Tuesday, 12 November 2013

அது 1971ம் ஆண்டு !! அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டிய கலைஞர். திரு மு.கருணாநிதி அவர்களின் அரசில் சாயதுரியம்/இராஜ தந்திரம் வெற்றி பெற்றது பற்றிய ஒரு விளக்கங்கள் நிறைந்த அரசியல் நெடி மிகுந்த அலசல் கட்டுரை !! உங்கள் கனிவான கவனத்திற்கு !!






உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் 



அனைவருக்கும் எனது இதயம் 



கனிந்த வணக்கங்கள்.                         




அன்பர்களே !! இன்றைய தினம் 



உங்கள் அனைவரின் சிந்தனைக்கும் 



விருந்தாக, 1971ம் ஆண்டு 



தமிழகத்தில் நடைபெற்ற, அகில 



இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 



"சமாதி "கட்டிய பெருமை பெற்ற 



கலைஞர் திரு மு.கருணாநிதி 



அவர்களின் அரசியல் சாதுரியம்/ 



இராஜ தந்திரம் வெற்றி பெற்றது 



பற்றிய ஒரு அரசியல் நெடி மிகுந்த, 



விளக்கங்கள் நிறைந்த ஒரு அலசல் 



கட்டுரை ஒன்றினை உங்களது 



கனிவான கவனத்திற்கு 



வழங்குவதில் நான் உள்ளபடியே 



மிகவும் மனமகிழ்ச்சி அடைகிறேன் 



என் அன்புத்தமிழ்உடன்பிறப்புகளே!! 



1967ல் நடைபெற்ற தமிழகத்திற்கான 



சட்டமன்ற பொதுத் தேர்தலில் 



படுதோல்வி அடைந்தது ஒன்றுபட்ட 



இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. 



மூதறிஞர் இராஜாஜி வகுத்துத் தந்த 



புதிய அரசியல் கண்டுபிடிப்பான 




"கூட்டணி "  என்ற வலுவான 



ஆயுதத்தினால் அந்த வெற்றியைப் 



பெற முடிந்தது. பேறிஞர் 



அண்ணாவின் தலைமையில் 



தமிழகத்தில் திராவிட முன்னேற்ற 



கழகத்தின் ஆட்சி மலர்ந்தது. நிதி 



அமைச்சராக மறைந்த முன்னாள் 



நிதி அமைச்சராக நெடுஞ்செழியன் 



அண்ணாவிற்கு அடுத்த இடத்தை 



பெற்றிருந்தார் அவர். திரு கலைஞர் 



மு கருணாநிதி அவர்களுக்கு 



அண்ணா பொதுப்பணி அமைச்சர் 



என்ற சீரிய அந்தஸ்து வழங்கி 



இருந்தார். ஆனால் விதி செய்த சதி 



என்பதா ? அல்லது கலைஞர் 



ஜாதகத்தில் சுக்கிர திசை ஆரம்பம் 



ஆனதா ? எனக்குத் தெரியவில்லை 



இரண்டே இரண்டு ஆண்டுகள் ஆட்சி 



செய்து புற்று நோயின் காரணமாக 



அண்ணா மறைந்திட, அவருக்கு 



அடுத்த இடத்தில் இருந்த மறைந்த 



நாவலர் நெடுஞ்செழியன் இனி 



தாமே முதல்வர் பதவிக்கு உரியவர் 



என்று சொந்தம் கொண்டாடி 



மகிழ்ந்து முன்வர, இதனை 



ஏற்றுக்கொள்ள கலைஞர் திரு 



மு.கருணாநிதி அவர்கள் என்ன 



முட்டாளா ? மூடரா? அல்லது 



மடையரா ? பார்த்தார். அரசியல் 



வானின் சாணக்கியகுலத் திலகம். 



மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று 



கலைஞரால் பட்டமும் 



பாராட்டுதலும் பெற்ற M.G.R. 



கலைஞருக்கு ஆதரவுக்கரம் நீட்டிட 



தமிழகத்தின் தன்னிகரில்லாத் 



தலைவராக, முதல்வராக, வலம் 



வந்தார் கலைஞர் அவர்கள். இது 



நடந்து 44 ஆண்டுகள் முடிந்து 



இப்போது 45ஆவது ஆண்டு 



நடைபெற்றுக்கொண்டு உள்ளது. 



ஏதோ மேலேகுறிப்பிடப்பட்டுள்ள 



நிகழ்வுகள் இப்போதுதான் நடந்து 



முடிந்தது போல எனது 



நினைவினில் உள்ளது அன்புத்தமிழ் 



உடன்பிறப்புகளே !! அங்கே 



புதுடெல்லியில் அன்னை 



இந்திராகாந்தி தலைமையில் 



காங்கிரஸ் அரசாங்கம் பலவிதமான 



சோதனைகளைக் கடந்து ( மன்னர் 



மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய 



மாயம் இதுபோன்ற அக்னிப் 



பரீட்சைகளின்போது 



அம்மையாருக்கு ஆதரவுக் கரம் 



நீட்டிட கலைஞர் தயங்கிடவில்லை. 



அன்றைய அரசியல் வாதிகளில்ஒரு 



சிலருக்கு மட்டுமே மண்டையில் 



சிறிதளவே மூளை உள்ளநிலையில் 



தலைவர் கலைஞர் அவர்களுக்கோ 



உடம்பு முழுவதும் மூளை என்று 



அரசியல் வித்தகர்கள் 



அதிசயித்திருந்த காலம் அது. 



நியாயப்படி 1972ம்ஆண்டுதான் 



புதுடெல்லி பாராளுமன்றத்திற்கும் 



சரி, தமிழக சட்டமன்றத்திற்கும் சரி 



பொதுத்தேர்தல் வந்திருக்க 



வேண்டிய காலகட்டத்தில், அன்னை 



இந்திராகாந்தி அம்மையார் 



கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, 



பழைய கட்சிப் பெருச்சாளிகளின் 



தொல்லைகளை முற்றிலும் 



தோல்வியுறச் செய்திட வேண்டி 



ஓராண்டுக்காலம் முன்கூட்டியே 



அதாவது 1971ம் ஆண்டிலேயே 



பொதுத் தேர்தலை அறிவித்து 



விட்டார். அதுபோது அகில இந்திய 



காங்கிரஸ் கட்சி இருகூறுகளாகப் 



பிரிந்திருந்த நேரம் அது. பழம்பெரும் 



பெருச்சாளிகளான தலைவர்கள் 



அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் 



தமது வசமாக்கி ஸ்தாபன 



காங்கிரஸ் கட்சி எனவும்அதற்குஎன 



உண்டான பழமையான தேர்தல் 



சின்னமான நுகத்தடி பூட்டிய 



காளைகள் உள்ள ஏர் உழவன் 



சின்னத்தையும் ஸ்தாபனகாங்கிரஸ் 



கட்சிதன்வசம்வைத்துக் கொண்டது. 



இந்திரா காந்தி அம்மையாரின் 



கட்சிக்கு " இந்திரா காங்கிரஸ் " என 



பெயர்சூட்டப்பட்டு பசுவும் கன்றும் 



சின்னத்துடன் போட்டி இட்டது 



அக்கட்சி. (இந்த அனைத்து 



வேலைகளிலும் லீலைகளிலும் 



அன்னை இந்திரா காந்தி 



அம்மையார், அரசியல் சாணக்கியர் 



தலைவர் கலைஞர் அவர்களின் 



சீரிய ஆலோசனைகளை 



அவ்வப்போது கேட்டுப் பெற்றுக் 



கொண்டிருந்த காலம் அது. வந்தது 



1971ம் ஆண்டு பொதுத் தேர்தல். 



பார்த்தார் கலைஞர். அவரது 



மின்னல் செயற்பாடுகள் 



நிறைந்திட்ட அவரது மூளை சற்றே 



எதிர்காலத்தை முன்கூட்டியே 



யோசித்திடும் திறமைபெற்ற 



கலைஞரோ சிந்தித்தார். தாமும் ஏன் 



முன்கூட்டியே அதாவது 1972ம் 



ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக 



சட்டமன்ற தேர்தலை நாமும் ஏன் 



நடைபெறப்போக இருக்கும் 



நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 



நடத்திடக் கூடாது என்று அந்த 



தமிழ்நாட்டு அரசியல் வித்தகர் 



நவீன சாக்ரடீஸ் யோசித்தார் பின் 



அப்படியே தாமும் நடத்திடுவது 



என்று முடிவும் எடுத்தார் கலைஞர் 



அவர்கள். இப்போது இந்திரா 



காங்கிரஸ் புது டெல்லித் தலைமை 



நிலைய தூதுவர்கள் தலைவர் 



கலைஞரோடு ஆலோசனை 



நடத்திட அங்கிருந்து சென்னை 



வந்து பேச்சு வார்த்தை 



நடத்தினார்கள். பார்த்தார் கலைஞர். 



இப்போது இந்த இந்திரா காங்கிரஸ் 



கட்சி என்பது அறிமுக 



நிலையில்தான் உள்ளது. ஆனால் 



எதிர்காலம் அதற்குத்தான் உள்ளது 



என்பதனைக் கணித்த தலைவர் 



கலைஞர் இங்கே அரசியல் 



வணிகராக உருமாறி காங்கிரஸ் 



தலைமை நிலைய தூதுவர்களோடு 



கூட்டணி பேச்சுவார்த்தையின் 



போது கண்டிப்பான முறையில் 



சொன்னது என்னவென்றால், 



இப்போதுதான் உங்கள் கட்சி 



அரசியல் அரங்கினுள் பிரவேசம் 



செய்திருக்கிறது. தவிரவும்உங்களது 



முக்கியக் குறிக்கோள் 



புதுடெல்லியில் ஆட்சியைப்பிடிப்பது 



மட்டுமே. சட்டசபையைப் பற்றி 



இப்போது உங்களுக்கு எந்தவிதக் 



கவலையும் தேவையற்றது. எனவே 



உங்களுக்கு நாங்கள் கூட்டணியில் 



இணைந்திடும் உங்களுக்கு 11 



பாராளுமன்ற தொகுதிகளைத் 



தந்திடத் தயார். ஆனால் சட்டசபைத் 



தேர்தலில் உங்களுக்கு ஒரு 



இடம்கூடக் கிடையாது என்று 



உறுதிபடச் சொல்லியதன் விளைவு. 



இந்திரா காங்கிரசுக்கு வேறு வழி 



ஏதும் தெரியாததன் காரணமாக 11 



பாராளுமன்ற இடங்களுக்கு மட்டும் 



ஒத்துக்கொள்வது என்று 



ஒப்பந்தத்தில் கையொப்பம் 



இட்டார்கள். கலைஞரின் இராஜ 



தந்திரம் அங்கே வெற்றி பெற்றது. 



தமிழகத்தில் அமோக வெற்றி 



பெற்றது தி.மு.க. அதேபோல 



பாராளுமன்ற தேர்தலிலும் 



காங்கிரஸ் தாம் போட்டிஇட்ட 11 



இடங்களிலும் வென்றது. அங்கே 



கலைஞரின் இராஜ தந்திரமும் 



வென்றது. இத்தோடு காங்கிரஸ் 



தனது தனித்தன்மையையும் இழந்து 



தனது சொந்தக் கால்களில் நிற்கும் 



தகுதியை இழந்து, யாராவது 



ஒருவரின்முதுகினில்மட்டுமே மாறி 



மாறி சவாரி செய்திடும் ஆற்றலை 



(தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.)



மட்டுமே அந்தக் கட்சியால் பெற 



முடிந்ததே தவிர, தானாக, சுயமாக, 



சொந்தக் கால்களில் நின்று 



போட்டியிடும் தகுதியை இழக்க 



வைத்திட்ட  பெருமை 1971ல் 



கலைஞர் அவர்கள் 



ஏற்படுத்திக்கொண்ட அந்த 11 



பாராளுமன்ற இடங்கள் மட்டுமே, 



சட்டசபையினில் 



காங்கிரசுக்கு எதுவுமே கிடையாது 



என்று செய்த அந்த ஒப்பந்தம்தான் 



அகில இந்திய தேசிய காங்கிரஸ் 



கட்சி என்று பின்வரும் நாட்களில் 



பெயர் பெற்றுக்கொண்ட 



அப்போதைய இந்திரா காங்கிரஸ் 



கட்சிக்கு "சமாதி " கட்டிய பெருமை 



தலைவர் கலைஞர் அவர்களை 



மட்டிலுமே சாரும் என்று சொல்லி 



நான் இந்தக் கட்டுரைதனை நிறைவு 



செய்கிறேன் அன்பர்களே !! 



இப்போது உள்ள நிலைமை 



காங்கிரஸ் கட்சிக்கு:- இலங்கையில் 



நடைபெற உள்ள காமன்வெல்த் 



மாநாட்டிற்கு வெளயுறவுத் துறை 



அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் 



அவர்களை அந்த மாநாட்டிற்கு 



அனுப்பியதன் மூலமாக எதிர்வரும் 



2௦14 ம் ஆண்டு நடைபெற உள்ள 



 பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் 



கட்சிக்கு, தமிழகம் மற்றும் புதுவை 



ஆகிய இவ்விரண்டு 



மாநிலங்களிலும் ஒரு இடம் கூடக் 



கிடைக்காத நிலைமையை அந்தக் 



கட்சியே எற்படுத்திகொண்டதை 



பார்த்திடும்போது குதிரை கீழே 



தள்ளியதும் போதாது என்று குழியும் 



பறித்த கதையைத் தான் இங்கே 



எனக்கு நினைவு படுத்துகிறது 



அன்பர்களே. பாவம் !! தற்போது 



காங்கிரஸ் கட்சியின் நிலைமை. 



கடவுளால்  கூடக் காப்பாற்ற 



முடியாத நிலைமை அந்தக்கட்சிக்கு. 



அனுதாபத்தைத் தெரிவிப்பதைத் 



தவிர நம்மால் வேறு ஏதும் 



இப்போதைக்கு செய்திட 



முடியவில்லை.                                           



நன்றி !! வணக்கம் !!                           



அன்புடன் !!மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment