Tuesday, 8 October 2013

பெண்கள், ஆண்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாமல் நடப்பது இராமாயணக் காலம் முதலே நடைமுறையில் இருந்திருக்கிறது !!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம் 


உலகுக்கு!! 



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!! 



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!                     



பண்பும் அன்பும் ஒரு சேர இணைந்து 


பார் முழுவதும் வாழ்ந்து வரும் 


எனது உயிரினும் மேலாக நான் 


மதித்து வணங்கி வரும் அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகள் 


அனைவருக்கும் என் இனிய காலை 


வணக்கங்கள் உரித்தாகுக!!                 



பொதுவாக இந்த உலகில் உள்ள 


பூவையர்கள் அவர்கள் எந்த 


இன,மத, மற்றும் மொழி 


மாறுபாடுகள் உள்ளவர்கள் 


என்றாலும் அடிப்படையில் 


அனைத்து பெண்களிடமும் ஒரே 


ஒரு விஷயம் ஒற்றுமையாக ஒரு 


உணர்வு காணப் படுவது உண்டு.அது 


எந்தவிதமான உணர்வு என்று 


கேட்டால் அதுதான் ஆண்கள் 


கூறிடும் ஆலோசனைகளை, 


அறிவுரைகளை அதன் அடிப்படைத் 


தன்மையைப் பற்றி கொஞ்சம்கூட 


ஆராய்ந்திடாமல்நீஎன்ன சொல்வது?


அதை நான் எப்படி கேட்பது? என்று 


ஏளனமான, இளக்காரணம் மிகுந்த, 


பார்வைகளுடன் இந்தப் பார் 


முழுவதும் வாழ்ந்துவரும் 


பாவைகளுக்கு ஏன் இப்படி ஒரு 


குணம் வந்தது? இதற்கு யார் 


காரணம்? என்று பல ஆண்டுகளாக 


என் சிந்தனையை போட்டுக் 


குடைந்துகொண்டே வந்தேன். 


கடைசியாக இன்று அதிகாலை 


சுமார் 3 மணி அளவில் எனக்கு 


விடை கிடைத்தது. அதனை 


உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே 


நான் இப்போது காத்துக்கொண்டு 


இருக்கிறேன். விடை வேறு ஒன்றும் 


இல்லை. பெண்களின் இந்தசொன்ன 


பேச்சை,ஆலோசனையை,அறிவுரை


யைக் கேட்காமல்வாழ்ந்துவரும் 


குணம் இவர்களிடம் அமைந்திட 


முழுக்க முழுக்க யார் காரணம் 


என்று கேட்டால் அது வேறு யாரும் 


இல்லை அன்பர்களே. அது எல்லாம் 


நமது அவதாரப் புருஷன் ஸ்ரீ 


இராமபிரானின் பாரியாள் ஸ்ரீ 


சீதாதேவியே ஆகும். வனத்தில் 


குடில் அமைந்து வனவாச 


வாழ்க்கை வாழ்ந்து வரும் போது 


சீதாதேவியை கவர்ந்து கொள்ளும் 


நோக்கினால் வந்த 


இராவனேஸ்வரன் அங்கே 


மாயமான் வேடம்புனைந்து சீதா 


தேவியை அபகரிக்கும் 


எண்ணத்தோடு தோன்றிய போது 


தனது கொழுந்தன் இலட்சுமணன் 


வசம் தனது விருப்பத்தைத் 


தெரிவித்தாள் அண்ணியார் சீதா 


தேவியார். அப்போது கொழுந்தனார் 


இலட்சுமணன், அண்ணியாரிடம் 


நான் சென்று அந்த மானைப் பிடித்து 


வருவேன்ஆனால்தாங்கள்அதுவரை


எந்த சூழலிலும் இந்த தங்களைக் 


காப்பாற்றும் எல்லைக்கோட்டினை 


நீங்கள் தாண்டி வெளியே 


வரலாகாது அண்ணியாரே என்று 


ஆலோசனைகளையும் நல்ல 


அறிவுரைகளையும் 


வழங்கிவிட்டுத்தான் மானைப் 


பிடித்திடக் கிளம்புகிறான் 


கொழுந்தனார் இலட்சுமணன். 


கேட்டார்களா அண்ணியார்? இந்த 


அறிவுரைகளை? பின்பற்றினாரா 


தனது செல்லக் கொழுந்தனார் 


இலட்சுமணன் வழங்கிய 


ஆலோசனையைப் பின் பற்றினாரா 


அண்ணியார் சீதாதேவியார்? 


இல்லையே. ஏன் என்றால் அந்தக் 


கோட்டைத் தாண்டி வெளியே 


வரவில்லை சீதாதேவியார் என்று 


சொன்னால் இராமாயணம் என்ற 


காவியமே அங்கே இல்லையே? அது 


வேறு விஷயம். இங்கே நாம் நமது 


சிந்தனைக்குள் வைத்துக் கொள்ள 


வேண்டிய ஒரே ஒரு விஷயம் நான் 


தலைப்பினில் குறிபிட்டுள்ளது 


போல பெண்கள், ஆண்கள் 


சொல்லும் புத்திமதியைக்கேளாமல் 


நடப்பதற்கு ஆரம்பப் பிள்ளையார் 


சுழி போட்ட்டது நம் சீதாதேவிதான் 


அந்த எண்ணம் தான் இன்றுவரை 


இங்கே வாழ்ந்துவரும் அனைத்து 


பெண்களிடமும் அவர்களின் 


அடிப்படை குணமாக 


அமைந்துவருவதற்கு முக்கிய 


காரணம் என்று எடுத்து உரைத்து 


இந்தக் கட்டுரைதனை நான் நிறைவு 


செய்கின்றேன். மீண்டும் நாளை 


மற்றும் ஒரு தலைப்பினில் உங்கள் 


அனைவரையும் சந்திக்கிறேன். 


அதுவரை பொறுமையுடன் 


கட்டுரைதனைப் படித்திட்ட நல்ல 


உள்ளங்களுக்கு நன்றி பாராட்டி 


விடை பெறுவது உங்கள் அன்புத் 


தமிழ் பேசும் சகோதரன் மதுரை 


T.R.பாலு அன்பர்களே !! நன்றி !! 


வணக்கம் !! 

No comments:

Post a Comment