Balakrishnan TR shared your photo.
" பி ர ம் ம ன் "
(திரை விமர்சனம் )
அன்பு நேயர்களே !! நேற்று வடபழனி கமலா
திரை அரங்கத்தில் முதல் நாள் முதல்காட்சி
"பிரம்மன் " நான் சென்று பார்த்தேன். எனது
விமர்சனம்:-
இடைவேளை வரை :- படம் அருமை !!. வசனம்
செழுமை !! இசைமைப்பு இனிமை !!.
மொத்தத்தில் திரைப்படம் மிகவும் புதுமை !!
சிறப்பில் இமயத்தின் உச்சிக்கே சென்றேன்.
இடைவேளைக்கு பின்னர் :- கண்கள்
கங்கையாக ஆனது. நீண்ட நெடுநாட்களுக்குப்
பின் நல்ல, மிகமிக நல்லதொரு சினிமா பார்த்த
திருப்தி மனமதில் தோன்றியது. படத்தில்
நட்பின் ஆழத்தை மிக அருமையாக
எடுத்துக்காட்டி நடித்த எங்க ஊர்க்காரர் திரு
சசிகுமார் அவர்களுக்கும் , படத்தை எழுதி ,
இயக்கிய, இயக்குனர் எனது அன்பிற்கும்
பாசத்திற்கும் உரிய திரு சாக்ரடீஸ்
அவர்களுக்கும் இசையை சிறப்பாக அமைத்த
இசை அரசர் அவர்களுக்கும் மற்றும் படப்பிடிப்பு
குழுவினருக்கும் எனது மனமார்ந்த
பாராட்டுக்களும் வரவேற்புகளும்
உரித்தாகட்டும். அடுத்த படம் எப்போது ?
ஆவலோடு காத்திருக்கிறேன். (எனக்கு ஏதாவது
ஒரு சிறு வேடம் தர அன்பு வேண்டுகோள் திரு
சாக்ரடீஸ் அவர்கள் முன்பாக வைக்கிறேன்)
மொத்தத்தில் படத்திற்கு நூற்றுக்கு 9௦
மதிப்பெண்கள் தருகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment