தொடர்ச்சி....பாகம் எண்:-2....நிலத்தகராறு நிகழ்வின்போது நிலம் சொன்ன வேதம் !! ஒரு அறிவு சார்ந்த கட்டுரை !! உங்கள் கனிவான கவனத்திற்கு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
பாகம் எண் :- 1.......தலையணை ***************
மந்திரம் என்பதன் விளக்கம். *******************************
இந்தத் தலையணை மந்திரம்
என்பதன் உண்மைக் கூற்று என்பது
வேறுஎதுவும் இல்லை அன்பர்களே !!
மனைவி "எதுசொன்னாலும்"அதை
அப்படியே வேதவாக்காக எடுத்துக்
கொண்டு அவர்கள்(மனைவி)
விரும்பியது, விரும்பியபடியே, நாம்
(கணவன்) செய்து முடித்து விட்டால்
அவர்கள் (மனைவி), அந்தத்
" தலையணை மந்திரம் " என்ற
" ஆயுதத்தை " தங்களது கரங்களில்
எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
(இதற்கு உண்மை அர்த்தம் என்னது?
" இரவினில் " அவர்களது " உடல்
உறவினை"நாடி,நாம் என்ன
சொல்கிறோமோ, எப்படி இருக்க
வேண்டும் என்று எண்ணி
இருந்தோமோ அதற்குத் தக்கபடி
அவர்கள் நம்மிடம் உறவினில்
எந்தவிதமான பிரிவுகளையோ,
அல்லதுமறுப்புகளையோஎப்போதும்
காண்பிக்கவே மாட்டார்கள் !!
ஆனால், அதற்கு மாறாக, அவர்கள்
சொல்லுகின்ற விஷயங்கள், பத்து
என்று, வைத்துக்கொள்ளுங்கள்.
அதில்ஒன்பதை,அவர்கள்,சொல்லிய
படியே நாம் செய்திருந்தாலும் கூட,
அந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும்
கணவன், இது தேவை இல்லை
என்று சொல்லிவிட்டால், அது
மட்டுமே போதுமானது.
மனைவிமார்கள் தாங்கள் அதுவரை
மறைத்து வைத்திருந்த தங்களின்
இராட்சஷி குணத்தை அப்படியேஒரு
நொடியில்வெளிக் காண்பித்து நாம்
என்ன சொன்னாலும் அதை காதில்
வாங்காமல், "செவிடு" போலவே
இருப்பார்கள். அது மட்டும் அல்ல
அன்பர்களே !! நாம் இரவில் உறவை
நாடி அவள் முகம் இருக்கும் திசை
நோக்கி இருக்கும் போது நம்
முகத்தைப் பார்த்து அவள் முகமும்
இருந்தால்தான் நம் முகத்தை முகம்
பார்க்கும். உறவு, சுகத்தில், சுகம்
சேர்க்கும். ஆனால் இப்போதுதான்
அவர்களிடம் அந்த இராட்சஷகுணம்
குடிகொண்டு உள்ளதே!! அவர்கள்
நம்முடன் முகம் காட்டாமல்
அவர்களும் நம் அருகேயே படுத்துக்
கொண்டு திரும்பிக் கொள்வார்கள் .
அவர்களின் " பின்புற எழில்களை "
மட்டும் காட்டிகொண்டு நம்மைப்
புறக்கணிப்பார்கள் என்று எனது
அனேக நண்பர்கள் அவர்களது
மனைவிமார்கள் அவ்வப்போது
செய்திடும் சேட்டைகள் நிறைந்த
குணங்களைப் பற்றி என்னிடம்
அழுது முறையிடுவதும் உண்டு.
ஆனால் எனது இல்லக்கிழத்தி
அப்படிப்பட்ட குணம் உடையவள்
அல்ல என்பதனை நான் இங்கே
கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
எங்களுக்குத் திருமணம் முடிந்து
38ஆண்டுகள் நிறைவு பெற்று
(திருமணத் தேதி 29-௦1-1975)இப்போது
39 ஆவது ஆண்டினில் நான் " பீடு
நடை " போட்டுக்கொண்டு இருக்கும்
இன்றைய தேதி வரை என் மனைவி
என்னிடம் எப்படி நடந்துகொள்வாள்
என்றால் :- (கவியரசர் பாடல்தான்)
கண் ஆனால் அவள் இமை ஆவாள்!!
காற்றானால் அவள் கொடிஆவாள்!!
மண் என்றால் அவள் மரம் ஆவாள்!!
மரம் ஆனால் அவள் கனி ஆவாள்!!
உள்ளம் என்பது உள்ளவரை அவள்
உள்மனமே என் பள்ளியறை !!
கல்லில் வடித்த சொல் போலே அது
காலம் கடந்த இன்பநிலை !!
இதுதான் அன்பர்களே !! நாங்கள்
இதுவரை வாழ்ந்திருந்த வாழ்க்கை
நெறிமுறை !!
தொடர்ச்சி ....பாகம் எண்:-2....................
அன்பர்களே !!
இந்தத் தொடர்கட்டுரை இரண்டாம்
பாகம் உங்களிடம் சமர்பித்திட சற்று
காலதாமதம் ஆனதற்கு நான் மெத்த
வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ள
கடமைப் பட்டுள்ளேன். அதற்கு
பல்வேறு கரணங்கள்.அந்த
தாமதத்திற்கு என்னை நீங்கள்
அனைவரும் அருள்கூர்ந்து
மன்னித்திட வேணுமாய்க்
கேட்டுக்கொள்கிறேன்.
அன்பர்களே !! இப்போது நாம்
கட்டுரையின் உள்ளே செல்வோமா?
நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த
அந்த ஒரு தாயின் வயிற்றினில்
பிறந்த அந்த சகோதரர்கள் நடுவில்
நிலத்தின்மீது அமைந்துள்ள வரப்பு
சம்பந்தமாக இருவருக்குள் கருத்து
வேறுபாடு எழுந்தது. அந்த நஞ்சை
நிலம் அவர்கள் இருவரின் தந்தை
இவர்களுக்காக கொடுத்த நல்ல
விலை மதிப்பு உள்ள ஒரு
சொத்து.அந்த நிலத்தின் அளவு
பற்றிய விபரம் கீழ் வருமாறு:-
நீளம் :- 2௦4 அடி. அகலம் 193 அடி.
(கிழ-மேல்) (தென்-வடல்)
இத்தனை சரிபாதியாகப் பிரிக்கின்ற
நேரத்தில்தான் அவர்களுக்குள்
ஏற்பட்டது தகறாரு. அப்போது
இருவரும் ஒருவரிடம் மற்றொருவர்
கூறுகிறார் உன்னோட இடத்தினில்
எனக்கு பாத்தியப்பட்ட இடம் 3அடி
உள்ளது என்று. சண்டை முற்றி
அடிதடியில் ஆரம்பித்து பின்
கத்தியை எடுத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் தாக்கிட
முற்படும்போது ஒரு குரல்
ஒன்றினை சகோதரர்கள் இருவரும்
கேட்கின்றனர். அட !! சண்டையை
நிறுத்துங்கடா!! தலையினுள் அறிவு
என்பது கிஞ்சித்தும் இல்லாததால்
தலையே இல்லாத முண்டங்களா !!
சப்தத்தை கேட்டதும் அண்ணன்
தமிபியைப் பார்த்தும், தம்பி
அண்ணனைப் பார்த்தும்
கேட்டுக்கொண்டனர் நீயா
இப்போது பேசியது என்று. நீங்கள்
யாரும் பேச வில்லையடா !!
பாவிகளே!! நான்தான் பேசுகிறேன்
நான்தான் மண்ணின் மைந்தனடா !!
ஏனோ இப்படி இந்த மண்ணுக்காக
இப்படி அடித்துக்கொள்கிறீர்களே !!
உண்மையில் நீங்கள் இருவரும்
எனக்குத்தான்/எனக்கு மட்டுமே
சொந்தமடா. என்றாவது நீங்கள்
இருவரும் சாகத்தான் போகிறீர்கள்.
அதன் பிறகு ? நீங்கள்
என்னுள்தானே புதைக்கப் படப்
போகிறீர்கள் அல்லது எரியூட்டப்
படப் போகிறீர்கள். அதனால் நீங்கள்
இருவரும் எனக்குத் தானே
சொந்தம்? பேசாமல் சண்டையை
நிறுத்துங்கள். சகோதரர்களுடன்
சண்டை இடாமல் நேசத்துடன்,
பாசத்துடன் வாழுங்கள். வாழ்ந்து
முடித்த பின்னே அமைதியாக வந்து
எனக்குள் சங்கமித்துக்
கொள்ளுங்கள். ஆதலால்ஒருவரை
ஒருவர் அணைத்துக்கொள்ளுங்கள்.
இனிஒருமுறையா நீங்கள்
இருவரும் ஒருதாய் வயிற்றுப்
பிள்ளைகளாக இந்தப் பூமியில்
வந்து பிறக்கப்போகிறீர்கள்.நான்
தரும் புத்திமதியை
ஏற்றுக்கொள்ளுங்கள். நான்
வருகிறேன் !! என்றுசொல்லிவிட்டு
அந்தத் தெய்வம் மறைந்து விட்டது.
உங்களுக்கு இதுபோல சூழல்
என்றாவதுவரலாம். அப்போது
நீங்கள் முதலில்
விட்டுக்கொடுங்கள்
விட்டுக்கொடுத்தவன்
கெட்டுப்போனதாக வரலாறு
என்பதே இல்லை.
நன்றி !! வணக்கம்!!
அன்புடன் மதுரை.T.R.பாலு.
No comments:
Post a Comment