Sunday, 27 October 2013

கவியரசர் கண்ணதாசனின் கவிமகுடம் சிறப்பு பெற்ற ஒரு இடம் !!--ஒரு உண்மைச் சம்பவம்!!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 




உலகம் முழுவதும் அன்பு என்னும் 



ஒன்றின்துணையோடு அமைதியாக 



வாழ்ந்து வரும் என் அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே !! அனைவருக்கும் 



எனது இனிய காலை வணக்கங்கள் 



உரித்தாகுக !!                                                 



கவியரசர் கண்ணதாசனின் கவிகள் 



பற்றிய பெருமைகளை,சிறப்புகளை 



எடுத்து உரைக்க ஆரம்பித்தால் 



அதற்கு இந்த ஒரு ஜென்மம் 



போதாது அன்பர்களே !!  ஆம் !! நான் 



சொல்வது அத்தனையும் உண்மை. 



உண்மையைத்தவிர வேறு எதுவும் 



இல்லை அன்பர்களே !!.                 



இப்படித்தான் மறைந்த புரட்சி 



இயக்குனர் ஸ்ரீதர், தனது 



"கலைக்கோவில்" என்ற 



படத்திற்காக, ஒரு சூழ்நிலையில் 



தான் எதிர்பார்க்கும் மெட்டினில் 



அந்தப் பாடல் அமைந்திட வேண்டும் 



என்று எண்ணி, ஸ்ரீதர்,இசை 



அமைப்பாளர் திரு MSவிஸ்வநாதன், 



கவியரசர், இந்த மூவரும் அமைதி 



தவழ்ந்திடும் சூழல் நிறைந்திட்ட 



மகாபலிபுரக் கடற்கரை ஒட்டிய 



விடுதி ஒன்றினில் மேல்மாடியில் 



அமர்ந்து கொண்டு, அவரவர்க்குப் 



பிரியமான " திரவ"பதார்த்தங்களை 



அருந்திகொண்டே கலந்தாய்வினில் 



ஈடுபட்டு இருந்தனர். ஒரு நாள் 



முழுவதும் கலந்து விட்டது. M.S.V. 



 அவர்களும் நூற்றுக்கணக்கான 



மெட்டுக்கள் போட்டுக் காண்பித்தார் 



இயக்குனருக்கு. எதுவும் ஸ்ரீதரின் 



மனத்தைக் கவரவில்லை. அட 



போங்கப்பா !! என்று கடுப்பாகி M.S.V. 



சற்றே கோபத்துடன் 



அறையைவிட்டு வெளியேறிவிட்ட 



நிலையில் ஸ்ரீதர் அந்த அறையின் 



ஜன்னலை ஒட்டி அந்தக் 



கடற்கரையை ஒட்டிய தெருவில் 



போவோர் வருவோர் இவர்கள் 



அனைவரையும் கண்காணித்தபடி 



நின்றுகொண்டு இருந்தபோது ஒரு 



அதிசயம் அங்கே நிகழ்ந்தது. ஒரு 



சிறுவன் அவன் தனது கையில் 



கொட்டாங்கச்சி பிடில் ஒன்றினை 



ஏந்தியபடியே இசைத்துக்கொண்டு 



வருவதைக் கண்ணுற்ற இயக்குனர் 



ஸ்ரீதர், அந்த சிறுவனையும், அவன் 



எழுப்பிவரும் ஓசையையும் உற்று 



கவனித்தபடியே இருந்தார்.அப்போது 



அவர் முகத்தில் மகிழ்ச்சி 



தாண்டவம் ஆடிட, அண்ணே !! 



கவிஞர் அண்ணே !! இங்கே வாங்க. 



இந்த மெட்டைக் கவனிங்க. என்று 



சொல்லிக்கொண்டு 



இருக்கும்போதே  திரு M.S.V. 



அவர்களும் அங்கே அவர்களொடு 



பிரசன்னமானார். அவரும் அந்தப் 



பையன் எழுப்பும் கொட்டாங்கச்சி 



பிடிலின் மெட்டை உற்றுக் 



கவனித்தார். ஸ்ரீதர் இசை 



அமைப்பாளரைப் பார்த்து. இந்த 



மெட்டுத்தான் நான் எதிர் பார்த்தது. 



அது இங்கே எனக்கு 



கிடைத்துவிட்டது அந்த சிறுவன் 



மூலமாக. உம்.. 



ஆரம்பிங்க..ஆரம்பிங்க..மெட்டைப் 



போடுங்க. கவிஞரே !! பாடலை 



யோசியுங்க !! என்றாராம் 



படபடவென. உடனே விஸ்வநாதன். 



ஸ்ரீதரைப் பார்த்து, என்ன அண்ணே 



இது ஒரு மெட்டு. இதுக்கு ஒரு 



பாட்டா? சத்தியமா சொல்றேன். 



எந்தக் கொம்பனாலும் இந்த 



மெட்டுக்கு பாட்டு எழுத முடியாது 



என்றாராம். உடனே ஸ்ரீதரின்கண்கள் 



கவிஞரைப் பார்க்க, அவரோ தனது 



வலது உள்ளங்கைதனை உயர்த்திப் 



பிடித்தபடியே வலது கை 



பெருவிரலை உயர்த்தி, வெற்றி 



என்று சொல்ல, விஸ்வநாதன் அந்த 



கொட்டாங்கச்சி பையன் போட்ட 



மெட்டை விஸ்வனாதனின் 



ஆர்மோனிய பெட்டி இசைத்திட ஒலி 



ஆரம்பம் ஆனது. மெட்டு இதுதான்:- 



டொயி..டொயி...டொயி... ட ...ட.. .. 



டொயி..டொயி....டொயி..டொயி...   



 டாட.. ட..டோயி..டொயி..டொயி... 



இதுதாங்க மெட்டு என்றாராம் 



விஸ்வநாதன். சொல்லி உடனே 



ஸ்ரீதரைப் பார்த்து  எண்ணே!! இந்த 



மெட்டுக்கு எப்படிண்ணே பாட்டு 



எழுத முடியும்? ஸ்ரீதர் விச்சுவைப் 



பார்த்து....உஸ்... பேசாமல் 



இரு..கவிஞர் பாடல் எழுதிட 



ஆரம்பித்துவிட்டார். என்பதனை 



சமிக்கை செய்து காட்டிட, ஒரு 5 



மணித் துளிகளுக்குள்ளாக பாட்டு 



தயார். கவியரசர் தாம் எழுதிய 



பாடலை மெல்லிசை மன்னரிடம் 



காண்பித்தார்.அந்தப் பாடல் 



இதுதான் அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே.  இப்போது பாடலைப் 



பாருங்கள். P.B.ஸ்ரீநிவாசும் 



இசைக்குயில் திருமதி ஜானகி 



அவர்களும் சேர்ந்து பாடிய அந்த 



வரலாற்றுச் சிறப்புமிக்க பாடலைப் 



பாருங்கள்:-                                                    



பொன்னென்பேன் !!                                    



சிறுபூவென்பேன் !! காணும்                 



கண்னென்பேன்  !!  வேறு                       



என்னென்பேன் !!..ஆ..ஆ..ஆ.. ஆகஆ.. 



சின்னஞ்சிறு பறவை                               



அன்னை அதன் மடியில்                         



தவழ்வதுபோல் நாம்                               



தவழ்ந்திருப்போம் !!




எப்படி எல்லாம் அந்தக் காலத்தில் 



பாடல்கள் உருவாகின பார்த்தீர்களா 



காலத்தால் அழித்திட இயலாத 



கானங்கள் அவை.கேட்டு நாமும் 



இன்புறுவோம் அன்பர்களே !!



நன்றி !! 



வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment