Tuesday, 1 October 2013

மனிதன் முதன்முதலாக இலஞ்சம் கொடுக்க முயன்ற கடவுள் யார் ? தெரியுமா உங்களுக்கு ? இதோ இருக்கிறது அந்த விடை !!(திருத்தி அமைக்கப்பட்ட புதிய பதிவு)






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம் 


உலகுக்கு!!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!



அச்சம் என்பது மடமையடா !!


அஞ்சாமை திராவிடர் 


உடமையடா !! ஆறிலும் சாவு!!


நூறிலும் சாவு !! தாயகம் 


காப்பது கடமையடா !! தாயகம் 


காப்பது கடமையடா !!



வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 


வென்றவர் கிடையாது !!


வேலும்,வாளும், தாங்கிய மறவர் 


வீழ்ந்ததும் கிடையாது !!


குள்ளநரிக் கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!நல்லவர்க்குத் 



தொல்லை தந்து மடக்கிடும்!!நீ 



எள்ளளவும் பயம் கொண்டு 


மயங்காதிரு !! அவற்றை 


எமன்உலகுக்கு அனுப்பி வைக்கத் 


தயங்காதிரு !!




உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


என் உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


இனிய காலை வணக்கங்கள் !!.



இன்றைய தினம் மனிதன் எப்படி 


எல்லாம் மாறிவிட்டான். தனக்கு 


சாதகமாக எதாகிலும் எவரிடமும் 


காரியம் சாதிக்க வேண்டும் என்று 


அந்தப் பாழாய்ப்போன மனிதன் 


எண்ணி விட்டாலே போதும். 


அதற்காக என்ன விலை 


வேண்டுமாகிலும் கொடுத்து அந்தக் 


காரியத்தை முடித்திட வேண்டும் 


என்ற அவனின் குறுமதியின் எண்ண


வெளிப்பாடுகள்தான் அவன் தரும் 


இந்த " இலஞ்சம் " என்பது. இந்த 


கொடிய வியாதி இன்று அங்கிங்கு 


எனாதபடி ஆனந்த ஜோதியாக பூமி 


முழுவதும் பரவி வியாபித்துக் 


கிடக்கிறது என்பதே உண்மை.


அதிலும் குறிப்பாக நம் இந்தியத் 


திருநாட்டினில் அதிலும் சொல்லப் 


போனால் நமது தாழ்ந்த 


தமிழகத்திலோ கேட்கவே 


வேண்டாம்.


அந்த இலஞ்சம் என்ற கொடிய 


நதியின் 


ஊற்றுக்கண்ணாகவே தமிழ்நாடு 


விளங்குகிறது என்று சொன்னால் 


அது மிகைப்படுத்தப்பட்ட சொல் 


அல்ல!! எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!



சரி !! இந்த குணம் மனிதனுக்கு 


எந்தக் கால கட்டத்தில் தோன்ற 


ஆரம்பித்தது ?


என்று ஒரு ஆராய்ச்சியில் நாம் 


இறங்கினால் என்ன ? என்ற அந்த 


மாபெரும் ஆராய்ச்சியின் 


வழிமுறைகள் ,செயல்பாடுகள், 


இவைகளைப்பற்றி நான் 


கண்டுபிடித்த 


அந்த உண்மைகளை, 


உணர்வுகளை,எண்ண 


அலைகளை அப்படியே அட்சரம் 


பிசகாமல் ஒரு அறிக்கையாக 


இங்கே ஏதாவதொரு பல்கலைக் 


கழகத்தில் நான் சமர்ப்பித்தேன் 


(அதற்கும்கூடபல படிகளில் 


இலஞ்சம் கொடுத்திட 



வேண்டுமோ என்னவோ, நான் 


அறியேன் பராபரமே) என்று 


வைத்துக்கொள்ளுங்கள்.


நிச்சயம் எனக்கு அங்கே முனைவர் 


என்ற பட்டம் கிடைப்பது என்பது 


உறுதி.



சரி !! நேயர்களே !! நாம் இப்போது 


ஆராய்ச்சி பற்றிய விஷயங்களை 


அலச ஆரம்பிப்போமா நேயர்களே !!


மனிதன் முதன் முதலாக இலஞ்சம் 


கொடுக்க முயன்ற கடவுள் யார் ?


இதுதான் உங்களுக்கு நான் வழங்க 


இருக்கின்ற விரிவுரையின் மையக் 


கருத்து. நான் என்ன கருதுகிறேன் 


என்று சொன்னால் அந்தக் கடவுள் 


வேறு யாரும் இல்லை எனது 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 


அந்தக் கடவுள் சாட்ஷாத் நம்ம 


                " புள்ளையார் "


தானுங்கோ!!.ஆச்சரியமா இருக்கா?


எப்படீன்னு கேக்கீகளா ? இந்தாங்க 


இந்தப் பாட்டைப் படியுங்க முதல்லே.


மத்ததை அப்புறமா பேசிக்குவோம். 


அட !!என்ன நான் சொல்றது !!



               விநாயகர் துதி !!


பாலும் தெளிதேனும் பாகும்                                              பருப்புமிவை 


நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-                                               கோலஞ்செய் 


துங்கக்கரிமுகத்துத் தூமணியே !!                                                     நீ எனக்குச்


சங்கத் தமிழ் மூன்றும்  தா!!... ... ... ... ...




பாத்தீயளா !!பாத்தீயளா!!



நேயர்களே !! எப்படி 


இந்த மனிதனின் குறுக்கு புத்தியை?


சங்கத் தமிழ் மூன்றும் 


பெறுவதற்காக 


பால்,தெளிந்த தேன்,வெல்லப்பாகு,


பருப்பும், இந்த நாலுபொருளையும் 


கடவுளுக்கே இலஞ்சமாக கொடுக்க 


முயற்சி செஞ்சு இருக்கிறானே 


இந்தப் பாழாய்ப்போனமனுசப்பய.


பாத்தீயளா !!நேயர்களே !!



ஆனா புள்ளையார் அத்த அவரு 


ஏத்துக்கிட்டாரா ?இல்லையா ? 


அது பக்த கோடிகள் !!


கிட்டே கேட்க வேண்டிய கேள்வி . 


நம்ம ஆராய்ச்சி இத்துடன் 


முடிகிறது. எப்படி இருக்கிறது 


நேயர்களே !! இத நான் எந்தப் 


பல்கலைக் கழகத்தில் 


சமர்ப்பிக்கிறது என்ற விவரம் 


தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.


தயவுசெய்து உங்களுக்குத் 


தெரிஞ்சா கொஞ்சம் எனக்குச் 


சொல்லுதீயகளா !!


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை TR. பாலு.   

No comments:

Post a Comment