யாருக்கு எது சொந்தம் !! நிலத் தகராறு நிகழ்வின் போது நிலம் சொன்ன வேதம் !! ஒரு அறிவு பூர்வமான ஆராய்ச்சிக் கட்டுரை
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகத் தமிழர்களே !! வணக்கம் !!
பொதுவாக, இந்துக்களின் தர்மம்
என்பதில் முக்கியமாக கருதப்
படுவது எது என்றால், அதுதான்
பூர்வ ஜென்மம் என்பது. நம்
நாட்டினில் உள்ள ஏனைய
இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள்
இந்த பூர்வ ஜென்மம் என்ற கருத்தை
அவர்கள் ஒப்புக்கொள்வது என்பது
இல்லை. அது அவரவர்கள் மதத்தின்
உரிமை பற்றிய விஷயம். நான்
அதற்குள் செல்ல விரும்பவில்லை
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஆனால் ஜோதிட சிரோன்மணிகள்
எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ள
அரிய பெரிய நூல்களில் எல்லாம்
இந்த பூர்வபுண்ணிய பலன்களுக்கு
மிக அதிகமாகவே முக்கியத்துவம்
தரப்பட்டுள்ளது அன்பர்களே!! ஆம்.
லக்கினத்தில் இருந்து 5ஆம் இடம்
தான் புத்திர ஸ்தானம்/ மற்றும்
பூர்வபுண்ணிய ஸ்தானம்
எனச்சொல்லி அழைக்கப்படுவது.
அதாவது இதற்குப் பொருள் என்ன
என்று கேட்டால்,எந்த ஒரு
மனிதனும் அவனது பூர்வ ஜென்ம
காலங்களில் எந்த அளவுக்குப்
புண்ணியங்கள்/பாவங்கள் செய்து
இருக்கிறானோ அந்த இனங்களில்
எது மேலோங்கி/அதிகமாக
உள்ளதோ அதன் அடிப்படியிலேயே
அவனுக்கு புத்திரர்கள் என்று
சொல்லப்படும் மைந்தர்கள்
அமைவார்கள் என்பது ஜோதிட
சிரோன்மணிகள் நமக்கு அருளிச்
சென்றுள்ள ஜோதிட
சாஸ்திரக்கலை சொல்லிடும்
உண்மைகளாகும். சரி !! மைந்தர்கள்
விஷயத்தில் இப்படி என்றால்
உடன்பிறந்தோர்கள் என்று
சொல்லப்படும் சகோதர
ஸ்தானங்கள் என்றழைக்கப்
படுபவை மூன்று மற்றும்
பதினொன்று ஆகிய இரண்டு
இடங்களே ஆகும். இவைதவிரநமது
இந்து தர்ம சாஸ்த்திர நூலில் என்ன
குறிப்பிடப்பட்டுள்ளதுஎன கேட்டால்
சென்ற ஜென்மத்தில் வாழ்ந்திருந்த
கடும் பகையாளிகள், விட்டுப்போன/
பாக்கயுள்ள/மீதம் உள்ள அவர்களது
வஞ்சகங்களை/சண்டைகளை/பழி
தீர்க்கும் உணர்வுகளை எப்படி சரி
செய்து அவற்றை நேராக்கிட
முடிகிறது என்று கேட்டால் அது
இந்த ஒன்றினால் மட்டுமே இயலும்
என அன்று முதல் இன்று வரை
நம்மில் கருதப்பட்டு வந்து உளது.
அதுதான் ஒரே தாய் வயிற்றினில்
அண்ணன், தம்பிகளாகப் பிறந்து,
விட்டுப்போன
எஞ்சிஉள்ளஅந்தபோனஜென்மத்தில்
மீதம் உள்ள பகை உணர்வுகளைத்
தீர்த்துக்கொள்கின்றார்கள் என்பதே
ஜோதிடக்கலை மட்டும் அல்ல இந்து
தர்ம நூல்கள் அனைத்திலும் நமக்கு
சொல்லிச் சென்றுள்ள அறிவுரையே
என்றால் அது மிகையான சொல்
அல்ல அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
ஆக இப்போது நாம் கட்டுரையின்
மையப் பகுதிக்குள்ளாக வந்து
விட்டோம் அன்பர்களே. அது ஒரு
தென்தமிழ்நாட்டின் கடற்கரையை
ஒட்டி உள்ள மாவட்டம்.தூத்துக்குடி
என்பது அதன் பெயர். அங்கே ஒரு
தாய் வயிற்றில் பிறந்த அண்ணன்
தம்பி தான் பரமன் மற்றும் சங்கர்
ஆகும். இளம் வயதில் இருவரும்
அண்ணன் தம்பி என அப்படி ஒரு
பாசப்பிணைப்புகளோடு வளர்ந்து
வந்த அவர்களுக்கு திருமணம்
ஆனபின்பு உறவினில் விரிசல்கள்
வளர ஆரம்பித்து விட்டது என்பதே
உண்மை. அவரவர்களது
மனைவியர்கள் தந்திட்ட அந்தத்
தலையணை மந்திரத்தில்
கட்டுப்பட்ட அவர்கள்
நாளடைவினில் ஒருவர் மற்றவரை
பரம எதிரிகள் என்கின்ற
கண்ணோட்டத்தில் பார்க்கத்
துவங்கி விட்டனர் என்பதே
உண்மை. எல்லாம் இந்தத்
தலையணை மந்திரம் என்பது
செய்கின்ற வேலையே ஆகும்
அன்பர்களே. இந்தத் தலையணை
மந்திரம் என்பது ஏதோ
ரிஷிகளாலோ இல்லை
முனிவர்களாலோ அல்லது
சித்தர்களாலோ எழுதப்பட்டது
அல்ல அன்பர்களே !! இது
ஒவ்வொரு ஆண்மகனுக்கும்
திருமணம் என்கின்ற
சிறைச்சாலைக்குள் தன்னை
ஆயுள்கைதியாக தானே
தண்டனையை அனுபவிக்க
மனமகிழ்ச்சியுடன் மாலையும்
கழுத்துமாக அந்தப் பெண்ணிற்கு
தாலி கட்டி ( அந்தத் தாலிக்கயிறு
தான் அன்பர்களே இன்றைய தினம்
நூற்றுக்கு 9௦ விழுக்காடுகளுக்கு
மேல் உள்ள ஆண்மகன்களுக்கு
அவர்களாகவே அணிவித்துக்
கொள்ளும் சாவை அணைத்திட
முடியாத, ஆனால் சாவுக்கு ஒப்பான
மரண வேதனையை அவனுக்கு
அள்ளித்தருகின்ற தூக்குக்
கயிறாகவே அமைந்து விடுகின்றது
என்பதே 1௦௦ க்கு 1௦௦ சதவீதம்
உண்மை நிறைந்தது அன்பர்களே.
அதைத்தான் நான் வேடிக்கையாக
குறிப்பிடுவதுண்டு. யாராவது
எனக்கு அவர்களது திருமணப்
பத்திரிகை கொண்டு வந்து தந்து
அழைத்திடும் போது நான்
அவர்களிடம் வேடிக்கையாகக்
கூறுவது என்னவென்றால், என்ன
தம்பி ஆயுள் கைதியாக உன்னை
ஆக்கிக்கொள்ள முடிவெடுத்து அந்த
அறிவிப்பினை இப்படி பத்திரிக்கை
மூலமாக பறைசாற்ற
வந்தனையோ? என
குறிப்பிடுவதோடு நில்லாமல்
அவர்களிடம் கூறுவேன், திருமணம்
என்பது ஒரு சிறைச்சாலை. அதனுள்
புகுந்து தங்களுக்கு தாங்களே
தண்டனை பெற்றுக்கொள்வதில்
அக்கறையும் ஆர்வமும் உள்ள
உன்போன்ற இளைஞர்கள் அந்த
சிறைச்சாலைக்குள் செல்வதற்கு
முன்டியடுத்துக்கொண்டு
வரிசையாக நிற்பவர்கள் மத்தியில்,
ஏற்கனவே அங்கே
சிறைச்சாலைக்குள் உள்ளே உள்ள
ஆயுள் கைதிகள் எல்லோரும்
எப்போது எங்களை இந்த
சிறைச்சாலையில் இருந்து
வெளியே விடப்போகிரீர்கள் என்று
சிறை வாயிலில் போராட்டம்
செய்பவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்று
குறிப்பிடுவதுண்டு. இந்தக்
கருத்தினை மையமாக
வைத்துத்தான் கவியரசர்
கண்ணதாசன் " நிச்சய தாம்பூலம் "
என்ற நடிகர் திலகம் நடித்து
வெளிவந்த படத்தில் ஒரு பாடலின்
மூலமாக நமக்கு விளக்கிக்
கூறுவார். அது என்ன பாடல்
என்றால் :-
படைத்தானே !! படைத்தானே !!
மனிதனைஆண்டவன்படைத்தானே!
வளர்த்தானே!!வளர்த்தானே!!
மனதினில் கவலையை
வளர்த்தானே!! மனதில் கவலையை
வளர்த்தானே !! (படைத்தானே )
கொடுத்தானே !! கொடுத்தானே !!
மறதியை ஆண்டவன்கொடுத்தானே
பிரித்தானே !! பிரித்தானே !!
மனதையும்கவலையும்பிரித்தானே!!
(படைத்தானே)
குரங்காய் இருந்த மனிதன் மனதில்
குழப்பம் ஏதும் இல்லை !!
குடும்பம் மனைவி அண்ணன், தம்பி
கூட்டம், சிறிதும் இல்லை !!
ஆசை, பாசம், காதலில் விழுந்தான்,
அமைதியைக் காணவில்லை !
அலைந்தான் !! தவித்தான் !!
துடித்தான் !! மடிந்தான் !! யாருக்கும்
லாபமில்லை !!
(படைத்தானே)
தன்னந்தனியே பிறந்தவன்நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா !!
இன்னொரு உயிரைத் தன்னுடன்
சேர்த்தான் !!
என்றும் தொல்லையடா !!
இத்தனை சிறிய மனிதனின்
தலையில் எத்தனை சுமைகளடா!!
இருபதில் தொடங்கி எழுபது
வரைக்கும் என்றும் மயக்கமடா !!
(படைத்தானே)
படைத்தானே !! படைத்தானே !!
மனிதனைஆண்டவன்படைத்தானே!
வளர்த்தானே !! வளர்த்தானே !!
மனதினில் கவலையை
வளர்த்தானே !! வளர்த்தானே !!
(இத்துடன்பாடல்நிறைவுபெறுகிறது)
ஆக இந்தத் தலையணை மந்திரம்
என்பதன் உண்மைக் கூற்று என்பது
வேறுஎதுவும் இல்லை அன்பர்களே !!
மனைவி "எதுசொன்னாலும்"அதை
அப்படியே வேதவாக்காக எடுத்துக்
கொண்டு நாம் அவர்கள்(மனைவி)
விரும்பியது விரும்பியபடியே நாம்
(கணவன்) செய்து முடித்து விட்டால்
அவர்கள் (மனைவி) அந்தத்
தலையணை மந்திரம் என்ற
ஆயுதத்தை தங்களது கரங்களில்
எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
(இதற்கு உண்மை அர்த்தம்
இரவினில் நாம் என்ன
சொல்கிறோமோ, எப்படி இருக்க
வேண்டும் என்று எண்ணி
இருந்தோமோ அதற்குத் தக்கபடி
அவர்கள் நம்மிடம் உறவினில்
எந்தவிதமான பிரிவுகளையோ,
அல்லது மறுப்புகளையோ ஒரு
போதும் காண்பிக்க மாட்டார்கள் !!
ஆனால் அதற்கு மாறாக, அவர்கள்
சொல்லுகின்ற விஷயங்கள் பத்து
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அதில் ஒன்பது அவர்கள் சொல்லிய
படியே நாம் செய்திருந்தாலும் கூட
அந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும்
கணவன் இது தேவை இல்லை
என்று சொல்லிவிட்டால் அது
மட்டுமே போதுமானது.
மனைவிமார்கள் தாங்கள் அதுவரை
மறைத்து வைத்திருந்த தங்களின்
இராட்சஷி குணத்தை அப்படியேஒரு
நொடியில்வெளிக் காண்பித்து நாம்
என்ன சொன்னாலும் அதை காதால்
வாங்காமல் செவிடு போலவே
இருப்பார்கள். அது மட்டும்
அன்பர்களே !! நாம் இரவில் உறவை
நாடி அவள் முகம் இருக்கும்தெற்குத்
திசை நோக்கி இருகும்போது அவள்
வடக்குத் திசை பார்த்து
இருந்தால்தான் நம் முகத்தை முகம்
பார்க்கும். உறவு சுகத்தில் சுகம்
சேர்க்கும். ஆனால் இப்போதுதான்
அவர்களிடம் அந்த இராட்சஷகுணம்
குடிகொண்டு உள்ளதே!! அவர்கள்
நம்முடன் முகம் காட்டாமல்
அவர்களும் அதே தெற்குத்திசை
நோக்கியே நம் அருகே படுத்துக்
கொள்வார்களாம். அவ்வாறுநமக்கு
அவர்களின் பின்புற எழில்களை
காட்டிகொண்டு நம்மைப்
புறக்கணிப்பார்கள் என்று எனது
அனேக நண்பர்கள் அவர்களது
மனைவிமார்கள் அவ்வப்போது
செய்திடும் செட்டியான
குணங்களைப் பற்றி என்னிடம்
அழுது முறையிடுவதும் உண்டு.
ஆனால் எனது இல்லக்கிழத்தி
அப்படிப்பட்ட குணம் உடையவள்
அல்ல என்பதனை நான் இங்கே
கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
எங்களுக்குத் திருமணம் முடிந்து
38ஆண்டுகள் நிறைவு பெற்று
(திருமணத் தேதி 29-௦1-1975)இப்போது
39 ஆவது ஆண்டினில் நான் " பீடு
நடை " போட்டுக்கொண்டு இருக்கும்
இன்றைய தேதி வரை என் மனைவி
என்னிடம் எப்படி நடந்துகொள்வாள்
என்றால் :-
கண் ஆனால் அவள் இமை ஆவாள்!!
காற்றானால் அவள் கொடிஆவாள்!!
மண் என்றால் அவள் மரம் ஆவாள்!!
மரம் ஆனால் அவள் கனி ஆவாள்!!
உள்ளம் என்பது உள்ளவரை அவள்
மனமே என் பள்ளியறை !!
கல்லில் வடித்த சொல் போலே அது
காலம் கடந்த இன்பநிலை !!
இதுதான் அன்பர்களே !! நாங்கள்
இதுவரை வாழ்ந்திருந்த வாழ்க்கை
நெறிமுறை !!
அன்பர்களே !! ஒரு முக்கியமான
அலுவலின் காரணமாக நான் இன்று
காலை 1௦ மணியளவில் வெளியே
செல்ல இருப்பதால் இன்னும் இந்தக்
கட்டுரையில் உள்ள மீதி
விஷயங்களை நான் அடுத்து
உங்கள் கண்களுக்கு விருந்தாக
படைக்க இருக்கிறேன் என்று
சொல்லி இந்த அளவில் உங்களிடம்
இருந்து விடை பெறுகிறேன்.
(தொடரும்)
மற்றவை பிறகு !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment