Wednesday, 19 February 2014

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகளா இல்லை கமிஷன் ஏஜெண்டுகளா ?-உண்மைக்கம்யூனிஸ்ட் தொண்டர்களே சிந்திப்பீர்!! செயல்படுவீர் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுதும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !! வணக்கம்.




இன்றையதினம் தமிநாட்டில் ஒரு 


காலத்தில் நான் சொல்வது இன்றைக்கு 


6௦ ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 


உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் 


நல்ல முறையில் அப்போதைய 


தலைவர்களான E.M.S.நம்பூதிரிபாட்,


A.K.கோபாலன்,சுந்தரையா, P.இராம 


மூர்த்தி, N.சங்கரையா போன்ற 


உண்மையான பொதுஉடமைக் 


கொள்கைகளில் தங்களை அங்கே 


இரண்டறக் கலந்திடச் செய்த 


தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.


எங்கே கம்யூனிஸ்ட்டுக்கள் இந்த 


தமிழ்நாட்டில் அவர்களது சுய 


ஆதிக்கம் வளர்ந்திடுமோ என்று 


நினைத்து மூதறிஞர் இராஜாஜி, 


பெரும்தலைவர் காமராஜர் 


போன்ற தலைவர்கள் தி.மு.க. வை


வளர்த்துவிட்ட காலமும் கூட அது.






ஆனால் காலப்போக்கில் தி.மு.க.


பெரியகட்சியாக அதிலும் ஆளும் '


கட்சியாக உருவெடுத்து விட்டதை 


பொறுத்துக்கொள்ள முடியாத 


கம்யூனிஸ்ட்டுக்கள் மறைந்த 


புரட்சி நடிகர் M.G.R.ன் துணையோடு 


தி.மு.க.வை இரண்டாக உடைத்த 


பெருமை அப்போதைய வலது 


கம்யூனிஸ்ட் தலைவர் M.கல்யாண 


சுந்தரத்தையே சேரும். இது நிகழ்ந்தது 


1976ம் ஆண்டு. அன்றிலிருந்து 


இன்றுவரை இந்தக் கம்யூனிஸ்ட்


கட்சி தமிழ்நாட்டில் மாறி மாறி 


ஒன்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. 


என்று மாறி மாறி குதிரைச் சவாரி 


செய்தே (தமிழ்நாட்டின் காங்கிரஸ் 


கட்சியைப்போல ) பழக்கப்பட்டு 


விட்டது என்பதே உண்மை. ஒரே 


ஒரு இராஜ்யசபை M.P.சீட் வேண்டும் 


என்றால் போதும் திரு மு.கருணாநிதி 


அவர்களின் பாதார விந்தங்களில் 


வீழ்ந்தாவது பெற்றுக்கொள்வது 


அல்லது செல்வி. J ஜெயலலிதாவிடம் 


சரணாகதி அடைந்து விடுவது என்றே


இன்றைக்கு பிழைப்பு நடத்திக்கொண்டு 


இருக்கிறார்கள். இந்தப் பணியை 


மிகத் தெள்ளத்தெளிவாக செய்து 


வருபவர்தான் தற்போதைய வலது 


கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில


செயலாளர் திரு தா. பாண்டியன்


மட்டுமே. இதற்கு இவரைவிடவும் 


பலகாலம் மூத்த தலைவர் திரு.


நல்ல கண்ணுவிற்கு அவ்வளவு 


இஷ்டம் இல்லாவிடினும் கட்சிக் 


கட்டுப்பாட்டிற்காக எதுவும் பேசாமல் 


இருக்கிறார் என்பதே உண்மை.சரி 


வலதுகள் தான் இப்படி சொரணை 


ஏதும் இன்றி இருக்கிறார்கள் என்று 


பார்த்தால் காலில் வீழ்ந்து சரண் 


அடைவதில் நாங்கள் ஒன்றும் 


யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை 


என்ற பாணியில் இப்போது இடது


கம்யூனிஸ்ட்களும் சேர்ந்து கொண்டு 


உள்ளதைப் பார்க்கின்றபோது நமக்கு 


எல்லாம் அழுவதா இல்லை சிரிப்பதா 


என்றே தெரியவில்லை என்பதுதான் 


உண்மை அன்பர்களே. 






முதலில் நான் இங்கே இன்னமும் 


கட்சியில் இருக்கும் உண்மையான 


பொதுஉடைமைக் கொள்கையைத் 


தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு 


செயல்பட்டுவரும் தொண்டர்களை 


பார்த்து கேட்க விரும்புவதெல்லாம் 


இது ஒன்றுதான். நீங்கள் தா.பாண்டியன் 


தனது சொந்த நலனுக்காக அ.இ.அ.தி.மு.க.


என்ற ஒரு மாநிலக் கட்சியோடு தோள்


சேர்ந்து நிற்பதை அனுமதிக்கிறீர்களா 


அல்லவா என்பது தான். இதில் 


டில்லியில் இருந்து வந்து திரு.பிரகாஷ் 


காரத் அவர்கூட தனது தரத்தை 


இழந்து ஒரு இராஜ்யசபை M.P.சீட்\


வேண்டி நீங்கள் போயஸ்கார்டன் 


சென்று அம்மையாரின் பாதார 


விந்தங்களை வணங்கி வீழ்ந்த 


காட்சி இன்னமும் எங்களைப் போன்ற 


பொது உடமைக் கொள்கையை உயிர் 


மூச்சாகக் கொண்டு உள்ள தொண்டர்களின் 


கண்களில் உதிரத்தைத்தான் வழிந்திட 


வைத்துக்கொண்டு இருக்கிறது.


எப்படிப் பட்ட கட்சி இந்த கம்யூனிஸ்ட்


கட்சி என்பது. இது ஒரு உலகக் கட்சி 


என்ற நினைப்பே தலைவர்களே உங்கள் 


எண்ணத்தை விற்று,இதயத்தை விற்று ,


சிந்தனையைவிற்று  அற்றுப்போய் 


விடாதா ? கேட்கிறேன் கேள்வி ? 


உங்களது சொந்தத் தேவைகளைப் 


பூர்த்தி செய்துகொள்ள கட்சியை 


அடமானம் வைப்பதை இனியும் 


எங்களால் பொறுத்துக்கொள்ள 


இயலாது. இதே நிலை இன்னமும் 


தொடருமானால், நான் உள்ளபடியே 


சொல்கிறேன் உளமாரச் சொல்கிறேன் 


மக்கள் இனிமேல் நமது கட்சியை 


நம்மை, கம்யூனிட்டுகள் என்று 


அழைத்திட மாட்டார்கள். என்ன 


கமிஷன் ஏஜெண்டுகள் என்றுதான் 


அழைத்திடுவார்கள். இதுதான் 


நடக்கப்போகும் உண்மை. உஷார்.


உஷார்.




சிந்திப்பீர் செயல்படுவீர். நாம் 


எல்லாம் ஸ்டாலினை,லெனினை,


தலைவர்களாக மனதில் வணங்கி 


வளர்ந்தவர்கள். எந்தவிதமான 


ஊழலிலும் சிக்காத அந்த உண்மைத் 


தலைவர்களை நினைத்துவிட்டு 


பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி 


சீரழிந்து சின்னாபின்னமாக நிற்கும் 


ஒரு கட்சியின் தலைமையை 


அவரது வீட்டு வாசல்படி நாம் 


மிதிக்கலாமா ? இது ஒரு சுய 


மரியாதை உள்ள ஒரு உண்மைத் 



தொண்டனின் மனக்கொதிப்பு.



உண்மைத் தொண்டர்களே ஜாக்கிரதை.


ஏமாறாதீர்கள். தற்போதைய தலைவர்களே 


உங்களையே உண்மையாக நினைக்கும் 


தொண்டர்களை ஏமாற்றாதீர்கள்.





நன்றி !!  வணக்கம். !!





அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment