உங்களுக்கு " பைனான்சியர் " இராமலிங்கத்தைத் தெரியுமா? ஜெயா TV யில் எனது சின்னத்திரை அரங்கேற்றம் !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
எனது அன்பு மிக்க இரசிகப் பெரு
மக்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய மாலை வணக்கங்கள் !!
நேற்று முன்தினம் எல்லாம் வல்ல
அந்த இறைவனின் திருவருளால்
ஜெயா தொலைகாட்சி நிறுவனம்
ஒளிபரப்பு செய்திடும் புதிய
நெடுந்தொடரான இயக்குனர்
அன்புமிகு திரு இளவரசன்
அவர்களது சீரிய மேற்பார்வையில்
உருவாகி மக்கள் தற்போது கண்டு
களித்துக்கொண்டு இருக்கும்
"அவள் அப்படித்தான் "
என்ற நெடுந்தொடரில் சிறிய கதா
பாத்திரம் ஒன்றினில்
"பைனான்சியர் இராமலிங்கம் "
எனும் வேடத்தில் நடித்திடும்
வாய்ப்பு எனக்கு கிடைத்தது
அன்பர்களே !! அதற்காக எனக்கு
வாய்ப்பு வழங்கிய இயக்குனர்
அன்புமிகு திரு இளவரசன்
அவர்களுக்கும், ஒளிப்பதிவாளர்
அவர்களுக்கும் ஜெயா
தொலைக்காட்சி நிறுவனத்திற்கும்
எனது இதயம் கனிந்த நன்றியை
இந்த இடத்திலே தெரிவித்திட நான்
கடமைப்பட்டு உள்ளேன்.
வாழ்க அவர்களின் தமிழ்த்
தொண்டு!!
வளர்க !! என்னைப்போன்ற முதிய
கலைஞர்களுக்கும் வாய்ப்பு
கொடுத்திடும் அவர்களது நல்ல
பண்பு.!!
மிக்க நன்றி !! மீண்டும்.
வணக்கம். வாழ்வோம் வளமுடன் !!
அன்புடன் !!
இப்படிக்கு,
மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment