Wednesday, 16 October 2013

" பழக்க தோஷம் " எப்படி மனிதனைவிட்டு போகும் ? சிரிக்க !! சிந்திக்க !! ஒரு கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 




அகில உலகம் முழுவதும் வாழ்ந்து 



வரும் என் உயிரினும் மேலான 



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே!! 



உங்கள் அனைவருக்கும் என் இனிய 



காலை வணக்கங்கள் உரித்தாகுக !!



மனித குலம் இந்த மண்ணில் 



தோன்றிய நாள் முதல்இன்று வரை 



அவனைவிட்டுப் பிரியாத ஒன்று 



உண்டு என்று சொன்னால் அதுதான் 



" பழக்க தோஷம் " என்பது.               



அந்தப் பழக்க தோஷத்தால் அவன் 



பயன் அடைந்ததையும் பலன் 



இழந்ததையும் கணக்கிட்டுப் 



பார்த்தோமேயானால் இழந்துதான் 



அதிகமாக இருக்கும்.அதில் எவ்வித 



சந்தேகமும் தேவை இல்லை.எவன் 



ஒருவன் இதை சீர்தூக்கிப் பார்த்து 



தன்னை, தான் செய்யும் தவறுகளை 



திருத்திக் கொள்கிறானோ அவனே 



சிறந்தவன்,புத்திமான்,அறிவாளி.




சரி !! நேயர்களே நாம் இப்போதுநாம் 



கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி 



பழக்க தோஷத்தால் ஏற்பட்ட சில 



நிகழ்வுகளை, சில சம்பவங்களைஎ 



நான் உங்களது கனிவான 



கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 



படித்து  அகமகிழ்க !! அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!





முத்தமிழ் வளர்த்து சங்கம் கண்ட 



மதுரை நகர். அன்பர்களே !!அகண்டு 



விரிந்த தமிழகத்தில் எத்தனை 



எத்தனையோ நகரங்கள் 



இருந்தாலும் அந்தந்த நகரங்களில் 



தமிழ் மொழி பேசப்பட்டாலும்கூட 



அந்த அத்தனை நகரங்களில் 



பேசப்படும் தமிழ் மொழியின் 



உச்சரிப்பு, இதில் முதல் இடத்தை 



வகிப்பது அன்றும்,இன்றும், இனி 



என்றென்றும் மதுரைத் தமிழ் 



மட்டுமே என்பது ஆன்றோர்கள், 



கற்றறிந்த சான்றோர்கள், 



மதுரைக்கு வழங்கிய சிறப்பு 



நற்சான்று என்பதே உண்மை. 



இரண்டாவது இடத்தைப் பிடித்த ஊர் 



எது என்று கேட்டால் அதுதான் 



நெல்லைத் தமிழ் ஆகும். இதனை 



மகாகவி பாரதியார் இயற்றிய 



கவிதை மூலமாக நான் உங்களுக்கு 



வரலாற்றுச் சான்று ஒன்றினை 




கீழ்க்கண்ட பாடல்மூலமாக நாம் 



அறிந்து கொள்ளலாம்.                         




 பாரதியார் பாட்டு!! தமிழ்நாடு பற்றி!!       



செந்தமிழ் நாடெனும் போதினிலே !!                                                                  இன்பத்


தேன் வந்து பாயுது காதினிலே!!                                                                            எங்கள் 


தந்தையர்நாடென்றபேச்சினிலேஒரு 


சக்தி பிறக்குது மூச்சினிலே!!           




வேதம் நிறைந்த தமிழ்நாடு!!-உயர்   



வீரம் செறிந்த தமிழ்நாடு!!-நல்ல     



காதல் புரியும் அரம்பையர் போல்!!-                                                                                                                                                         இளங் 


கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு !!     




காவிரி தென்பண்ணை  பாலாறு 



தமிழ்கண்டதோர்வைகைபொருனை 

                                                          நதி !!-என 

மேவிய யாறு பலவோடத்-திரு           



மேனி செழித்த நாடு !!                               



இது போல இன்னும் ஏழு 



பத்திகளை (PARAGRAPH) 



கொண்டதாக பாடல் உள்ளது.  இடம் 



மற்றும் காலம், நேரம் கருதி 



பாடலை இத்துடன் 



நிறுத்திக் கொள்கிறேன்.                                                  



மேலே குறிப்பிட்ட பாட்டின் பொருள் 



என்னவென்றால் காவிரி, 



தென்பண்ணை, பாலாறு இவைகள் 



எல்லாம் வெறும் நதிகள் அல்லது 



ஆறுகள்தான். இந்த அளவுக்குமேல் 



இந்த நதிகளிடம் வேறு எந்த 



விதமான சிறப்புகளும் சொல்லுவது 



போல இல்லை.ஆனால் வைகைநதி 



மற்றும் பொருனை( பொருனை 



என்பதன் பொருள் தாமிர"பரணி" 



என்ற சொற்பதத்தில் உள்ள "பரணி" 



என்ற சொல் பொருனைஎன்ற 



சொல்லில் இருந்து மருவி வந்து 



உள்ளது.இதன்ஆதிபெயர்பொருனை 



நதியே என்பதுதான்.)இந்த நதிகள் 



வெறும் நதிகள் அல்ல, தமிழ் கண்ட 



தொரு என்ற சொல் அங்கேபாடலில் 



குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, 



அந்தத் தமிழின் புகழ் என்பது அங்கு 



பேசப்படும் தமிழால் அந்தப் புகழ் 



இந்த வைகைநதி மற்றும்பொருனை 



நதி இவைகளுக்கு கிடைத்தது 



தமிழால் , என்பதை அறிக.                       



ஆக இப்பேர்ப்பட்ட சிறப்புகளைப் 



பெற்ற மதுரை மாநகரில் உள்ள 



தொன்மையான கல்லூரிதான் 



அமெரிக்கன் கல்லூரி. அந்தக் 



கல்லூரியில் ஆங்கில முதுகலைப் 



பட்டப் படிப்பு படித்து வந்தவன்தான் 



பாசில். கேரள நாட்டைச் சேர்ந்தவன் 



பெரும் தனவந்தரின் ஒரே மகன். 



அவனது தந்தை இஸ்மாயில் 



குமுளியை அடுத்த சுற்றுலாத் 



தலமான தேக்கடியில் 2௦ விசைப் 



படகுகள் வைத்து இருந்தார். இது 



தவிர காப்பி எஸ்டேட்,,தேயிலை, 



மிளகு என லெட்சுமிதேவியின் 



செல்லப் பிள்ளையாகவே வாழ்ந்து 



வந்தார் அவர்.இந்நிலையில்அவரது 



ஒரே மகன் பாசில்அந்த அமெரிக்கன் 



கல்லூரிமாணவர் சங்கத்தலைவன். 



கல்லூரியில் இருந்து இன்பச் 



சுற்றுலாஒன்றுசெல்வதற்குஏற்பாடு 



ஆனது. பெரும்பான்மையான 



மாணவர்கள் விருப்பத்திற்கு 



இணங்க தேக்கடி செல்ல முடிவு 



செய்யப்பட்டது.கல்லூரிப் பேருந்து 



மூலமாக (ஓட்டுனர் தங்கமுத்து ) 



அதிகாலை கிளம்பி அங்கே தேக்கடி 



சென்று அடையும்போது காலை 7.3௦ 



மணி ஆனது. முதலில் எல்லோரும் 



அங்கு படகு சவாரி செல்ல 



கிளம்பினர். ஆனால் அதுமுடியாமல் 



போனது. அன்றைய தினம் 



பார்த்துத்தானா அங்கு விசைப்படகு 



அதில் வேலை செய்யும் ஓட்டுனர்,



தொழிலாளர்கள் அதிக அளவு 



ஊதியம்,போனஸ்,மற்றும் இன்ன 



பிற வசதிகள் கேட்டு வேலை 



நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் ?. 



சுற்றுலா சென்ற கல்லூரி 



மாணவர்கள் அனைவரின் 



முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. 



அப்போது அங்கு வந்த பாசிலின் 



தந்தை இஸ்மாயிலிடம், பாசில் 



கேட்டான், வாப்பா, வாப்பா, 



நம்மளோட சொந்த விசைப்படகு 



தானே, அதுல ஒன்னை நாங்க 



எடுத்துட்டு போயி தேக்கடி ஏரியைப் 



பாத்துட்டு வந்துடுறோம் வாப்பா 



என்றுசொல்லதந்தைஇஸ்மாயிலோ



எதுக்குடா இந்த வீண் விஷப் 



பரீட்சை, படகை ஓட்ட ஓட்டுனர் 



யாருடா இருக்கா ? என்று கேட்க 



எங்க கல்லூரிப் பேருந்து ஓட்டுனர் 



தங்கமுத்து இருக்காரே என்று 



சொல்லிவிட்டு தந்தையின் 



பதிலுக்குக்கூட காத்திராமல் பாசில் 



தங்கள் கல்லூரி பேருந்து ஓட்டுனர் 



தங்கமுத்துவை விசைப்படகை 



ஓட்டுவதற்கு அழைத்துக்கொண்டு 



சென்றனர். அப்போது கூட ஓட்டுனர் 



தங்கமுத்து பாசிலிடம், அய்யா நான் 



பேருந்து ஓட்டுபவன், என்னைய 



போயி.... என்று இழுத்தார்.அதற்கு 



பாசில்.. அண்ணாச்சி.. ரெண்டும் 



ஒண்ணுதான். ரெண்டுக்கும்ஸ்டீரிங் 



இருக்கு..என்ன ஒரே வித்தியாசம் 



அங்கே நீங்க காலில் அழுத்தினால் 



பேருந்து ஓடும். இங்கே வலது 



கையை திருகினால் படகு 



ஓடும்.அங்கே காலிலே இருக்கு 



பிரேக். இங்கே அது கையிலேயே 



இருக்கு.. நாங்க எல்லோரும் 



இருக்கோமுல்ல. உங்களைத் 



தனியாவா தவிக்க விடப் 



போறோம்னு சொல்லி 



தங்கமுத்துவை விசைப்படகை 



ஓட்டச் செய்தனர். விசைப்படகும் 



ஓடத்துவங்கியது.ஓடியது.ஓடியது. 



ஓடிக்கொண்டே இருந்தது. அந்த 



தேக்கடி ஏரி சுமார் 1௦௦ அடி முதல் 17௦ 



அடிவரை ஆழம் கொண்டது. சரியா 



ஏரியின் நடுப்பகுதிக்கு விசைப்படகு 



வந்தபோது திடீரென்று நின்று 



விட்டது. தங்கமுத்து எதனால் படகு 



நின்றுபோனதுஎன்றுசரிபார்த்து     



 கொண்டு இருந்தார். படகினில் 



உள்ள மாணவர்கள் கூட்டம் 



விஷயம் என்னவென்று தெரியாமல் 



சளசள என பேசிக்கொண்டு 



இருந்தனர். அப்போது கடுப்பாகிப் 



போன ஓட்டுனர் தங்க முத்து :-என்ன 



அங்கே சளசளன்னு பேசிக்கிட்டு? 



வண்டி நின்னு போயிருச்சுல்ல? 



உடனே எல்லோரும் இறங்கிப் 



போயி  தள்ளுங்க!! என்றாரே 



பார்க்கலாம்!!(இது எப்படி இருக்கு?) 



ஏன் என்றால் இது தான் ஓட்டுனரின் 



" பழக்கதோஷம்".                                   



 மீண்டும் நாளை நகர்ப் பேருந்து 



நடத்துனரின் (CONDUCTOR) பழக்க 



தோஷம் அதைப் பற்றிய கதையைப் 



பாப்போம் நேயர்களே. நன்றி !! 



வணக்கம்!!                                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.



 

No comments:

Post a Comment