உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலாக நான்
போற்றி வணங்கி வரும் அன்புத்
தமிழ் உடன் பிறப்புகளே !!
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த வணக்கம்.
பொதுவாக, பூமியில் பிறந்த
மனிதர்களுக்கு என்று ஒரு குணம்
உண்டு. அது என்னவென்றால், யார்
பெரியவன் ? சிறந்தவன்? நீயா ?
இல்லை நானா ? இந்தப் போராட்ட
குணம் என்பது மனித குலம்
தோன்றியநாள் முதல், முடியும் நாள்
வரை, நடந்துகொண்டேதான்
இருக்கும். அதை யாராலும்
மாற்றவோ இல்லை மறைக்கவோ
முடியவே முடியாது. இந்த கருத்தை
ஏன் நாம் ஒரு கட்டுரையாக மாற்றி
அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு
வழங்கக் கூடாது என்று சிந்தித்துக்
கொண்டு இருந்த வேளையில்
தற்செயலாக சங்ககால இலக்கிய
பாடல் ஒன்று எனது பார்வையில்
பட்டது. நான் மேலே குறிப்பிட்ட
அந்த விஷயம் அந்தப் பாடலில்
மிகத் தெளிவாகவே ஆராயப்ப்பட்டு
உள்ளதுஅன்புத்தமிழ்நெஞ்சங்களே!!
முதலில் கருத்தைக் இங்கே கூறி
விடுகிறேன். அதன் பிறகு இறுதியாக
நாம் பாடலைப் பார்ப்போம்.
அது ஒரு வளமை மிகுந்த மாநிலம்.
சந்தர்ப்ப வசத்தால் சதி பல செய்து
அங்கே ஆட்சியைக் கைப்பற்றினார்
ஜெயந்தன் என்ற திறமையற்ற,
மக்களுக்கு என்ன தேவை என்று
அறிந்து அவைகளை மக்களுக்கு
கொண்டு சென்று, ஏழை,நடுத்தரக்
குடும்பங்களின் நலனில் அக்கறை
செலுத்திடும் தன்மை,(ஏன்
ஜெயந்தனால் அவர்களின்
கஷ்டங்களை உணரமுடியவில்லை
ஏன் என்று சொன்னால் அவர்
பணக்கார வீட்டினில் பிறந்து,
வளர்ந்து, வாழ்பவர். எனவே
ஏழைகளின் கஷ்டங்களை அவர்
உணர்ந்திடும் வாய்ப்பு அவருக்கு
கிடைக்க வில்லை.அது அந்தமாநில
ஏழைகள் செய்த பாவம்) அதுவரை
அங்கே ஆண்டுகொண்டு இருந்த
மன்னர் அன்புநிதியை போரில்
தோற்கடித்து, ஜெயந்தன்ஆட்சியைக்
கைப்பற்றினார். மன்னர் அன்புநிதி
ஆட்சியில் இருந்தவரை மக்களுக்கு
எவ்வளவோ நன்மை பயக்கும் பல
திட்டங்களை அவர் செயல் படுத்தி
இருந்தாலும் கூட மக்கள்
தற்போதைய மன்னர் ஜெயந்தனின்
நயவஞ்சக வலையில் வீழ்ந்ததால்
நன்றி மறந்து அன்புநிதி செய்த
அத்தனை மக்கள் நலப்
பணிகளையும் தங்கள்நினைவினில்
ஏற்றுக்கொள்ள மறந்ததன்விளைவு
இன்று அவர்கள் படும் துன்பமும்
துயரமும் கணக்கில் சொல்லிட
முடியாத அளவு அனுபவித்துக்
கொண்டு உள்ளனர். உப்பு தின்றவன்
தண்ணீர் குடித்துத்தானே தீர
வேண்டும். அது போல தப்பு செய்த
மக்கள் தண்டனை அனுபவித்து
த்தான் தீர வேண்டும். இது விதி.
ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே
ஜெயந்தன் செய்த முதல் நல்ல
காரியம் எல்லா வரிகளையும்
இரண்டு பங்கு, மூன்று பங்கு என்ற
அளவுக்கு உயர்த்தித் தனது
நாட்டு அடிமை மக்களுக்கு முதல்
பரிசினை வழங்கி மகிழ்ந்தார்.
இங்கே நான் மற்றும் ஒரு
விஷயத்தினைப் பற்றிக்
குறிப்பிட்டே ஆக வேண்டும். அது
என்ன என்றால் முந்தியஆட்சிதனை
நடத்தியஅன்புநிதிவெறும்அரசாளும்
தகுதி படைத்தவர் மட்டும் அல்ல.
நல்ல கலைஞர். கவிஞர். ஆற்றல்
பல கொண்ட முத்தமிழ் வித்தகர்.
உலகம் முழுவதும் அவரைத்
தெரியாத மனிதர்களே கிடையாது
எனலாம். அந்த அளவு மக்கள்
அன்பினைப் பெற்றவர் அவர்.
இப்போது நான் கட்டுரையின்
தலைப்பு பகுதிக்குள் செல்கிறேன்
அன்பர்களே !!யார் உண்மையில்
உயர்ந்தவர், சிறந்தவர் ? மன்னரா
இல்லை கலைகள் பல கற்று அறிந்த
கலைஞரா? இதுதான் கேள்வி.
சங்ககால நூல் என்ன சொல்கிறது
என்று கேட்டால் மன்னரை விட
கல்வி பல கற்று, கலைகள்
பலவற்றுள் தேர்ச்சி பெற்ற
கலைஞரே சிறந்தவன் என்று
சொல்கிறது. எப்படி என்றால் இந்த
இருவரையும் ஒரு தராசு ஒன்றின்
இரண்டு தட்டுக்களிலும் ஒரே
நேரத்தில் தனித்தனியாக இரு
பக்கமும் அமரவைத்து எடை
பார்த்தோமேயானால் மன்னர்
ஜெயந்தனின் தட்டை விட கலைஞர்
அன்புநிதி அமர்ந்து இருக்கும்
தட்டுத்தான் அதிக எடை உள்ளதாக
இருக்கிறது. எதனால் ? மன்னருக்கு
அவர் ஆளும் மாநிலத்தில்
மட்டும்தான் சிறப்பு, கௌரவம்,அரசு
மரியாதை, யானைப்படை,
மன்னிக்கவும் பூனைப்படை
பாதுகாப்பு, இத்யாதி ..இத்யாதி என
அனைத்தும் கிடைக்கும். ஆனால்
அதே நேரத்தில் கலைகள் பல கற்ற
அறிஞர், கலைஞர், அவர்களுக்கோ,
உலகத்தின் எந்த மூல முடுக்குகள்
எங்கு சென்றாலும் அங்கே
அவருக்கு பட்டுக் கம்பளம் பல
விரித்து, உளமார, மனித நேய
உண்ர்வுகளுடன், வரவேற்க, இந்த
அகிலமே காத்துக்கொண்டு
இருக்குமாம். இது இலக்கியப் பாடல்
அதில் சொல்லியுள்ள கருத்து
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அன்பர்களே !! நாம் இப்போது
கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு
வந்து விட்டோம். இப்போது பாடலப்
பாருங்கள் :-
மன்னரும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கில்
மன்னரில் மாசறக் கற்றோனே
சிறந்தோன் !!
மன்னருக்குத் தன்தேசம் அல்லால்
வேறெங்கும் சிறப்பில்லை !!
கற்றோர்க்கும் சான்றோர்க்கும்
சென்ற இடமெல்லாம் சிறப்பு!!
இவ்வளவு நெடிய கருத்துச்
செறிவுகள் அடங்கிய ஒரு
கட்டுரையை பொறுமையுடன்
படித்து இரசித்த அன்புத் தமிழ்
உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த
நன்றி உணர்வுகளை நான் இந்த
இடத்தில் காணிக்கையாக
ஆக்குகிறேன்.மீண்டும் நாளைவேறு
ஒரு தலைப்பில் உங்கள்
அனைவரையும் நான் சந்திக்கிறேன்
அன்பர்களே !!.
தமிழ்இனம் காக்க வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுது!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment