Wednesday, 12 February 2014
திருமணம் என்பது சொர்கத்தின் திறப்புவிழாவா அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு நாமே போட்டுக்கொள்ளும் கை விலங்கா ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
என் உயிரினும் மேலான அன்புத்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆட்டோவில் நேற்று நான் ஒரு
விளம்பரம் ஒன்றினை படித்தேன்
அது என்னவென்றால்:-
பெண்களுக்குத் திருமண வயது 21.
என அதில்பதித்துஇருந்ததைக்கண்டு
நான்யோசித்தேன்.என்எண்ணத்தை
வானமதில் சிறகடித்துப் பறக்க
வைத்தேன். அதில் உதயம் ஆகிய
நல்ல பல கருத்துக்களை நான்
நேயர்கள் உங்களுடன்இப்போது
பகிர்ந்து கொள்கிறேன்.
21 என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
என்றால் அப்போதுதான் அவளது
கர்பப்பை வர இருக்கும் சிசுவினை
தாங்கிடும் வலுமிக்கதாக இருக்கும்
அதுமட்டும் அல்ல அன்பர்களே
அவளது இடுப்பு எலும்பு மற்றும்
முத்துத் தசைப்பகுதிகள் எதிர்காலத்-
-தில் அவளது வயிற்றினில் வளரும்
குழந்தையை சுமந்திட பலம்
உள்ளதாகவும் இருக்கும் என்பதால்
தான் 21 வயதுக்கு மேல் பெண்ணின்
திருமண வயது என்று மருத்துவ
வல்லுனர்கள் அங்கே நிர்ணயம்
செய்து உள்ளனர்.
கட்டுரையின் தலைப்புசம்பந்தப்பட்ட
பகுதிக்குள்ளாகச் செல்வோமா ?
நேயர்களே !!
என்ன சொல்லியிருக்கிறார் இந்தத்
திருமணத்தைப் பற்றி என்றால்:-
திருமணம் !!
இது ஒரு வாழ்நாள் சிறைச்சாலை !!.
இதன் உள்ளே சென்று இன்பங்களை
அனுபவித்துவிடலாம் என்று அலை
மோதிடும் இளம் வாலிப உள்ளங்கள்
அந்த சிறைச்சாலைக்கு வெளியில்
காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதே சமயம் இவர்களுக்கு மத்தியில்
ஏற்கனவே உள்ளே இருக்கும் ஆயுட்
கைதிகள் அந்தத் திருமணம் என்ற
ஒரு மங்களகரமான பந்தத்தை
ஒரு கசப்பான நிகழ்வாக தாங்கள்
வாழ்வினில் தங்களுக்கு ஏற்பட்ட
அனுபவத்தினால் வாழ்ந்து
எப்போதுடா இந்தசிறைச்சாலையில்
இருந்து வெளியேறிவிடலாம் என்று
வரிசையில்சிறைசாலைக்குள்ளாக
காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
முழுவதுமாக நிராகரித்திட இயல
வில்லை என்பதனை சற்று ஆழ்ந்த
வருத்தத்தோடுஒத்துகொள்ளத்தான்
வேண்டி இருக்கிறது.
முருக பக்தர் திருமுருக கிருபானந்த
வாரியார்சுவாமிகள் சொற்பொழிவு
ஒன்றினை நான்முப்பதுஆண்டுகட்கு
முன்னால் நான் மதுரை ஸ்ரீ மீனாட்சி
அம்மன் திருக்கோவிலில் உள்ள
மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின்
தைப்பொங்கல் திருநாளில் கேட்ட
அனுபவமும் உண்டு. அவர் என்ன
சொன்னார் என்றால் ஒரு ஆண்
தவளை மற்றும் ஒரு பெண் தவளை
இவை இரண்டும் வாலிபம் என்னும்
குளிரில் நடுநடுங்கிக்கொண்டு
இருந்தசமயம்,அந்ததவளைகளின்
பெற்றோர்கள் இந்தஇரண்டுதவளை-
-களுக்கும் திருமணம் என்னும் ஒரு
நீர் நிறைந்த அண்டாவின் உள்ளே
போட்டனர். அந்த அண்டாவின் கீழ்
எரிதணல் தருவதற்கு விறகுகள்
போட்டு தீயிட்டனர். அந்த தீயின்
ஜுவாலையில் அந்த அண்டாவில்
உள்ள குளிர்ந்த நீர் லேசாக சூடாகி
வெது வெதுப்பான நீராக ஆனதால்
மிகவும் மகிழ்ந்து ஒன்றினை ஒன்று
அணைத்து அவை இன்பஉணர்வுகள்
உடலெங்கும் மின்சாரம் போல
பாய்ந்திட,என்ன சுகம்,என்ன சுகம்
என்று இளம் திருமணத்தம்பதிகள்
திருமணம் ஆன மூன்றுமாதங்களில்
இன்பத்தை சுகிப்பது போல இந்தத்
தவளைகளும் இன்பத்தில் மூழ்கி
சுகம் கண்டன. நாளாக,நாளாக,
குழந்தைகள் ஒன்றிரண்டு பிறந்து
வாழ்க்கை கசப்பது போல அந்த
அண்டாவின் நீரும் வெதுவெதுப்-
-பான சூடு மாறி தற்போது அந்த நீர்
கொதிநிலையினை அடையத்
தொடங்கின. தவளைகள் இரண்டும்
இப்போது ஐயையோ !! எங்களாலே
சூடு தாங்கிக் கொள்ள முடியலையே
எங்களைக் காப்பாற்றுங்கள் !!
எங்களைக் காப்பாற்றுங்கள் !! என
இப்போ கூக்குரல்செய்யஆரம்பித்து
விட்டனவாம். யாரால்தான் இந்தஇரு
தவளைகளையும்காப்பாற்றஇயலும்.
இதே நிலைதான் திருமணம் செய்து
கொண்ட மணமக்களின் நிலையும்.
அண்டாத்தண்ணீர் இப்போது நன்கு
தள தள என கொதிக்க ஆரம்பித்து
விட்டது. இதுதான் அந்த மணமக்கள்
வாழ்க்கையில் போராட்டம்நிறைந்த
எதிர்நீச்சல்போன்றவாழ்க்கைநிலை.
இரு தவளைகளும் இறைவன் அடி
போய் சேர்ந்துவிட்டன. இந்த
மணமக்கள் அந்தத் தவளைகள்
போல் வாழ்க்கை போராட்டம்
நடத்தியதில் எதிர்நீச்சல் செய்ய
முடியாமல் தோல்வி அடைந்ததால்
அந்த இரு தவளைகளுமேஇறுதியில்
மாண்டுவிட்டன. இதுதான்திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
சொன்னதிருமணகதைஅன்பர்களே!!
இறுதியாக நான் சொல்ல வருவது
என்ன என்றால், திருமணம் என்பது
இல்லாமல் உலகம் இயங்காது. இது
ஒன்றுதான் உலக ஜனத்தொகையை
அதிகரிக்கும் ஒரே வழி. ஆகையால்
இதனைதவிர்த்திடநம்மால்என்றும்
முடியாது. அப்படி என்றால் மனிதன்
என்னசெய்யலாம்.சுகமானசுமைகள்
என்பதேதிருமணவாழ்க்கை.இதைத்
தவிர்க்கவே முடியாது. எனவேசுமை
இருக்கும் இடத்தில்தான் சுகமும்
இருக்கும். எப்படி புயலுக்குப் பின்னே
அமைதிவருகுதோஅதுபோலத்தான்
அதனை ஏற்றுக்கொள்வோம். ஏன்
எனில்நமக்கு(ஆண்களுக்கு)இதனை
விட்டுசுகித்துவாழ்ந்திடவேறுவழி
இல்லை.சுகித்திடுவோம்.அந்த
சுமைகளையும் சுமந்திடுவோம்.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment