்டார்கள். ஆயிரத்தில்
ஒருவர் அல்லது இருவர் வேண்டும்
என்றால் என்னங்க, போங்க,வாங்க
என்ற அந்தப் பாரம்பரிய மரியாதை
உணர்வுகளை தங்களது வாய்
வழங்கு சொல்லாக
பயன்படுத்தலாம் அறையில் .
ஆனால் இப்படி மனைவிமார்கள்
அமைவது அந்த இறைவன்
கொடுத்த வரம். என்னைப்பொறுத்த
வரையில் எனக்கு திருமணம் நடந்த
(1975ம் ஆண்டு) ஒரு ஆண்டு வரை
என் மனைவிகாலையில்
தன்னுடைய படுக்கையை விட்டு
எழுந்தவுடன் எனது கால்களை
தொட்டு வணங்கிவிட்டு
அதன்பிறகே பல்தேய்க்க அவள்
கிளம்புகின்ற காட்சிகளை நான்
தூங்குவதுபோல நடித்து (என்ன ?
அப்பவே அப்பாவியாக பாலு சார்
நீங்க நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா ?)-
ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து
நாட்களும் எனது வாழ்ந்து முடித்த
நாட்களில் அடங்கும் அன்பர்களே !!
மொத்தத்தில் ஆண்கள் அளவுக்கு
பெண்கள் பிற ஆண்களை பார்ப்பது
இல்லை. இன்னமும் சமுதாயத்தில்
உள்ள நூறு பெண்களில் இருபது
பெண்கள் கணவனைமதித்துத்தான்
இன்றளவும் நடந்து வருகிறார்கள்.
அதுதான் கணவர்கள் அவரவர்
செய்த பூர்வ புண்ணியம் என்பது.
இதைத்தான் 1976ம் ஆண்டு
வெளிவந்த " மன்மத லீலை "
படத்தில் வரும் ஒரு பாடலில்
கவியரசர் குறிப்பிட்டு இருப்பார்.
பாடல் இதோ:-
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் !!
மனது மயங்கி என்ன உனக்கும்
வாழ்வு வரும் !!
என அந்த பாடலில் வரும் வரிகள்
ஆண்கள் இனத்திற்கு
கொடுக்கப்பட்ட சாட்டை அடி !!
கட்டுரை இத்துடன் முடிவடைகிறது
அன்பர்களே !!
ஆண்கள் மனமே அப்படித்தான் அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் என்ற
பாடல் யதார்த்தங்கள் நிறைந்தது.
மீண்டும் அடுத்த கட்டுரையில் நாம்
அனைவரும் சந்தித்து
மகிழ்ந்திடுவோம்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment