Friday 15 November 2013

விடிஞ்சாத்தான் தெரியும் உங்க ஆத்தாவா? இல்ல எங்க ஆத்தாவா ? --ஒரு சிரிப்புக் கதை !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் !!



உலகுக்கு!!



இனம் ஒன்றாக, மொழிவென்றாக,



புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!




அச்சம் என்பது மடமையடா !!



அஞ்சாமை திராவிடர் உடமையடா!!



ஆறிலும் சாவு !! நூறிலும் சாவு!!



தாயகம் காப்பது கடமையடா !!




உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 



உயிரினும் மேலான அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே !!



உங்கள் அனைவருக்கும்என் இதயம் 



கனிந்தவாழ்த்துக்களுடன்இணைந்த 



காலை வணக்கங்கள் !!



உங்கள் இமைகள் திறந்திடும் இந்த 



இனிய காலை வேளையில் உங்கள் 



வாழ்க்கையில்  எந்தவிதமான 



சுமைகளும் இல்லாமல், சுகங்கள் 



மட்டுமே நிரம்பிவழிந்திட வேண்டும் 



என ஒவ்வொரு நாளும் நான் 



உங்கள் சார்பாக, எல்லாம் வல்ல 



இறைவனிடம் பிரார்த்தனை செய்து 



கொள்கிறேன் என் அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!      




இன்றைய தினம் நான் உங்களுக்கு 



சொல்லஇருப்பதுஒரு சிரிப்பு மட்டும் 



நிறைந்த கதை அல்ல அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே!!



சிந்திக்கவைக்கும்,இன்றையதினம்  




ஒவ்வொரு குடும்பத்திலும் 



நடைபெற்றுவரும் ஒரு உண்மைக் 



கதைகூட என்று சொன்னால் அது 



மிகையானசொல்அல்லஅன்பரே !!. 



சரி !! அன்பர்களே !! நாம் இப்போது 



கதைக்குள் செல்வோமா ? 



மதுரை !!நான் பிறந்து, வளர்ந்து, 



வாழ்ந்து,செழித்து,மகிழ்ந்த ஊர். 



அந்த மதுரை மாவட்டத்தில் 



நெற்பயிர்களின் 



களஞ்சியமாகத் திகழ்ந்திடும் 



ஊர்களில் இரண்டாம் இடமாகத் 



தெரிவு செய்யப்பட்ட ஊர்தான் 



சோழவந்தான் என்ற சிற்றூர் அது.



(முதலிடம் கம்பம் பள்ளத்தாக்கு)


அங்கு வாழ்ந்து வந்தவர்தான் 



வஜ்ரவேலு. 



அவருக்கு அவரது ஜாதகப்படி சற்றே 



காலம் தாமதித்த திருமணம்தான் 



நடைபெற்றது. 



திருமணம் நடைபெறும்போது 



அவருக்கு வயது 37. ஆனால் 



அவருக்கு மனைவியாக 



வந்த அழகி வனிதாவுக்கு வயது 22. 



ஏறத்தாழ இருவருக்கும் வயது 



ரீதியான வித்தியாசம் 



என்பது 15 ஆண்டுகள். நம் 



முன்னோர்கள் இந்த இடத்தில் 



என்ன கூறிச் சென்றுள்ளனர் என்று 



கேட்டால் ஆண்களைப் 



பொறுத்தவரையில் தனக்கு 



இளையது, தாரம் என்றுதான் 



சொல்லிச் சென்றுள்ளனர். 



இங்கே, இளையது என்றால் 



அன்பர்களே !!  நாம் கவனிப்பது 



வெறும் வயது மட்டும் இல்லை 



அன்பர்களே!! 



அறிவு,அழகு,அந்தஸ்து,



செல்வம்,செல்வாக்கு, நடை,உடை,



பாவனை என்று சொல்லப்படும் 



இவை அனைத்திலும் மனைவியாக 



வருபவள், ஒருபடி கணவனை 



விடவும் குறைவாக 



இருந்தால் மட்டுமே, அந்தப் 



பெண்ணின்மனத்தில், கணவனுக்கு, 



தான் கட்டுப்பட்டு நடந்திட 



வேண்டும், அவரை(கணவனை) 



மதித்து, கணவர் சொல்படி கேட்டு, 



வாழ்ந்திட வேண்டும், என்ற 



எண்ணம் அவளிடம் தானாகவே 



உருவாகிடும் என்பது நமது 



மூத்தோர்கள்,முன்னோர்கள் 



நமக்கு சொல்லிச் சென்றுள்ள 



அறிவுரை. இதை இன்று எத்தனை 



ஆண்கள் தங்கள் புத்தியில் ஏற்று 



செயல் படுகிறார்கள்? இது தான் 



இன்றுஇளையசமுதாயத்தின்முன் 




நான் எழுப்ப விரும்பும் கேள்வி 



அன்பர்களே!!



இவன் மட்டும் பார்த்தால் 



கண்டங்கருவாயனாக 



இருப்பானாம்.



ஆனால் இவனுக்கு மனைவியாக 



வருபவள் மட்டும் "ஐஸ்வர்யாராய்" 



போல சிவப்பாக ,அழகாக ,



இருக்க வேண்டும் என்று இவன் 



எதிர்பார்ப்பானாம். இது எந்த ஊர் 



நியாயம். இல்ல நான் கேட்கிறேன். 



அது நியாம்தானா நீ சொல்லு.




ஆக இங்கேயே மனதில்வித்தியாசம் 



தொடங்க ஆரம்பித்துவிடுகிறது 



அன்பர்களே. அடுத்த 



வித்தியாசம் தொடங்கிடும் இடம் 



வருமானத்தில். இவனைவிடவும் 



அதிகமாக பணம் சம்பாதிக்கும் 



பெண்ணாக என்றைக்கு இவன் 



விரும்பஆரம்பிக்கின்றானோ 



அப்போதே முடிந்துவிட்டது 




இவனுக்கு இவனே, இவனது 



தன்மான உணர்வுகளுக்கு, 



இவனது கணவன் என்னும் உயரிய



நிலைபாட்டிற்கு, அந்த உயர்வான 



பொறுப்புக்கு இவனே சவக் குழி 



தோண்டிடத்துணிந்து விட்டான் 



என்பதே உண்மை. சரி!!



அன்பர்களே !! இப்போது 



கட்டுரையும், கதையும், வேறு 



திசைநோக்கிப் பயணிக்க 



ஆரம்பித்துவிட்டது என்பதை நான் 



இங்கே உணர்ந்திட 



ஆரம்பித்துவிட்டதால் இந்த 



அளவோடு சமூக சிந்தனையை 



நிறுத்திக் கொண்டு கதைக்குள்ளாக 



செல்கிறேன் !!



என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 



ஆனால்,  



அந்தக் கதை,  சற்று ஒருசிறிய 



விளம்பர இடைவேளைக்கு  




பிறகுதான். என்ன சரியா? சற்றே 



பொறுமையுடன் காத்திருக்கவும்.   


                                                                                                                                  (தொடரும்).....

No comments:

Post a Comment