அஷ்டாவதானி, தசாவதானி என்றால் அதன் உட்பொருள் உங்களுக்குத் தெரியுமா ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுதும் வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே!! உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த வணக்கம்.
அன்பர்களே !!
நாம் அனைவரும் இன்றையதினம்
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டு
இருக்கும் போது அஷ்டாவதானி,
தசாவதானி, என்றெல்லாம் பேசப்
படுவதை நாம் நமது காதாரக் கேட்டுக்கொண்டு
இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை
பேர்களுக்கு அதன் உட்பொருள் தெரிந்து
இருக்கிறது என்றால் அதுதான் இல்லை.
இல்லை. இல்லவே. இல்லை.அன்பர்களே !!
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சமஸ்க்ருதத்தில், அஷ்டம் என்றால்
அதற்கு அர்த்தம் எட்டு என்று பொருள்.
அதுபோலவே தசம் என்று சொன்னால்
அதன் பொருள் பத்து என்பதே ஆகும்.
ஆன்றோர்களும் அறிவிற்சிறந்த நல்
சான்றோர்களும் நிறைந்திருக்கும் ஓர்
சபைதனிலே, ஒருவரை இவர் எந்த
அளவிற்கு நினைவு ஆற்றல் கொண்டவர்
என்ற பரீட்சை நடத்துகின்ற பொழுது
அவரை நடுவில் நிற்கவைத்துக்கொண்டு
எட்டு திக்குகளிலும் இருந்து அவரிடம்
கேட்கப்படும் கேள்விகளை ஒவ்வொன்றாக
கேட்டு தாம் நினைவினில் வைத்து அதன்பின்
அவைகளுக்கு வரிசைக்கிரமமாக யார்
மிகமிகத் தெளிவாக பதில்தந்து அந்த
பதிலும் அவையோர் பெருமக்களால்
ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த
மிகச் சரியாக பதில் தந்து பரீட்சையில்
எவர் ஒருவர் தேர்ச்சி பெறுகின்றாரோ
அவரே " அஷ்டாவதானி " என்னும் நல்லதோர்
பட்டத்தை வென்றவர் ஆகின்றார்.
இதேபோலத்தான் தசாவதானியும்.
ஒருவரை நடுநாயகமாக நிற்கவைத்து
அன்னாரைச் சுற்றிலும் பத்து பேர்கள்
அவர்கள் அறிஞர் பெருமக்கள், சம்பந்தப்பட்ட
நபரிடம் அந்த பத்துப்பேரும் கேட்கின்ற
கேள்விகளை மனமதில் நன்றாக பதியம்
செய்து வைத்துக்கொண்டு வரிசைக்கிரமாமாக
எவர் ஒருவர் மிகச் சரியாக, பிழைகள்
ஏதுமின்றி பதில் தருகிறாரோ, அந்தப்
பதிலும் ஆன்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்
பட்ஷத்தில் சம்பந்தப்பட்ட பதில் சொன்ன
அந்த நபரே " தசாவதானி " என்று அழைக்கப்-
-படுகின்றார்.
அன்பர்களே இந்த விபரம் எனது 12ம் வயதில்
நான் எட்டாவது வகுப்பு பயிலும்பொழுது எனது
சரித்திர மற்றும் பூகோள வகுப்பின் ஆசிரியர்
மென்மை தங்கிய கானாடுகாத்தான் முதுகலை
பட்டம் வென்றவர் திரு மெய்யப்பன் அவர்கள்
கூறிய கருத்து இது.
இன்னும் இதுபோல பல்வேறு அறிவுபூர்வம்
நிறைந்த கருத்துக்கள், அன்பர்களே !! நமது
"எண்ணத்தில் தோன்றியவை " எனும் இந்த
வலைதலத்தினில் வெளிவரக் காத்துக்கொண்டு
இருக்கிறது. படித்து உங்களின் பொதுஅறிவினை
நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள
வேணுமாய் வேண்டிவிரும்பிக்
கேட்டுக்கொண்டு
விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment