Wednesday, 26 February 2014

புராணங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதா அல்லது கெட்ட வழி செல்வதற்கா ?








உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 


என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!


அனைவருக்கும் வணக்கம்!!



இந்து மதத்தைப்பொறுத்தவரையில்


முக்கிய புராணங்கள் என்று நாம் 


கருதுவது இராமாயணம் மற்றும் 


மகாபாரதம் ஆகும். இந்த இரண்டு 


புராணங்களும் மக்களை நல்வழிப்


படுத்த உருவாக்கப்பட்டதா ? அல்லது 


கெட்ட வழி செல்வதற்கா ? இதுதான் 


இன்றைய 


       "எண்ணத்தில்தோன்றியவை" 


கட்டுரை வலைதளத்தின் மூலம் 


நாம் மக்கள் முன்பாக எழுப்பியுள்ள 


கேள்வி.



இராமாயணத்தைஎடுத்துக்கொண்டால் 


அது நமக்கு கூறிடும் வேதாந்தம்என்ன 


என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்று 


ஸ்ரீ இராமபிரான் வாழ்ந்தார் என்பதுஓர் 


புறம்இருந்தாலும்மாற்றான்இலங்கை 


வேந்தன் இராவணின்சிறையில்வதை 


பட்டு வந்த தன் மனையாள் சீதாதேவி 


உத்தமியே என்பது தெரிந்தாலும் கூட 


ஊரில் யாரோ எவரோ ஒருவர் 


சொன்னார் என்பதற்காக அவளை 


அந்த பத்தினித் தெய்வத்தைஊர்அறிய 


உலகறிய  தீக்குளிக்க வைத்த கேட்டை


நாம் என்ன சொல்வது !! இது கூட ஒரு 


பெரிய விஷயம் அல்ல. மாற்றான்


ஒருவன் மனைவியை வேறு ஒரு 


ஆடவன் அபகரித்துசெல்வது 


என்பது எந்த வகையில் உரிய 


செயலாகும் ? இது முறையா? இது 


தகுமா ? இது தர்மம்தானா ? நான் 


கேட்கிறேன் கேள்வி. இந்த பாலியல் 


வன்முறை இன்று உலகிலே குறிப்பாக


நம் நாட்டினில் இன்று தலைவிரித்து 


ஆடுவதற்கு மூல காரணம்/உரைமோர்


இந்த சம்பவம் என்று குறிப்பிடலாமா ?




இது போல  மகாபாரதக் கதையில் ஒரு


பெண்(திரவ்பதை)ஐந்துஆண்களுக்கு 


மனைவியாகச் செயல்படுவது என்பது 


எப்படிநடைமுறைசாத்தியம்ஆகும்?


அப்படியே இருந்தாலும் இதுதர்மமான 


செயல் ஆகுமா. நமது பண்பாடு நமது 


கலாச்சாரம் நமக்குபோதித்துஇருப்பது 


ஒருவனுக்கு ஒருத்திதான். இன்றுஒரு 


பெண்பலஆண்களுடன்உறவுகொண்டு 


அங்கொன்றும்இங்கொன்றுமாக


வாழ்ந்து 


வருகிறார்கள் என்றால் இந்தவழி :-


(அந்தக்காலத்தில் சிவாஜி,பாலாஜி 


நடித்து வெளிவந்த படம்தான் 


படித்தால் மட்டும் போதுமா என்றபடம் 


அதில் மறைந்த TMS அவர்கள் 


ஒரு பாடல் பாடிடுவார்.



அண்ணன் காட்டிய வழியம்மா இது 


அன்பால் விளைந்த பழியம்மா 



என்று ஒரு பாடல் அந்தப்படத்தில் 


இடம் பெறும். இப்போது நான் 


அந்தப்பாடலை  உல்ட்டா செய்து 


எழுதுகிறேன். இதோ :-




திரௌபதை காட்டிய வழியம்மா !!இது 


திமிரால் விளைந்த விளைவம்மா !!


பெண்மை இங்கே இல்லையம்மா இது 


ஆண்களைகெடுத்திடும்முறையம்மா!!




என்று பாட்டு பாட வேண்டியதுதான். 


அட...என்னங்க...நான்...சொல்றது...?  


சரிதானே!!..ஏனுங்க..நீங்க..பதில் 


சொல்லுங்க ?



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment