உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் ஒன்றினை நாம்
எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலாக நான்
போற்றி வணங்கி வரும் அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கங்களை சமர்ப்பித்துக்
கொள்கிறேன்.
அன்பர்களே !! இன்றைக்கு உலகம்
முழுதும் பேசப்பட்டுவரும் இந்த
இலங்கைத் தமிழர்கள் பற்றிய
விஷயங்கள், அவர்கள் தங்களது
உரிமைகளுக்காக போராடும் அந்த
உணர்ச்சிகள் நிறைந்த
வாழ்க்கையின் முக்கியமான
உயிரைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக, அந்த இலங்கைத்
தமிழர்கள் நடத்திவரும் தியாகம்
மட்டுமே தீபமாக எரிந்துவரும் அந்த
வேள்வி என்பது ஏறத்தாழ 4௦
ஆண்டுகளுக்கும் மேலாகவே
நடைபெற்றுவரும் நியாயமான
ஒரு சமூக,பொருளாதார,
வாழ்வாதார உரிமைகளை மீட்டிடக்
கோரி அந்த இலங்கை மண்ணில்
உத்வேகத்துடன் நடந்து வருகிறது
என்பதுதான் உண்மை அன்பர்களே.
இந்த இலங்கைத் தமிழர்கள்
என்பவர்கள் யார் ? அவர்கள்
எங்கிருந்து வந்தார்கள் ? அவர்களது
பூர்வீகம் என்னென்ன ? எதற்காக
அவர்கள் நம் தாயகமாம்
தமிழகத்தில் இருந்துஇலங்கைக்குச்
சென்றார்கள்? அவர்களை
இங்கிருந்து அங்கு கூட்டிச்
சென்றவர்கள் யார் யார்? எப்படி
இருந்த இலங்கையை இப்படி
சொர்ணபூமியாக அதை மாற்றிய
பெருமையும் அந்தப் பெருமைக்குப்
பின்னே தங்களது உதிரத்தை
வியர்வையாகவும் உடல்
உழைப்பினை அந்த மண்ணை காடு
மேடாக இருந்த இலங்கை நாட்டு
மண்ணை பொன் விளையும்
பூமியாக மாற்றிய அந்த ஏழைத்
தமிழனுக்கு அந்த நாடும் அந்த
நாட்டு மக்களும் அங்கே ஆட்சியில்
இருந்த அரசியல் கட்சிகளும் என்ன
மரியாதை செய்தது ? இந்த
உழைப்பினால் அங்கு வாழ்ந்திருந்த
தமிழ்இனம் பெற்ற பலன்தான்
என்னென்ன ? விடுதலைப்
போராட்டங்களின் மூலமாக
அவர்கள் இலங்கை நாட்டின்
வடக்குப் பிராந்தியம் முழுவதும்
வியாபித்துக் கிடந்த தமிழ்இனத்தின்
ஒட்டு மொத்த போராட்டக்குழுக்கள்,
தங்களுக்குள் யார் பெரியவன் ? யார்
இந்த மக்களை ஆட்சிசெய்திட,
அதிகாரம் காட்டிட ,யாருக்கு
உரிமையும் கடமையும் அதிகமாக
இருக்கிறது ? என்று அவர்களுக்குள்
நடத்திய உள்நாட்டு போராட்டத்தின்
விளைவு என்ன ஆயிற்று ? ஒரு
உண்மையான உழைப்பினை
மட்டிலுமே அந்த நாட்டு
மக்களுக்கும் அந்நாட்டு
மண்ணுக்கும் அர்ப்பணம் செய்து
தங்களது சொந்த வாழ்க்கையையே
இழந்து தவித்து அல்லல் உற்று
செத்து,செத்து,நாளுக்கு நாள் மடிந்து
கொண்டிருந்த, ஒரு உணர்ச்சிப்
பிரவாகம் நிறைந்த, அந்த தமிழ்
மக்களின் சுதந்திர தமிழ் ஈழம்,என்ற
வேள்வியை, இந்தப்
போராட்டக்காரர்கள் செய்த
தங்களது சுயநல உணர்வுகள்
என்னும் மழையினால் அந்த
மாபெரும் தியாக தீபப்
போராட்டத்தையே நீர்த்துப் போக
வைத்ததோடு மட்டும் அல்லாமல்
அவர்கள் கண்ட கனவு நாடானதமிழ்
ஈழம் என்ற நினைப்பினில் மண்
அள்ளிப்போட்டு அதற்கு மூடு விழா
காண்பதற்கு மட்டுமே உதவி
செய்ததுதான் இந்த சுயநல
போராட்டக் குழுவினர்கள் அந்த
நாட்டினில் ஏங்கித் தவித்த நம்
தொப்புள்கொடி உறவுக்கூட்டமான
தமிழ் இனத்தின் உணர்ச்சிகரமான
போராடத்தியே வேரறுக்கச்
செய்ததுதான் அவர்கள் கண்டபலன்.
இதனைத் தவிர வேறு எந்த
பலனையும் இவர்களது
கோஷ்டிப்பூசல்கள் அந்நாட்டில்
வாடித் தவித்த தமிழ் இன
மக்களுக்கு பரிசாகத் தந்ததே ஒழிய
வேறு எதையும் இந்த
போராடக்குழுவினரால் அந்நாட்டு
மக்கள் அடையவும் இல்லை.
பெறவும் முடிய வில்லை. நான்இந்த
இடத்தில் விடுதலைப் புலிகள்
என்னும் மாபெரும் போராட்டத்தை
வழி நடத்திச் சென்று வெற்றியின்
விளிம்பு வரை சென்று திரும்பிய
வேலுப்பிள்ளை பிரபகாரனையும்
சேர்த்துத்தான் சொல்கின்றேன் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
எனது இந்த மாபெரும் அரசியல்
சீராய்வுகள் நிறைந்த இந்தக்
கட்டுரை என்பது இந்த ஒரு
பகுதியோடு நிறைவு பெறுவதோ,
அல்லது
முடிவடைவதோ, இல்லை. இந்தக்
கட்டுரை, பல நாட்களுக்கு
பல இதழ்களாக விடுதலை என்ற
தோட்டத்தில் மலர்ந்த பலவண்ணப்
பூக்களாக பல பதிப்புகளாக
வெளிவர இருக்கிறது. அதனைத்
தொடர்ந்து படித்து நீங்கள் அந்த
வாடிவதங்கும் நம் தொப்புள்கொடி
உறவுகளான அந்த
ஈழத்தமிழனுக்காக, நீங்கள் சிந்தும்
ஒரு சொட்டுக் கண்ணீர், என்பது
அவரது, வாழ்வினைச் செழிப்பாக
ஆக்கி இந்த உலகமே முழு முயற்சி
எடுத்து, இன்றில்லாவிட்டாலும்
என்றாவது ஒரு நாள் அவர்கள்
சுதந்திர ஈழம் என்ற நாட்டை
அடைவார்கள், அடைந்தே
தீருவார்கள் என்கின்ற அந்த
தூய்மையான அறிவுச்
சிந்தனையோடு இந்த முதல்
பதிவினை நான் இங்கே நிறைவு
செய்கின்றேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! மீண்டும் விரைவில்
உங்கள் அனைவரையும் நான்
சந்திக்கிறேன். அதுவரை உங்கள்
அனைவரிடமும் நன்றி பாராட்டி
விடைபெறுகிறேன்.
நன்றி !!வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment