நான்தான் வம்பானந்த பேசுகிறேன் இங்கே !!--வம்பளக்க நான் தயார் !! ஆனா நீங்க ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம்.
காலஞ்சென்ற எனது அன்புத் தந்தை
அடிக்கடி ஒரு அறிவுரை ஒன்று
எனக்குக்கூறிக்கொண்டேஇருப்பார்.
அது என்னவென்றால் :-
தம்பி !! அழ அழச்சொல்வார் தமர் !!
சிரிக்கச்சிரிக்கச் சொல்வார் பிறர் !!
எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களைத்
தன்னகத்தே கொண்ட வாசகம் இது.
இது ஒரு கெட்டுப்போன, கெட்டுக்
கொண்டு இருக்கின்ற, கெட
ஆரம்பித்துள்ள ஒரு மனிதனை
திருந்துவதற்காகச் சொல்லப்பட்ட
அருமை வாசகம் என்றே நான்இங்கு
கருதுகின்றேன் அன்பர்களே !!
ஆனால் ஒரு மனிதன் திருந்திடப்
போகிறான் என்றால் அதை எப்படி
எல்லாம் தடுத்திடலாம் என்றே ஒரு
கூட்டம் இந்த உலகினில் எப்போதும்
காத்துக்கொண்டு இருக்கும் போலும்.
அவர்கள் சைத்தானின் பிரதநிதிகள்.
அந்தப் பிரதிநிதிகளுக்கு எல்லாம்
தலைவன் தான் இங்கே தனது
கருத்தை சொல்லிட வந்திருக்கும்
திருவாளர்.வம்பானந்தா அவர்கள்.
அவர் என்னதான் சொல்லுகிறார்
என்று நாம்பார்ப்போமாநேயர்களே!!
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும்
உரிய பெரியோர்களே!! அன்பும்
அழகும் ஒருங்கே அமைந்து அவை
இணைந்து என் கண்முன்னால்
வீற்றிருக்கும் தாய்க்குலத்தின்
உருவங்களே !! வணக்கம்.
இன்று நான் ஒரு திரையரங்கம்
சென்றிருந்தேன். எடுத்தவுடன்
டைட்டில் போட்டவுடன் அதில்
காண்பிக்கப்பட்ட வாசகம் இதோ:-
குடி குடியைக் கெடுக்கும் !!
குடிப்பழக்கம் நாட்டிற்கு,வீட்டிற்கு
கேடு !!
புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு
தீங்கானது !! புகைப்பழக்கம்
புற்றுநோயை வரவழைக்கும்.
இந்த மாதிரி அறிவுரை சொல்வது
போல சொல்லிவிட்டு படம்
முழுவதும் காண்பித்தது எல்லாம்
சிகரெட் ஆணும் பெண்ணும் சேர்ந்து
பிடிப்பதும்,
மதுவை கண்ணாடித் தம்ளரில்
ஊற்றி ஆணும் பெண்ணும் ஒருசேர
குடித்துக்கும்மாளம் அடிப்பதும் இது
போலவுமேஅனைத்துக்காட்சிகளும்
காண்பிக்கப்பட்டது. இது எந்த
வகையில் நியாயம் என்றே நான்
கேட்கிறேன்.
ஒன்று அறிவுரையை எழுதிக்
காட்டினால் அதுமாதிரி படம்
எடுத்திருக்க வேண்டும். ஆனால்
அப்படி இன்றி புகைத்தும் குடித்தும்
காண்பித்தே படத்தை எடுத்துக்
காட்டி இருக்கிறார்கள் என்றே நான்
கருதுகிறேன்.
பொதுவாக எனது கருத்து என்ன
என்றால் இந்த விஷயத்தில் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
நல்லதோ இல்லை கெட்டதோ
எல்லாம் அவரவர் ஜாதகத்தில்
என்ன உள்ளதோ அதுபடித்தான்
நிச்சயம் நடந்திடும். அதுமட்டும்
அல்ல அன்பர்களே.
எந்த ஒரு மனித ஜீவனும் அது
உருவாகும் தாயின் கருவறையில்
உருவாகிடும்போதே அதனதன்
தலையெழுத்து பிரம்மதேவனால்
எழுதப்பட்டு விடுகிறது என்பதே
உணமையாகும்.
எனவே எனது அறிவுரை இந்த
விஷயத்தில் என்ன என்றால் இந்தப்
பாடல்தான் எனக்கு வழிகாட்டி:-
இன்பம் எங்கே !! இன்பம் எங்கே !!
என்று தேடு !!
அது எங்கிருந்தபோதும் அதை
நாடி ஓடு.!!
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை!!
அதை எண்ணிடாமல் சேர்த்து
வைத்து காத்து என்ன நன்மை!!
இருக்கும்வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை !! இல்லை
என்றால் வாழ்வினிலே உனக்கு
ஏது இனிமை !!
இதுதான் அன்பர்களே !!
இதன்படிதான்
இந்த வம்பானந்தா தனது ஆயுளின்
ஒவ்வொரு நாளையும் கழித்து
மகிழ்கிறான். நீங்களும் எனது
தூய்மையான வழிப்படி நடந்திட
முனைகிறீர்களா ? அவ்வாறு எனில்
எனது இயக்கமான :-
அனுதினமும்அகம்மகிழ்ந்திடுவோர்
முன்னேற்றக் கழகமதில்
வாழ்நாள் உறுப்பினராகஆகிஅதற்கு
உண்டானஅடையாளஅட்டையைப்
பெற்றுக்கொண்டுஇந்தநாட்டின்எந்த
5 நட்சத்திரபார்களிலும்நீங்கள்நன்கு
குடிக்கலாம்.
மகிழ்ந்துகும்மாளமும்அடிக்கலாம்.
ஆயுள் சந்தா அதிகம் இல்லை
அன்பர்களே !! அது வெறும்
பதினோருஇலட்சங்கள்தான்!!
யோவ்.!என்னஅநியாயம்இது.ஆயுள்
சந்தாவைபபற்றிபேசிட நான்
ஆரம்பிக்கும்போது ஐம்பத்தி ஐந்து
பேர்கள் இங்கே ஆஜராகி
இருந்தார்கள். பேசி முடித்துவிட்டு '
பார்க்கிறேன் ஒரு ஆளைக்கூடக்
காணவில்லையே !! நான் என்ன
செய்வேன் ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment