Sunday, 27 October 2013

கலைஞரின் நகைச்சுவை நிறைந்த (இரட்டை அர்த்தம் உள்ள) ஒரு சிறு குறிப்பு !!






உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 



அனைவருக்கும் எனது இனிய 



மாலை வணக்கங்கள் உரித்தாகுக !! 



தமிழ் இனத்தலைவர் கலைஞரின் 



புகழ் பற்றி பேசுவதற்கு எனக்குஇந்த 



ஒரு பிறவி போதாது அன்பர்களே !!   



முன்பு ஒரு முறை அவர் கதை, 



திரைக்கதை, வசனம் எழுதி 



வெளிவந்த வண்ணக்காவியம்தான் 



" பாலைவன ரோஜாக்கள் " அதில் 



ஒரு கட்டத்தில் பெண்கள்கூட்டமாக 



ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் 



என்று ஒரு பாடல் காட்சி. கலைஞர் 



இயக்குனரை அழைத்து, இந்தப் 



பாடல் காட்சிக்கு கதாநாயகியைத் 



தவிர ஏனைய கூட்டத்தில் உள்ள 



நடனமாடும் பெண்களுக்கு குஜராத் 



மாநிலத்தைச் சேர்ந்த "மார்வாடி" 



பெண்களை வைத்து படம்எடுத்தால் 



அது மிக நன்றாக கண்ணுக்கு 



விருந்தாக இருக்கும் என்று 



ஆலோசனை சொல்லிவிட்டு 



கிளம்பி விட்டார். இயக்குனரும் 



தலைவர் சொல்லியபடியே அந்த 



மார்வாடிப் பெண்களைவைத்து 



நாட்டிய நிகழ்ச்சியை படம் எடுத்து 



அதன் பிறகு அந்த காட்சியைமட்டும் 



தலைவர் கலைஞருக்கு திரை 



இட்டுக் காட்டினார். அதைப் பார்த்து 



விட்டு தலைவர் கலைஞர் எதுவும் 



பேசாமல் வெளியே வந்தார் 



அரங்கத்தை விட்டு. இயக்குனர் 



மனம் பயம்  கவ்விட, அய்யா,நீங்கள் 



சொன்ன மாதிரி அந்த பெண்களை 



வைத்துத்தானே  நடன நிகழ்ச்சி 



அமைத்து இருந்தேன். ஆனால் 



தாங்கள் எதுவும் கருத்துக் கூறாமல் 



இப்படி எதுவும் பேசாமல் சென்றால் 



எப்படி அய்யா. என்ன தவறு நடந்து 



உள்ளது என சொன்னால் அதை 



நான் திருத்திக்கொள்வேன் 



அல்லவா என்றார். உடனேகலைஞர் 



மனம்திறந்து வாய்விட்டு 



சிரித்துவிட்டு சொன்னாராம். தம்பி 



நான் சொன்னபடிதான் நீ 



பெண்களை அழைத்து நடன 



நிகழ்ச்சியில் நடிக்க வைத்துள்ளாய். 



நான்இல்லைஎன்றுசொல்ல 



வில்லை. ஆனால் ஒரு சிறு தவறு 



மட்டும் நடந்து விட்டது என்று 



சொல்லி விட்டு தலைவர் கலைஞர் 



மௌனம் காத்திட, இயக்குனர் எந்த 



இடத்தில் அய்யா தவறு? தயவு 



செய்து கூறிட வேண்டும் எனக்கு 



என்று உடன், தலைவர் கலைஞர் 



வாய் விட்டு சிரித்து ,தம்பி, நான் 



சொன்னது " மார்வாடி" பெண்களை. 



ஆனால் நீயோ ஒரே ஒரு எழுத்தை 



மட்டும் கூட்டி எழுதிக் கொண்டு 



அப்படிப் பெண்களாக பார்த்து நடன 



நிகழ்ச்சியில் நடிக்க வைத்து 



விட்டாய். அவ்வளவுதான் வேறு 



ஒன்றும் இல்லை என்று 



சொன்னார்சிரித்துக்கொண்டே. 



இயக்குனர் தலைவரிடம் இன்னும் 



புரியலையே தலைவா என்று 



சொல்லிட, கலைஞர் இயக்குனரைத் 



தனது அருகில் அழைத்து அவர் 



காதோடு சொன்னார் விஷயத்தை. 



அவ்வளவுதான் போங்கள் அங்கே 



கூடி இருந்த அனைவரும் 



வாய் வலிக்க, வயிறு குலுங்க, 



சிரியோ சிரி என்று 



சிரித்து அந்த சிரிப்பு அடங்கிட 



ஏறத்தாழ 5நிமிடங்களுக்கு மேல் 



ஆனதாம்.( அட.. என்ன..ஐயா.. 



TR.பாலு சார்...ரொம்பத்தான்...



சஸ்பென்ஸ்..வச்சுக்கிட்டே போன 



எப்படி. போட்டு உடையும் அய்யா) 



தலைவர் இயக்குனர் காதில் 



கிசுகிசுத்தது வேறு ஒன்றும் 



இல்லை. அந்த கருத்து 



உங்களுக்காக, நீங்கள் அனைவரும் 



சிரித்து மகிழ்ந்திட இதோ உங்களது 



கனிவான பார்வைக்குக் கீழே தரப் 



பட்டுள்ளது. பார்த்து பின் படித்து 



சிரித்து மகிழ்ந்திடுங்கள் என்உலகம் 



முழுவதும் வாழ்ந்துவரும் அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!                                 



தம்பி !!நான் சொன்னது " மார்வாடி " 



பெண்களை வைத்துப் படம் எடுக்கச் 



சொன்னால், நீயோ " மார் வாடிய " 



பெண்களாகப் பார்த்து தேர்ந்து 



எடுத்து படம் பண்ணி இருக்கிறாய் !!



அவ்வளவுதான். வேறு ஒன்றும் 



இல்லை என்றாராம் !!                             



இது எப்படி இருக்கு !!                                 



 நன்றி !! வணக்கம் !!                                 



 அன்புடன். மதுரை T.R.பாலு.  

No comments:

Post a Comment