Saturday, 5 October 2013

ஏனுங்க !! நரம்புக் கோளாறுக்கு மருந்து எதுனாச்சும் இருக்குங்களா !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை  உரக்கச் சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!


உலகெங்கிலும் வாழ்ந்து வரும்



என் உயிரினும் மேலாக மதித்து


வரும் அன்புத் தமிழ் உடன்


பிறப்புகளே !!வணக்கம்.


வட்டித் தொழில் கொடிகட்டி



நடக்கும் ஊர்களுள் ஒன்றுதான்


கீழச்செவல்பட்டி என்ற சிற்றூர்


ஆகும்.அங்கே முதல்தரமான


செல்வந்தர் திருவாளர் சிங்காரம்


செட்டியார்  அவர்கள். 


பொதுவாக செட்டிநாட்டு பொன் 


மொழிகளுள் இதுவும் ஒன்று.


" துட்டு ஒன்னுக்கு எட்டுப் பொருள் 


வாங்கி, பொருள் ஒன்று எட்டுத் 


துட்டுக்கு வித்தாலும் அது வட்டிக்கு


ஈடாகாது "



எந்த அளவிற்கு இந்தப் பாடல் 


வட்டியின் பெருமையை உலகம் 


அறியச் செய்திடும் என்று எண்ணிப் 


பாருங்கள் அன்புத் தமிழ் உட ன் 


பிறப்புகளே !!



உண்மை இதில் என்னவென்றால் 


வட்டி கொடுப்பவன் தான் செய்த 


பாவங்களில் இருந்து விடுதலை 


பெறுகின்றான். ஆனால் அதற்கு 


நேர் மாறாக, வட்டி வாங்குபவன் 


பாவத்தை சம்பாதித்துக் கொள்ளு-


-கிறான்என்பதுதான் உண்மையிலும்


உண்மையான சொல் அன்பர்களே !!




இதுபோல வட்டி, வட்டிக்குவட்டி,


கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் 


வட்டி என்று பெரும்பொருள் 


சம்பாதித்த செல்வந்தர் திருவாளர் 


சிங்காரம் செட்டியார் அவர்கள் 


இரவு தூங்கச் செல்கிறார். மறுநாள் 


காலையில் அவரால் தனது 


படுக்கையை விட்டு எழுந்திரிக்க 


முடியவில்லை. ஆம் அன்பர்களே !!


பக்க வாத நோய் அவரை 


கடுமையாக மிகக் கொடுமையாக 


தாக்கி விட்டது. இது நரம்பு 


மண்டலத்தில் ஏற்பட்ட, இவரால் 


இவருக்கே ஏற்படுத்திக் கொண்ட 


பாவத்தின்  வெளிப்பாடுதான் அந்த 


பக்க வாதம் என்ற கொடிய நோய் 


அன்பர்களே!!


இந்தக் கட்டுரையின் தலைப்பினில் 


சொல்லி உள்ள கருத்து அது ஒரு 


சங்க கால இலக்கியத்தின் பாடலாய்


இங்கே வெளிவருகின்றது 


அன்பர்களே.



பாடல் இதோ :-



அரும்பு கோணிடில் அதன் மணம்                                                    குன்றுமோ ?  


இரும்பு கோணிடில் யானையை                                                          வெல்லலாம் !!


கரும்பு கோணிடில் கட்டியும்                                                 பாகுமாம் !!


நரம்பு கோணிடில் நாம் அதற்கு                                           என் செய்வோம் !!



இதே கருத்தைத்தான் பழைய MGR 


நடித்து வெளிவந்த படம் ஒன்றினில் 


பரம்பரை இரத்தம் உடம்பிலேதான் !!


அது முறுக்கேறி கிடப்பது 


நரம்பிலதான் !!


"எங்கள்  தங்கம்" என்னும் படத்தில் 



கவிஞர் வாலியோ இல்லை 



புலமைப் பித்தனோ 


எழுதியது என்று எண்ணுகிறேன்.


இப்போது நாம் கட்டுரையின் 


இறுதிப் பக்கத்திற்கு வந்து 


விட்டோம் எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!


எண் சாண் உடம்பிற்கும் சிரசே 


பிரதானம் என்றான் தத்துவ ஞானி 


சாக்ரடீஸ். அந்த சிரசில் உள்ள 


மூளையில் இருந்துதான் உடலின் 


எல்லாப் பகுதிகளுக்கும் அவைகள் 


இயங்குவதற்கான ஆணைகள் 


பிறப்பிக்கப் பட்டு அவை நரம்புகள் 


மூலமாக கொண்டு செல்லப்பட்டு


நாம் இயங்கிக் கொண்டு 


இருக்கிறோம்.


அந்த நரம்புகள் பாதிக்கப் படும் 


நிலை வரும்போதுதான் நாம் 


நமது செயல் திறனை இழந்து 


தவிக்கிறோம். தயவுசெய்து நான் 


உங்கள் அனைவரையும் இந்தத் 


தருணத்தில் வேண்டி விரும்பிக் 


கேட்டுக்கொள்வதெல்லாம் இந்த 


ஒன்றே ஒன்றினைத்தான் எனது 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!


நீங்கள் இந்தப் புவியில் வாழ்ந்திட 


எத்தனையோ தொழில்கள் இங்கே 


நடைமுறையில் உள்ளது.அதில் 


தயவுசெய்து இந்த லேவாதேவி 


தொழில் மட்டுமே முழுக்க 


முழுக்க பாவங்கள் நிறைந்த ஒரு 


தொழிலாகக் கருதப் படுகிறது.


எனவே நீங்கள் அந்த ஒரு 


தொழில் தவிர்த்து வேறு எந்தத் 


தொழிலாகினும் செய்திடுங்கள் 


தயவு செய்து இந்த ஒன்று மட்டும்


நமக்கு வேண்டவே வேண்டாம்.


பார்த்தீர்களா !! சிங்காரம் செட்டியார் 


பட்ட பாட்டினை!!



இவ்வளவு நீண்ட கட்டுரைதனை 


படித்து இரசித்திட்ட உங்கள் 


அனைவரின் மன எண்ணங்களுக்கு 


என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.


மீண்டும் நாளை மற்றும் ஒரு 


புதிய தலைப்பினில் உங்கள் 


அனைவரையும் நான் சந்திப்பேன்.


அதுவரை உங்கள் எல்லோருக்கும் 


நன்றி பாராட்டி விடை பெறுவது 


உங்கள் அன்புத் தமிழ் பேசும் 


சகோதரன் மதுரை T.R. பாலு. 


நன்றி !!வணக்கம் !!


No comments:

Post a Comment