Thursday, 10 October 2013

மற்றவர்களின் குணத்திற்காக நீ உன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ளாதே !!






உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!




உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு 


எனது நெஞ்சம் கனிந்த வணக்கம் !!


இந்தக் கதை நடைபெறும் கால 


கட்டம் தென் தமிழகத்தில் பாண்டிய 


மன்னர்களின் ஆட்சி மேலோங்கி 


இருந்த காலம் அது.அந்த கால 


கட்டத்தில் வைகை ஆற்றில் கரை 


புரண்டு நீர் ஓடிக்கொண்டிருந்த 


காலம் அது. அப்போது வைகை நதிக் 


கரையின் ஓரத்தில் ஒரு முனிவர் 


அவர் பெயர் ஈஸ்வர லிங்க 


ஆச்சாரியார். உண்மையான சிவ 


பக்தர். எந்த உயிரினங்களுக்கும் 


தீங்கு செய்வதை தனது 


உள்ளத்தாலும் அறிந்திடாத உத்தமர் 


அவர். வீதியில் மரக்கட்டை செருப்பு 


அணிந்து நடப்பதே அவர் வழக்கம். 


அப்போதும் கூட மயில் இறகினால் 


ஆன நீண்ட தோகைதனை தனது 


இரு கரங்களால் ஏந்திப் பிடித்தபடி 


தான் நடந்து செல்லும் பாதையை 


சுத்தம் செய்துகொண்டேதான் அவர் 


நடப்பார். ஏன் என்றால் அங்கே 


ஏதாவது சிறு எறும்பு, ஈக்கள் இனம் 


தனது காலடியில் பட்டு அவைகள் 


உயிர் இழந்துவிடல் ஆகாது என்ற 


நல்ல எண்ணத்தில் அவர் 


செயல்பட்டு வாழ்ந்து வந்தார். ஒரு 


சமயம் ஆற்றுநீர் அருகினில் ஓடிட 


இவர் அந்தக் கரையின் ஓரமாக 


அமர்ந்து இறைவனது சிந்தனையை 


மனதில் எண்ணிக்கொண்டு (ஓம் 


நமச்சிவாய!!ஓம் நமச்சிவாய !! 


என்ற மந்திரத்தை உதடுகள் மட்டும் 


அல்ல உள்ளமும்நேசித்தன.)அப்படி 


ஆற்றின் கரையோரம் அவர் 


அமர்ந்திருந்த வேளை, ஆற்றினில் 


ஒரு கருந்தேள் நீரில் வீழ்ந்து 


உயிருக்குப் போராடி வந்தது.உடனே 


நமது ஆச்சாரியார் என்ன செய்தார் 


என்றால் ஒரு அரசஇலையை  வேறு 


வழி இன்றி அந்த இதழை லேசாக 


நீரில் நனைத்தால் மட்டுமே அந்தக் 


கருந்தேளை காப்பாற்றிட முடியும் 


என்பதனால் அந்த அரச மர இலை 


தனை நீரினில் நனைத்து அந்த 


தேளைக் காப்பாற்றினார் 


ஆச்சாரியார். அப்போது அரச மர 


இதழின் மீது அமர்ந்த கருந்தேள் 


நறுக் என அவரின் கையில் ஒரு 


கொட்டு கொட்டியது. இதை ஆற்றின் 


மறுகரையில் அமர்ந்திருந்த நமது 


காட்டான் கந்தன் பார்த்துக்கொண்டு 


இருந்தான். ஆனால் முனிவர் 


தன்னைக் கொட்டிய தேளை ஏதும் 


செய்யவில்லை. ஏன் என்றால் 


அவர்தான் உயிர்வதம் செய்யாதவர் 


ஆயிற்றே. இப்போது தேள் மீண்டும் 


நீரினில் விழுந்தது.மீண்டும்முனிவர் 


காப்பாற்றுகிறார். மீண்டும் தேள் 


அவரைக் கொட்டுகிறது. மீண்டும் 


தேள் ஆற்று நீரினில்  . இந்தக் கதை 


ஒரு தொடர்கதையாகவே நடந்து 


வருகிறது. ஆனால் முனிவரின் 


முகத்தில் அமைதியும் சாந்தமும் 


தவிர வேறு எந்த உணர்வுகளும் 


அங்கே காணப்படவில்லை. 


இப்போது மறுகரையினில்இத்தனை 


நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டு 


இருந்த நம்ம ஊரு காட்டான் கந்தன் 


முனிவரைப் பார்த்து கேட்டான். 


யோவ் !! சாமி !! உனக்கு என்ன ? 


கிறுக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கா ? 


அந்ததேள்தான் உன்னையைக் 


கொட்டிக்கொண்டே இருக்கிறதே ?நீ 


ஏன்யா காப்பாத்திக்கொண்டே 


இருக்கிற ? கேட்டான் கேள்வி நம்ம 


காட்டான் கந்தன் முனிவரைப் 


பார்த்து. அதற்கு முனிவர் 


புன்முறுவல் இதழ்களில் ததும்ப 


தம்பி !! தம்மிடம் வருவோரைக் 


கொட்டுவது தேளின் குணமப்பா !! 


அதனைக் காப்பாற்றுவது எனது 


குணமப்பா !! என்று உரைத்தாராம் 


முனிவர். பதில் ஏதும் சொல்லிட 


இயலவில்லை நம் கந்தனால். 


வாயை மூடிக்கொண்டே அந்த 


இடத்தை விட்டு அகன்றான் கந்தன்.



கதை கூறும் கருத்து:-  இறைவனால் 


படைக்கப்பட்ட இந்த உலகினில் 


வாழ்ந்துவரும் எல்லா ஜீவ 


ராசிகளுக்கும் அவரவர்களுக்கு 


என்று பொதுவாக ஒரு குணம் 


உண்டு. அதனை யாராலும் 


எவராலும் மாற்றிட இயலாது. 


எனவே நீயும் உனது குணத்தை 


சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றிக் 


கொள்ளாதே. அப்படி நீ செய்தால் 


வரலாறு உன்னை சபிக்கும். தேளின் 


வழி தேளுக்கு!! முனிவரின் வழி 


முனிவருக்கு !! இந்தக் 


கருத்தைத்தான் கவிஅரசர் 


கண்ணதாசன் தமது பாடல் 


ஒன்றினில் இப்படி எழுதி இருப்பார். 


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!! 


உனக்கு நீதான் நீதிபதி!! மனிதன் 


எதையோ பேசட்டுமே !! உந்தன் 


மனசைப் பாத்துக்கோ நல்லபடி !! 


என்று எழுதிய வரிகள் மனித இனம் 


இந்தப்புவியில் வாழும்வரை 


நிலவும் உண்மைக் கருத்து!! எனவே 


அன்பர்களே !! நீங்களும் உங்கள் 


கொள்கைகளை யாருக்காகவும் 


எவருக்காகவும் எங்கும் எப்போதும் 


மாற்றிக்க்கொள்ளவேண்டாம்  


வியாக்கியானம் செய்ய வேண்டாம். 


உங்களுக்கு உங்களதுமனசாட்சிக்கு 


எது சரி என்று படுகிறதோ எது 


நேர்மை என்று எது உண்மை என்று 


உறைக்கிறதோ அந்தக் 


கோட்பாடுகளில் இருந்து எள்ளின் 


முனை அளவு கூட அடுத்தவர்கள் 


என்ன நினைப்பார்களோ என்று 


எண்ணி அதற்கு அஞ்சி உங்களை 


நீங்களே மாற்றிக்கொள்ள 


முனையாதீர்கள். ஒருவேளை 


நீங்கள் அப்படிச் செய்தீர்கள் என்று 


சொன்னால் நிச்சயம் அந்தச் செயல் 


உங்களது பெயருக்கு களங்கம் 


ஒன்றினையே பெற்றுத் தரும் என்று 


நான் அடித்து ஆணித்தரமாகக் 


கூறிடக் கடமைப்பட்டு உள்ளேன். 


நான் மேலே உங்களுக்குச் சொன்ன 


கருத்தைத்தான் உலக சிந்தனைச் 


சிற்பி, தத்துவங்களின் வித்தகன் 


என்று அகிலமே இன்றளவும் 


பாராட்டிடும் அறிஞன் சாக்ரடீஸ் 


சொல்வான் என்று முத்தமிழ் 


வித்தகர் தமிழ் இனத் தலைவர் திரு 


மு.கருணாநிதி அவர்களின் 


அன்பிற்கும் பாசத்திற்கும் என்றும் 


உரியவராகத் திகழ்ந்த முன்னாள் 


மத்திய அமைச்சர் காலஞ்சென்ற 


ஆனால் காலத்தால் அழித்திட 


முடியாத பல திரைப்படங்களுக்கு 


தனது சீரிய சிந்தனைகளால் 


எழுத்துவடிவம் தந்தவரும் ஆன 


முரசொலி மாறன் தான் வசனம் 


எழுதி நடிகர் திலகம் சிவாஜி 


கணேசன் நடித்து வெளிவந்துஅந்தக் 


காலத்தில் வெற்றிக்கொடி கட்டிப் 


பறந்த திரைப்படமாம்



        " அன்னையின் ஆணை "                 



திரைப்படத்தில் வரும் ஓரங்க 


நாடகம் " சாக்ரடீஸ் " அந்த நாடக 


வசனங்களை நீங்களும்தான் சற்று 


படித்து இன்புறுங்களேன்:-                   


 சாக்ரடீஸ்:- (ஏதென்ஸ் நாட்டின் 


தெரு முனைகளில் நின்றுகொண்டு 


அந்நாட்டு இளைஞர்களுக்கு அவர் 


விடுக்கும் அறைகூவல் நிறைந்த 


பேச்சுக்கள்)                                             


 ஏதென்ஸ் நாட்டுப் பெருமக்களே !! 


நாற்றம் எடுத்த சமுதாயத்தில் 


நறுமணம் கவிழ்விக்க ஓடி 


வாருங்கள் ஓடி வாருங்கள் என 


இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன். 


வீரம் விலை போகாது. தீட்டிய 


வாளும் தினவெடுத்த தோள்களிலே 


தாங்கிய ஈட்டியும் போதாது 


தீரர்களே !! நான் தரும் 


அறிவாயுதத்தையும் சற்று ஏற்றுக் 


கொள்ளுங்கள். அவர் சொன்னார்! !


இவர் சொன்னார்   என்று, 


அறிவிழந்து, தடுமாற்றம் 


அடையாமல், எவர் சொன்ன 


சொல்லானாலும் அதனை உனக்கே 


இயல்பான பகுத்தறிவால் நீ 


சிந்தித்துப் அப்படி சிந்தித்துப்பார்த்த 


தினால்தான் இந்த சிலை வடிக்கும் 


சிற்பி சிந்தனைச் சிற்பியாக 


மாறினான் .உன்னையேநீ அறிவாய்!!


உன்னையே நீ அறிவாய் !!


அறிவாயுதம் !! அறிவாயுதம் !! 


அனைத்துலகும் அடிபணியும் 


அஸ்திரம் !!                


என்று அந்த ஓரங்க நாடகத்தில் 


வரும் அறிவு சார்ந்த வசனங்களை 


எனக்காக நீங்கள் செவி மடுத்து 


அதனை நீங்களும் உங்கள் 


வாழ்வினில் கடைப்பிடித்து இந்த 9௦ 


வயதிலும் தள்ளாடாமல் சக்கர 


நாற்காலியில் அமர்ந்து இந்தத் 


தமிழகத்திற்கு இன்னும்என்னென்ன 


நன்மைகளை தன்னால் செய்திட 


முடியும் ,செய்திட வேண்டும் என்று 


எத்தனைமுறை இந்த கேடுகெட்ட, 


நன்றி மறந்த, இலவசங்களுக்கு 


ஆசைப் பட்டு, ஆடு,மாடு, மற்றும் 


கோழிகளுக்காக, தருவார்கள் என்று 


எண்ணி கடைசியில் நெற்றியில் 


பட்டை நாமம் தீட்டப்பட்டு இன்று 


நடுத்தெருவில் நின்று கொண்டு 


கைகளைப்   பிசைந்து கொண்டு 


நின்றிடும் ஸ்ரீமான் பொதுஜனமே, நீ 


பட்ட துயர் இனி மாறும், ரொம்ப 


கிட்ட நெருங்குது நேரம், என்ற 


பட்டுகோட்டை கல்யாண 


சுந்தரத்தின் பாடல் வரிகள் போல 


நம் தமிழ் இனத்திற்கு 


உழைத்திட,பாடுபட, எத்தனை 


சோதனைகள்  வந்தாலும், அதனால் 


எத்தனைஎத்தனைவேதனைகளைச் 


சந்தித்தாலும், எத்தனை 


தோல்விகளை வாழ்கையில் 


அனுபவித்தாலும் மீண்டுஎழுந்திடும் 


பீனிக்ஸ் பறவைபோல நமக்கு நமது 


தமிழ் சமுதாயத்திற்கு அரும்பணி 


ஆற்றிட தலைவர் கலைஞர்,அவரது 


அரசியல் வாரிசு தளபதி ஸ்டாலின் 


போன்றவர்கள் இருக்கும் வரையில், 


ஏ தாழ்ந்த தமிழ் இனமே நீ நிச்சயம் 


ஒரு நாள் மீண்டு எழத்தான் 


போகிறாய் அது வரை பொறுமனமே 


பொறு என்று நமக்கு அறிவுரை 


வழங்கிடும் கலைஞரின் 


பொற்காலத் தலைமையில் இந்த 


தமிழ்நாடு மீண்டுஎழத்தான் 


காத்திருக்கிறது !! காத்திருக்கிறது !!


என சொல்லிஎனதுஇந்தமிக நீண்ட 


அறிவு சார்ந்த கட்டுரைதனைப் 


படித்திட்ட அத்துணை அன்பு 


உள்ளங்களுக்கும் எனது இதயம் 


கனிந்த நன்றிகளை அவர்களது 


பொற்கமல பாதங்களில் வைத்து 


வணங்கி நான் இந்த அளவிலே 


உங்கள் அனைவரிடமும் இருந்து 


விடை பெறுகிறேன். மீண்டும் 


நாளை வேறு ஒரு தலைப்பினில் 


உங்கள் அனைவரையும் 


சந்திக்கிறேன் !! நன்றி !! வணக்கம்!!



அன்புடன். மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment