முதல் கோணல்--முற்றும் கோணல்!! உண்மையான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு ?
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என்உயிரினும்மேலானஅன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே !!
அனைவருக்கும் என் இனிய இதயம்
கனிந்த வணக்கம்.
தமிழில் ஒரு முதுமொழி ஒன்று
உண்டு. அதுதான் இங்கே உங்களது
பார்வைக்கு தலைப்பாக
தரப்பட்டுள்ளது.அது என்ன என்றால்
முதல் கோணல் !!
முற்றும் கோணல்!!
இதற்கு நம்மில்
பெரும்பான்மையோர்கள்
கொள்ளும் அர்த்தம் என்ன என்றால்
ஒரு விஷயத்தை, நாம் முதலில்
ஆரம்பிக்கும்போது ஏதாவது
தடங்கல் வந்தால் அது
கோணலாகிவிடும். அதன் பிறகு
அந்த விஷயம் முழுவதுமே
கோணலாகிவிடும் என்றுதான்
இந்நாள் வரை நம்மில்பலர் அர்த்தம்
கொள்கின்றனர். ஆனால் உண்மைப்
பொருள் அதுவன்று. உண்மை
அர்த்தம் இந்தப் பழமொழிக்கு என்ன
என்றால், முதல் என்றவார்த்தைக்கு
நமது தமிழில் இரண்டு அர்த்தங்கள்
உண்டு.
1) ஆரம்பம்.
2) மூலதனம். இதற்கும் "முதல்"
என்று ஒரு பொருள் உண்டு.
ஆக எவன் ஒருவன் ஒரு தொழிலை
அல்லது ஒரு வணிகத்தை
ஆரம்பிக்கும் போது அதில் இடும்
"முதல்"(மூலதனம்) நல்ல
நேர்மையான வழியில் சம்பாதித்த
பணமாக இருக்க வேண்டும். அந்தப்
பணம் நேர்மை இல்லாத வகையில்
ஈட்டியதாக இருந்தால், அந்த
"முதல்" கோணலாக இருந்தால்
அதில் பின்னால் வரும்
அனைத்துமே சரியாக வராது.
முழுவதுமே கோணலாகிவிடும்
என்பதை மக்கள் மனமதில் பதிய
வைத்திடத்தான் இந்தப் பழமொழி
வந்தது என்று இனிமேல் அர்த்தம்
கொள்க.
(இந்தக் கருத்து மதுரை
T.R.பாலுவின் கண்டுபிடிப்புகள்
பலவற்றுள் இதும் ஒன்று)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment