உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
அச்சம் என்பது மடமையடா !!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!!
ஆறிலும் சாவு !!நூறிலும் சாவு !!
தாயகம் காப்பது கடமையடா !!
கவியரசரின் வாழ்க்கையில்
நடைபெற்ற நிகழ்வுகள்
அனைத்தையும் தொகுத்து
வழங்குவது என்பது யாராலும்
முடியாத காரியமே !! ஏன்?,
ஏனென்றால் அவர் வாழ்ந்து
மறைந்த கால கட்டத்தில்
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு
அனுபவம், அல்லது இனிமை
நிறைந்த சம்பவங்கள் என்றுசிற்சில
அனுபவங்கள் என்பது என்றென்றும்
நிறைந்திட்டகாரணத்தாலேயேதான்
அவரது வாழ்கையில் நடைபெற்ற
நிகழ்வுகள் அனைத்தையும் என்பது
சாத்தியம் ஆகாது என்ற
காரணத்தினாலேதான் ஒரு சில
நிகழ்வுகளையாவது உங்களுடன்
பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த
எனது"எண்ணத்தில்தோன்றியவை"
என்ற வலைப்பதிவில் உங்களோடு
நான் இணைந்திருக்கிறேன், எனது
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!
அந்தக்காலகட்டம், நான் இங்கே
குறிப்பிடுவது என்பது திரை உலக
இயக்குனர்களுள் முடிசூடா
மாமன்னராக விளங்கியவர்கள்
பலருள் ஸ்ரீதர் என்பவரும் ஒருவர்.
அவர் கதை,வசனம் எழுதி இயக்கிய
பல வெற்றிப்படைப்புகளுள்
"நெஞ்சில்ஓர்ஆலயம்"என்றபடமும்
ஒன்று. அதில் உள்ள ஒரு காட்சி
அமைப்பிற்கு பாடல் ஒன்றினை
எழுத, அதனை உடனே இசை
வடிவுக்கு இணைத்திட மெட்டு
தயாரித்து இது சம்பந்தமான
வேலைகளை நாம் இங்கே (ஸ்ரீதர்,
தேனினுமினியமெல்லிசை மன்னர்,
M.S.விஸ்வநாதன்,கவியரசர்
கண்ணதாசன் இவர்கள் மூவரும்)
சென்னையில் இருந்தால் நிச்சயம்
அந்தப் பரபரப்பான சூழலில் நான்
எதிர்பார்த்திடும் வண்ணம் அந்தப்
பாடல் அமையாது என்று இயக்குனர்
எண்ணியதால் மகாபலிபுரம்
கடற்கரை அருகே அமைந்துள்ள
ஒரு நட்சத்திர விடுதி ஒன்றினில்
தங்கிக்கொண்டு கடற்கரை ஓரம்
ஆட்கள் யாரும் இல்லாத நேரம்
விச்சு (M.S.Vயின் செல்லப் பெயர்)
ஹார்மோனியப் பெட்டியோடு
காத்துகொண்டு இருக்க கவியரசு
அறையினுள் " மயக்கமென்ன இந்த
மௌனமென்ன " என்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க பாடலைப் பின்னொரு
நாளில் இந்தத் தமிழ்த் திரைஉலகம்
மகிழ்ந்து கொண்டாடிடஉருவாக்கிய
அந்தகவிச்சக்கரவர்த்திமயக்கநிலை
விட்டுஎழுந்தபாடில்லை.இருவரும்
(M.S.V.&ஸ்ரீதர் ) காத்திருந்தனர்.............
காத்திருந்தனர்.............காலை மணி
11முதல் அந்தி மயங்கும்நேரம்வரை.
" மாலையும் இரவும் சந்திக்கும்
இடத்தில் மயங்கிய ஒளியினைப்
போலே! மனமயக்கத்தைத் தந்தவள்
நீயே !!ஓ..ஓ..வழியில் வந்தவள்நீயே
என்ற " பாசம் "புரட்சி நடிகர் M.G.R.
நடித்த திரைப்படத்திற்குப் பாடல்
எழுதியகவிமன்னன்அல்லவாஅவர்.
ஸ்ரீதர் , சரி !! விச்சு.. இனிமே நாம
காத்திருந்து எந்தவிதப் பலனும்
இல்லை. எனவே நாமும் சற்று
எடுக்கச் செல்வோம் நாளை
எப்படியும் வந்த வேலையை
முடித்திடுவோம் என்றுசொல்லி
விட்டு இருவரும் பிரிந்தனர். மறு
நாளும் வந்தனர். அதே நேற்றைய
நிலைதான் இன்றும் நீடித்தது.
கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு
அருணாச்சலம் செய்வதறியாத
வண்ணம் கைகளைப்
பிசைந்தபடியே இருவரின் முன்பாக
(M.S.V.&ஸ்ரீதர்)நின்று கொண்டு
இருந்தார். இரவு 9.௦௦ மணிவரை
காத்திருந்த இருவரும் பஞ்சுவிடம்,
யப்பா..நீ..என்ன செய்வியோ ஏது
செய்வியோ எனக்குத் தெரியாது..
நாளைக்கு காலையில் 11 மணி
வரை இருப்போம். அதுக்குள்ளே
வரச் சொல்லு என்றார் ஸ்ரீதர்.
உடனே அதற்கு விச்சு, அண்ணே!!
அவனையெல்லாம் நீங்க தான்
நம்பனும். இதெல்லாம் சரிப்பட்டு
வராது. இதுக்குத்தான் இந்த மாதிரி
குடிகாரங்களை எல்லாம் நம்பி
எந்தக் காரியத்துலேயும் நான் ஈடு
படுவதே இல்லை என்றார் விச்சு.
இந்த வாசகங்களை அப்படியே
எழுத்துப் பிசகாமல் பஞ்சு கவிஞர்
கண்ணதாசனிடம் ஒப்பித்தார்.
உடனே அதற்கு அவர் எந்தவிதக்
கருத்தும் சொல்லாமல், சரி பஞ்சு நீ
தூங்கு. நாளை மற்றவற்றை நாம்
பார்த்துக்கொள்வோம் என்று
சொல்லிவிட்டு மீண்டும்
" மயக்கத்தினுள் " தன்னை
ஆட்படுத்திக் கொண்டார் கவிஞர்.
மறுநாள் காலை எல்லோரும்
வருவதற்கு 5 நிமிடங்களுக்கு
முன்பாகவே கவிஞர் அந்த இடம்
வந்து சேர்ந்தார். இதை சற்றும்
எதிர்பாராத இயக்குனர் ஸ்ரீதர்
கவிஞரைப் பார்த்து அண்ணே !!
நிச்சயம் இன்று மழை கொட்டோ
கொட்டுன்னு கொட்டப்ப்போகுது
என்றார். அதற்கு கவிஞர் லேசான
புன்னகையைத் தவழ விட்டார். இரு
தினங்கள் முன்பு பட்ட காயம்
இன்னும் ஆறாததாலே M.S.V. தனது
முகத்தை சற்று இறுக்கமாகவே
வைத்து இருந்தார். அதைக்கவனித்த
கவிஞர்,விச்சுவின்(M.S.V)அருகினில்
சென்று என்ன அண்ணே !! ஆசைக்
கிளியே !! கோபமா ? என் அருகில்
வரவும் நாணமா ? என்ற பாடலைப்
பாடி சிரிக்க வைக்க முயன்றார்.
ஆனால் M.S.V. அதற்கெல்லாம் மசிய
வில்லை. இப்போது ஸ்ரீதர், சரி நாம
இப்ப வந்த விஷயத்தை பாப்போமா?
என்று சொல்லியபடியே,கவிஞரிடம்
அந்தக் கதையையும், அதற்கான
சூழ்நிலையையும் எடுத்துச் சொல்ல
உடனே கவிஞர் விச்சுவைப் பார்த்து
அண்ணே !! இப்ப போடுங்க மெட்டு,என்று சொல்லிவிட்டு,
பாடலை அதன் முதல் இரண்டு
வரிகளை சொன்னவுடன், அதுவரை
வைத்திருந்த இறுக்கமான தனது
முகத்தை நொடிப்பொழுதில்
மறந்தார்.மாற்றிக்கொண்டார். விம்
மி விம்மி அழுதபடியே மேட்டுப்
போடுவதை விட்டு விட்டு இப்போது
கவிஞரைத் தேடி வந்து, அவரின்
இரண்டு கைகளையும் பிடித்துக்
கொண்டு, நான் இதை ரெண்டுகாலா
நினைச்சு உங்ககிட்டே மன்னிப்பு
கோருகிறேன் என்று சொன்னார்.
அன்பர்களே !! அப்படி கவிஞர்
என்னதான் பாடல் இயற்றிப்
பாடினார் ? என்று அறிந்துகொள்ள
உங்களுக்கு ஆவல் அதிகம்
உள்ளதா? சற்று பொறுமையாக
நீங்கள் இருந்துதான் தீர வேண்டும்.
இந்த விடுகதைக்கு பதில்
கட்டுரையின் இறுதிப்பகுதியில்
உள்ளது. பார்த்துப் படித்து இன்புற
வேண்டுகிறேன்!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்... மதுரை T.R. பாலு.
புதிருக்கான விடை :-
கவிஞர் எழுதிய பாடல் இதுதான்
அன்பர்களே !!
நெஞ்சில் ஒரு ஆலயம் என்ற கருப்பு
வெள்ளைப் படத்தில் இடம் பெற்ற
உயிரோட்டம் நிறைந்த பாடல் இதோ
உங்கள் அனைவரின் கனிவான
கவனத்திற்கு. பாடலைப் பாருங்கள்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சொன்னது !! நீ தானா !!
சொல்..சொல்...என் உயிரே !!
நன்றி !! வணக்கம் !!
(தொடரும்) ..
என் அன்பு தமிழ் நெஞ்சங்களே !! )
மதுவில் ஈர்ப்பு சக்தி எந்த அளவுக்கு
உள்ளது என்பதற்கு இந்த
இனியக்கட்டுரையே ஒரு உதாரணம்
அன்பர்களே !!
மீண்டும் விரைவினில் சந்திப்போம்!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T. R. பாலு.
No comments:
Post a Comment