Monday, 28 October 2013

யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக்கொண்டது போல !! உண்மை அர்த்தம் என்ன தெரியுமா ? உங்களுக்கு !!








உடல்மண்ணுக்கு !!உயிர்தமிழுக்கு!! 



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 



எனது அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே!! அனைவருக்கும் 



வணக்கம்.                                                 



பொதுவாக, நம்மில் யாராவது 



தனக்குத் தானே கெடுதல் செய்திடும் 



ஒரு செயலைச் செய்திடும் போது 



நாம் பயன்படுத்தும் ஒரு 



சொற்றொடர்தான் நான் இங்கே 



கட்டுரையின் தலைப்பாகத் தந்து 



உள்ளேன். அதுதான் :-




யானை தன் தலையிலேயே 



மண்ணைப் போட்டுக்கொண்டது 



போல !!                                                               



ஆனால் அன்பர்களே !! பொதுவாக 



ஒவ்வொரு விலங்குகளுக்கும் 



என்று தனியாக  ஒரு சிறப்புகுணம் 



என்று ஒன்று உண்டு. இதைத்தான் 



காவியக் கவிஞர் வாலி அவர்கள் 



புரட்சி நடிகர் M.G.R.நடித்துச் சிறப்பு 



செய்த வண்ணத்திரைக்காவியமாம் 



" அடிமைப்பெண் " என்ற படத்தில் 



ஒரு பாடல் காட்சி வாயிலாக நமக்கு 



எடுத்து உரைத்திருப்பார். அது என்ன 



பாடல் என்றால் இங்கே பாருங்கள்:- 



உன்னைப் பார்த்து இந்த உலகம் 



சிரிக்கிறது !!                                             



உன் செயலைப் பார்த்து உன்நிழலும் 



வெறுக்கிறது !!( என்ற பாடலில்)   



தூங்கும் உலகை கூவும் சேவல் 



கூவி எழுப்பும் குரலாலே !!                   



ஏவல் செய்து காவல் காக்கும் 



நாய்களும் தங்கள் குணத்தாலே!! 



இரை கிடைத்தாலும் இல்லை 



என்றாலும் உறவை வளர்க்கும் 



காக்கைகளே !!                                         



இனத்தை இனமேபகைப்பதெல்லாம் 



மனிதன் வகுத்த வாழ்க்கையிலே !! 



என்று அந்தப் பாடலில் வரிகள் 



வரும். 




அதுபோலத்தான் யானை 



இருப்பதிலேயே உருவத்தில் மிகப் 



பெரிய அளவில் உள்ள ஒரு 



விலங்கினம். அது ஏன் அப்படி தனது 



தலையிலேயே மண்ணைப் 



போட்டுக்கொள்கிறது, என்று 



சொன்னால், நீங்கள் அடர்ந்த 



காட்டுப் பகுதியில் (திக் 



பாரஸ்ட்)சுற்றிவலம் வந்து 



(ட்ரக்கிங்)பார்த்தீர்கள் என்று 



சொன்னால் உங்களுக்கு புரியும். 



இறைவன் எவ்வளவு முன் 



ஜாக்கிரதையாக அங்கே, அவை 



மிகக் கொடுமையான ஜந்துக்களாக 



இருந்தாலும்கூட, அவைகளின் 



உயிரும்,   அதைவிட 



கொடுமையான மனிதனால் 



வேட்டையாடப்பட்டு அவைகள் 



அழிந்து விடக்கூடாது என்பதிலே 



எவ்வளவு அக்கறையும் ஆர்வமும் 



கொண்டு உள்ளான் என்பது நமக்குத் 



தெரியவரும். எப்படி ? மனிதன் அந்த 



அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே 



நுழைந்திடும் போது,அங்கு அவனது 



கால் பதியவைத்திடும்போது 



அவனை அங்கே வருக,வருக, என 



வரவேற்பது யார் என்று தெரியுமா 



நேயர்களே !! அவர்தான் ஸ்ரீமான் 



அட்டைப் பூச்சி அவர்கள்தான். அவர் 



நம்மீது ஏறுவதும் நமக்குத் 



தெரியாது. நம்மைக் கடித்துப்பின் 



நமது உதிரத்தை உறிஞ்சிக் 



குடிப்பதும் நமக்குத்தெரியாது. அந்த 



அளவுக்கு மனிதனுக்குமேலாக, 



அடுத்தவனின் இரத்தத்தை 



சுவைப்பதில், அவன் (அட்டை) 



மனிதனையும் மிஞ்சி விடுபவன். சரி 



இப்படி அந்த அட்டைப் பூச்சி நமது 



உதிரத்தைக்  குடிப்பதற்கு முன் 



ஒல்லியாக மறைந்த நடிகர் நாகேஷ் 



போல இருக்கும் அதே அட்டைப் 



பூச்சி தனது வயிறார அடுத்தவனின் 



ரத்தத்தைக் குடித்தபின்பு நடிகர் 



குண்டு கல்யாணம் போல/உசிலை 



மணி போலவே உப்பிவிடுவான். 



பிறகு நம்மைவிட்டு உதிர்ந்து 



சென்று விடுவான். ஆனால் நம் 



உடம்பில் அது கடித்த இடத்தில் 



இருந்து இரத்தம் ஒழுகுவது நமக்கே 



தெரியாது.இப்போதுஅந்த ரத்தத்தில் 



உரசிச் செல்லும் தென்றல் காற்று 



அந்த மனித இரத்தவாடயை உள்ளே 



இருக்கும் பல்வேறு வகையானவிஷ 



ஜந்துக்களுக்கும், கொடுமையான 



உயிர் இனங்களுக்கும், ஏய்!! 



உன்னைக் கொல்வதற்கு  மனிதப் 



பிசாசு வந்துகொண்டு இருக்கிறது. 



எனவே நீ எச்சரிக்கையாக இரு 



என்று இறைவன் தருகின்ற சிவப்பு 



விளக்கு அறிவிப்புத்தான் இந்த 



அட்டைப் பூச்சி என்பது. 



சரி !! நேயர்களே !! நாம் இப்போது 



கட்டுரையின் தலைப்பு பகுதிக்குள் 



செல்வோமா?                                             



அடர்ந்த காட்டினில் அதுவும் 



யானைகள் கூட்டம் கூட்டமாக 



வசிக்கும் அந்த இடங்களில் 



பல்வேறு வகையான காட்டு ஈ, 



மற்றும் காட்டுக் கொசு, பல்வேறு 



யானையைக் கடித்துத் துன்புறுத்தும் 



வண்டு இனங்கள், இது போன்ற 



எண்ணற்ற யானைகளை வதம் 



செய்திடும் பூச்சி இனங்கள் அடர்ந்த 



காட்டினில் ஏராளம் உண்டு. இந்த 



அறிவு மிகுந்த யானை அவைகளின் 



தாக்குதல்களில் இருந்து தம்மைக் 



காத்துக் கொள்வதற்கு என்ன 



செய்கிறது என்று கேட்டால், 



நீர்நிலைகள் நிறைந்து இருக்கும் 



இடங்களுக்குச்சென்று நன்கு மூழ்கி 



அரை மணி நேரம் முதல் ஒரு மணி 



நேரம் வரை தனது உடல்சூட்டினைக் 



குறைத்துக்கொள்கிறது முதலில். 



இங்கே நான் ஒரு வேறு ஒரு 



கருத்தைப் பதியம் செய்திட 



விரும்புகிறேன். அந்தக்காலத்தில் 



வாழ்ந்த மனிதர்களிடம் (ஏறத்தாழ 



6௦ முதல் 75 ஆண்டுகளுக்குமுன்பாக 



வாழ்ந்த மனிதர்களிடம், கீழ்க்கண்ட 



நோய்களின் அறிகுறிகள்எப்போதும் 



அவர்களின் வாழ்நாள் முழுவதும் 



நாம் காணவே முடியாத அளவுக்கு 



அவர்கள் மிக மிக ஆரோக்கியமாக 



வாழ்ந்து வந்தார்கள் என்று 



சொன்னால் அதற்கு என்ன காரணம் 



என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 



சொல்கிறேன் அன்பர்களே !!               



 1)  மூல நோய்.(உள் மூலம், மற்றும்     


வெளி மூலம்.)                                         



 2)  வயிறு சம்பந்தமான                               


எல்லாவிதமான நோய்களும்.       



 3) தேக சூட்டின்/உஷ்ணத்தின்                 



      மிகுதியின் காரணமாக ஏற்படும்     



      எல்லாவிதமான நோய்களும்.       



இந்த விதமான எல்லா நோய்களும் 



அந்தக்கால மனிதர்களுக்கு ஏன் 



ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போனது 



என்று சொன்னால், அதற்கு 



முக்கியமான காரணம் இந்தஆற்றுக் 



குளியல்தான் அன்பர்களே. அந்த 



ஓடும் ஆற்றுநீரினில் மனிதன் நன்கு 



மூழ்கிக் குளித்திடும்போது அவனது 



உடம்பில் உள்ள அவனது மிகக் 



கடுமையான எதிரியான உஷ்ணம் 



அங்கே விடைபெற்றுச் சென்று 



விடுவது மட்டும் அல்ல அன்புத் 



தமிழ் நேயர்களே !! முதலில் 



இவனது கபாலம் குளிர்ச்சி 



பெறுவதினால் இவனுக்கு 



சிந்தனனையில் 



நல்ல தெளிவும் எதையும் சீர்தூக்கிப் 



பார்த்திடும் அறிவும் அங்கே 



அவனுக்கு கிடைக்கிறது. எப்போது ? 



ஓடும் ஆற்றுநீரில் குளிப்பதினால். 



எப்போது கிராமங்கள் எல்லாம் 



நகரங்கள் ஆகி ,நீர்நிலை குளங்கள் 



எல்லாம் அடுக்குமாடிக் 



குடியிருப்புகளாக ஆகி, அரசாங்க 



அலுவலகங்களாக என்றைக்குமாற 



ஆரம்பித்ததோ அன்று பிடித்தது 



மனிதனுக்கு இந்த சனியனாக நான் 



மேலே குறிப்பிட்ட அத்துணை 



வியாதிகளும். குழாயில் வரும் 



நீரைப் பிடித்து வாளியில் சேர்த்து 



அவன் குளிக்க ஆரம்பித்தானோ 



அன்று ஆரம்பித்த அந்த நோய்த் 



தாக்குதல்கள் இன்றுவரை 



அவனைப் பீடித்துக்கொண்டுதான் 



இருக்கிறதே ஒழிய விட்டு விலகிட 



அந்த நோய்களுக்கு மனம் 



வரவில்லை.(யோவ்..T.R.B. 



என்னய்யா வண்டி வேறு திசை 



நோக்கிப் போயிட்டு 



இருக்கு.கட்டுரைக்குள்ளே வா 



நயினா!!) சரி அன்பர்களே.ஆக நான் 



ஏற்கனவே முன்பகுதியில் 



குறிப்பிட்டுள்ள அந்த விஷ 



வண்டுகள், காட்டு ஈக்கள், மற்றும் 



காட்டுக் கொசுக்கள், இவைகளின் 



தாக்குதல்களில் இருந்து தங்களைப் 



பாதுகாத்துக்கொள்வதற்காகவே 



யானை குளித்துவிட்டு கரையேறி 



வந்தவுடன், அங்கே கிடக்கும் 



செம்மண், புழுதி மண் மற்றும் என்ன 



கிடைக்கிறதோ அவைகள் 



அனைத்தையுமே எடுத்துதன் உடம்பு 



முழுவதும் தூற்றிக்கொள்வதன் 



மூலமாக அதன் வெளிப்புறத் 



தோலுக்கு ஒரு கவசமாக ஆக்கிக் 



கொள்வதற்காகத்தனே ஒழிய தனது 



தலையிலே தானே மண்ணைப் 



போட்டுக்கொள்கிறதே அன்றி 



 இந்தப் பாழாய்ப்போன மனிதன் 



நினைப்பது போல அல்ல என்ற 



கருத்தினை இங்கே நான் பதியம் 



செய்து விட்டு, மீண்டும் நாளை 



வேறு ஒரு தலைப்பினில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன் 



என்று சொல்லி, உங்களிடம் இருந்து 



விடை பெறுவது உங்கள் அன்புத் 



தமிழ் பேசிடும் அன்பன். மதுரை 



T.R.பாலு. நன்றி!! வணக்கம் !!

No comments:

Post a Comment