Monday, 28 October 2013

நியாயம்தானா நீ சொல்லு !! (சென்னை நகரினுள் புதிதாக இரட்டை இலை படம் வரைந்த சிற்றுந்துகள் ஓடவிட்டதன் பின்னணி என்ன ? ஒரு அரசியல் அலசல் கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கும், 



வந்தாரை வாழ வைக்கும் 



தமிழகத்தில் உள்ள தமிழ் 



அன்பர்களுக்கும் வணக்கம்.                   



 (என்னடா இது, என்னைக்கும் 



இல்லாத திருவிழாவாக 



தமிழகத்தில் உள்ள ... அப்டீன்னு 



போட்ருக்கீங்க)விஷயம் இருக்கு 



தம்பி. சென்னையில் இப்ப புதுசா 



அரசு பொதுமக்கள் வசதிக்கு என்ற 



பெயரில் எதிர்வரும் பாராளுமன்ற 



தேர்தலை மனத்தில் நிலைநிறுத்தி 



கொண்டுவரப்பட்டுள்ள சிற்றுந்து 



பற்றித்தான் சொல்கிறேன். நான் 



ஏற்கனவே எனது பலகட்டுரைகளில் 



அரசாங்கம் தொழில் நடத்துவது 



என்பது தேவை இல்லாத செயல். 



அரசாங்கம் நிர்வாகம் மட்டுமே 



செய்திட வேண்டும். தேவை 



இல்லாமல் தனியார் நடத்தும் 



தொழில்கள் எதிலும் தலையிடுதல் 



என்பது, அதில் பணியாற்றும் 



ஒழுங்கான தொழிலாளர்களை 



சோம்பேறிகளாக, மக்களை 



மதித்திடாத பணியாளர்களாக 



மட்டுமே மாற்றிட உதவும் என்று 



சொன்னால், அதை யார் கேட்பது. 



எல்லாம் மக்களின் தலை எழுத்து. 



ஒரு தொழில் புதியதாக யார் 



துவக்கினாலும் சரி, அந்தத் தொழில் 



ஏற்கனவே நடைமுறையில் உள்ள 



தொழிலில் எந்தவிதமான 



தேக்கத்தையோ  அல்லது 



தாக்கத்தையோ எற்படுத்திவிடக் 



கூடாது. அரசாங்கம் இதை மிக 



முக்கியமாக கருத்தில் கொண்டு 



இருக்க வேண்டும். ஆனால் தவறி 



விட்டது என்றே இங்கே நான் 



குறிப்பிட வேண்டி உள்ளது. ஆம் !! 



அன்பர்களே !! ஏற்கனவே ஆட்டோ 



தொழிலில் மீட்டர் முறையை 



அரசாங்கம் கொண்டு வந்ததில் மிக 



அதிகமாக அவர்களுக்கு பாதிப்பு 



ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது 



சுத்தமாக அந்தத் தொழிலை 



முற்றிலுமாக நசுக்கும் விதமாக 



சென்னை நகரின் ஒவ்வொரு சந்து 



பொந்துகளுக்கும் இரட்டை இலை 



சிற்றுந்துகள் ஓட வைத்திருப்பதைப் 



பார்க்கும்போது இந்த இரு 



செயல்களும் யாரையோ மனதில் 



நிறுத்தி பழி வாங்கும் செயல்என்றே 



ஸ்ரீமான் பொதுஜனம் கருதுவதையும் 



என்னால்நிராகரிக்கமுடியவில்லை. 



சரி. அப்படி யாரையப்பா பழி 



வாங்கும் விதமாக இந்த 



நடவடிக்கை? இப்போ ஸ்ரீமான் 



பொதுஜனம் உள்ளே வர்றார். ஏன்யா 



மதுரை TR. பாலு சார், உங்களுக்கு 



விஷயமே தெரியாதா? இல்ல 



தெரியாத மாதிரி நடிக்கீகளா? இல்ல 



கேக்கேன். ஒரு கருப்பா நடிகர் 



இப்பகூட நடந்த தேர்தலில் ஆளும் 



கட்சியோடு இவர் கூட்டணி 



வச்சதினாலதானே அவுக 



ஆட்சியைப் பிடிக்க முடிஞ்சது. 



அன்னாருக்கு (நடிகருக்கு) 



சென்னையில சுமார் 1,௦௦௦ 



ஆட்டோக்களுக்கு மேல 



ஒடுதாமுல்ல. அத்த முடக்கனுன்ட்டு 



தான்வே இந்த இரண்டு பக்கத் 



தாக்குதல்.யோவ் கருப்பு காந்த 



நடிகரே உமக்கு இதுவும் வேணும் 



இதுக்கு மேலேயும் வேணும்யா. 



உம்மை எப்படி உங்க ரசிகர்கள் 



உம்மை கூப்பிடுதாணுவ. கேப்டன் 



அப்டித்தானே !! அப்புறம் சினிமால 



உமக்கு பெரு என்னாது வாயிலேயே 



நுழைய மாட்டேங்குதுங்கானும்.   



ஆ..இப்ப யாவகம் வந்த்ருச்சு 



என்னமோ...ஆ... புர்ச்சீ  கலைஞர். 



அப்படி இவர் என்ன புர்சீ பண்னாரோ 



அது அந்த ரஷ்யா நாட்டின் லெனின் 



ஒருவரே அறிவார். இவர் என்ன 



கலைக்குப் பாடுபட்டாறோ, இல்ல 



எத்தனை படத்துக்கு கதை,வசனம், 



பாடல்கள்,அப்படீன்னு எத்தனை 



படங்கள் உழைத்திருக்காரோ? 



(பேரறிஞர் அண்ணா மட்டுமே 



அறிவார்)ஆழமாசிந்திக்கணும்.இந்த 



ஆளும் அரசு, கருப்பு நடிகரின் 



வாக்குகள் பெறவில்லை என்றால் 



இன்று அரியாசனத்தில் ஏறிஅமர்ந்து 



கோலோச்ச முடியுமா? ஆனா, சும்மா 



சொல்லக் கூடாது, அந்த நன்றிக் 



கடனை இந்த கருப்பு நடிகரின்மீது 



எப்படி அன்பாக, பிரியமாக, 



வெளிக்காட்டி உள்ளது.உம்..அடடா... 



ஏகப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு 



வழக்குகள், முதல்வர் மீது 



மரியாதைக் குறைவாக பேசியதாக 



உள்ள வழக்குகள், அதுக்கு அப்புறம், 



இவர் கட்சியில் உள்ள ஏழு,எட்டு 



சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு 



எலும்புத் துண்டை தூக்கி காம்பிச்சு 



அவங்களும் வாலை ஆட்டியபடி 



அங்கே போய் அவங்களோடு 



இணைந்து கைகோர்த்து  நிற்பது, 



இப்ப கடைசி கடைசியாக குதிரை 



கீழே தள்ளியதும் இல்லாமல் 



குழியையும் பறித்த கதையாக இவர் 



பினாமியாக நடத்தும் ஆட்டோ 



தொழிலுக்கே தீ வைக்கும் விதமாக 



மீட்டர் போருத்தனும் அப்டீங்கற 



உத்தரவு, இப்ப அதையும் மீறி 



ஆட்டோ தொழிலை நசுக்கும் 



விதமாக சிற்றுந்து வண்டிகளை 



தெருவுக்குத் தெரு இயக்கியதன் 



மூலம், அந்த கருப்பு நடிகருக்கு 



எவ்வளவு பெரிய புரட்டாசி மாத 



சனிக்கிழமை நாமம் போட்ட கதை.... 



அப்பப்பா, சூப்பரோ சூப்பர். அப்புறம் 



இன்னும் ஒரு மிக முக்கியமான 



கருத்து என்ன என்றால், இன்றைக்கு 



அரசாங்கம் ஓட விட்டிருக்கும் இந்த 



சிற்றுந்து விஷயத்தில,  செஞ்சுட்டு 



இருக்குற கொஞ்ச நஞ்சவேலையை 



விட்டுபுட்டு இனிமேலே இந்த 



ஆட்டோ ஓடிப் பிழைப்பு நடத்தும் 



தொழிலை விட்டுபுட்டு எல்லா 



ஆட்டோ ஓட்டுனர்களும் பேசாம 



அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் 



கடையில போயி அந்தந்த பார்களில் 



என்ன வேலை கிடைச்சாலும் 



பேசாம பார்த்துறலாம். இல்லையா 



அரசு நடத்தும் உணவகங்களில் 



தட்டு கழுவுற வேலைக்கு 



போயிறலாம் இப்படி எந்த 



வேலையும்கிடைக்கலையா..உம்....... 



யார்ட்டையும் சொல்லிக்காம 



கொள்ளிக்காம, கடல்ல விழுந்து 



தற்கொலை செஞ்சுக்கலாம். அய்யா 



கருப்புநடிகருக்கு இதவிடவேறுஎந்த 



ஆளு முதல்வரா வந்தாலும் இப்படி 



திருவள்ளுவரே நாணும்படியான 



வழியில் நன்றி,விசுவாசத்தைக் 



காம்பிப்பது என்பது இருக்கவே 



இருக்காது நான் அடிச்சு சொல்றேன் 



தம்பிகளா!!அட...என்ன... நான்.. 



சொல்றது.. இந்த மாதிரி கொடுமை 



எல்லாம் நம்ம தமிழ்நாட்டைவிட்டா 



வேற எங்க சார் பாக்க முடியும். நான் 



சின்னப் பிள்ளையாசுமார் 6  வயசு 



இல்லை ஏழு,எட்டு வயசுப் பையனா 



இருக்கும்போது  தரையிலே எட்டு 



கட்டம் போட்டு தாண்டி 



விளையாடும் பாண்டி ஆட்டம் 



நடக்கும் போது தோத்துப்போன 



ஆளைப் பாத்து ஒரு பேச்சு 



பேசுவோம்.அது எண்ணானா 



ஒய்...வேணுங்கட்டைக்கு 



வேணும்..வெங்கலக் கட்டைக்கு 



வேணும் அப்படி பாட்டு பாடிட்டே 



இருப்போம். இப்ப ஏறத்தாழ 53 



ஆண்டுகள் கழிந்தாலும் இன்னமும் 



அந்த பசுமைநிற, வேப்ப மர நிழலும், 



குளிர்தென்றல் காற்றும், அந்தக் 



கயித்துக் கட்டிலும் எப்படி மறக்க 



முடியாதோ அது போலத்தான் 



எனக்கு இந்த"வேணுங்கட்டைக்கு 



பழமொழிச் சொற்களும்..என்னால் 



மறக்க முடியாது. இந்த சிற்றுந்து 



பக்கவாட்டுப் பகுதியில அரசு ஒரு 



ஆளும் கட்சியின் தேர்தல் சின்னம் 



இரட்டை இலையை இரண்டு சைடு, 



மற்றும் ஒரு பின்பக்கம், இதுல 



எல்லாம் இரட்டைஇலை 



சின்னத்தை வரஞ்சு இருப்பது 



சுத்தமான கடைஜ்ஜெடுத்த 



அயோக்கியத்தனம். ஆளும் அரசே !! 



இப்படி எல்லாம் உங்கள் தலைவர் 



M.G.R. உருவாக்கின கட்சிக்கு அதன் 



சின்னத்துக்கு, இப்படி ஒரு 



அவமானம், உங்களைத்தவிர வேறு 



எவராலும்  எவராலும் தந்திட 



முடியாதே !! இப்படி எல்லாம் 



படம்போட்டா, அடுத்த ஆண்டு வரும் 



நாடாளுமன்றத் தேர்தல்ல 4௦க்கு 4௦ 




இடத்தையும் நாம ஒருத்தரே 



ஜெயிப்போம் அப்படீன்னு மனப்பால் 



குடிக்காதீங்க. இந்த நாட்டு பொது 



ஜனங்களோட மனோபாவம் 



உங்களுக்கு தெரியாதுங்க. எல்லா 



உதவிகளையும் பெற்றுக் 



கொள்வார்கள் அப்போது ஈ என்று 



இளிச்ச வாய் காம்பித்து அதுவும் 



காதுவரைக்கும் கிழியும்.இந்த 



நிலையை மனசுலே எண்ணித்தான் 



நீங்க போட்டு இருக்கிற அந்த 



அடுத்தநிலை கனவுகள் என்ன 



என்று ஏற்கனவே எல்லோருக்கும் 



தெரியும். அதாவது 4௦க்கு 4௦ம் 



ஜெயிச்சா உங்களைக் கேக்காம 



எந்தக் கொம்பனாலும் இங்க 



அரசியல் பண்ண முடியாது . நீங்க 



யாரைக் கை காம்பிக்கிரீங்களோ 



அவங்கதான் இந்நாட்டு பிரதமர் ஆக 



முடியும்ன்ற நிலை வேணும்ன்றது 



உங்க எண்ணம். ஆனா 



நடக்கப்போவது அது இல்லையே. 



ஏங்க மதிய இலவச உணவு 



பள்ளிக்கூடம் அதில் படிக்கும் படிப்பு 



இலவசம், பள்ளிச் சீருடை இலவசம் 



ஏராளமான 



தொழிற்ச்சாலைகள், மின் 



திட்டங்கள், அணைக்கட்டுக்கள், 



இவ்வளவும் இந்தத் தாழ்ந்த 



தமிழ்நாட்டுக்குத் தந்த கர்ம வீரர் 



காமராஜரையே அதுவும் அவரது 



இனமான சொந்தத் தொகுதியான 



விருதுநகர் சட்டமன்றத் 



தொகுதியில அதுவும் ஒருபொடியன் 



மாணவர் சங்கத் தலைவன் 



சீனிவாசன் என்ற பையனை 



ஜெயிக்க வச்ச அவ்வளவுவிசுவாசம் 



காட்டிக் கொண்டாடியவர்கள், 



இந்தத் தமிழ்நாட்டு மக்கள் என்பதை 



தயவு செய்து மறந்துராதீர்கள். 



அதனால ரெட்டை இலை படம், 



உங்க படம் சிற்றுந்துல முன்பக்கம், 



குடிநீர் பாடில்ல உங்க படம், 



உணவகத்துல உங்க படம்.இப்படி 



எல்லாம் போட்டாலும் உங்களை 



தோற்க்கடிச்சே தீருவது என்று 



ஸ்ரீமான் பொதுஜனம் முடிவு 



எடுத்துட்டாங்கன்னு வையுங்க. 



உங்களாலே எதுவும் செய்ய 



முடியாது. என்னமோ உங்களுக்கு 



இப்ப ஒரு யோகமான காலம் 



நடந்துட்டே இருக்கு. அதனால 



வண்டி ஓடுது. பாப்போம்.நாளை 



என்ன நடக்குமுன்னு இறைவன் 



ஒருவனே அறிவான். எது எப்படியோ 



பாவம்தான் ஆட்டோ 



சொந்தக்காரங்க நிலை இந்த 



சென்னையில். இதுக்குமேலே 



சொல்ல இப்போதைக்கு ஏதும் 



இல்ல,இல்ல சந்திப்போம்மீண்டும் 



 நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment