தொடர்ச்சி....பாகம் எண்.2.......ஆண்கள் கால் விரலில் திருமணத்தின்போது மெட்டி அணிவிப்பதும் பெண்களின் கழுத்தில் தாலி அணிவிப்பதும் எதற்காக ? தெரியுமா ?உங்களுக்கு !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !! உங்கள்
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த நல் வாழ்த்துக்களுடன்
இணைந்த வணக்கங்கள்
உரித்தாகுக !!
அன்பர்களே !! இன்றைய தினம்நான்
எழுத இருக்கும் இந்தக் கட்டுரைக்கு
தேர்ந்து எடுத்துள்ள தலைப்பு சற்றே
வித்தியாசமானதுதான். ஒவ்வொரு
திருமண வீட்டினிலும் நீங்கள்
எல்லோரும் பார்த்துப் பார்த்துப்
பழகிப்போன காட்சிகள்தான்.
ஆனால் அந்த காட்சிகளுக்குள்
ஒளிந்திருக்கும் வரலாற்று
உண்மைகள், உங்களில் எத்தனை
பேர்களுக்கு தெரிந்திருக்குமோ,
அதனை நான் அறிந்திலேன். எல்லா
திருமண வீடுகளிலும் நீங்கள்கண்ட
காட்சிகள்தான் அது. ஆனால்
காரணம் என்னவென்று
அறிந்திடாமல் பார்த்து பயன் என்ன
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
தன்னை விரும்பாத வாலிபப் பெண்
ஒருத்தியை விரட்டிக் கொண்டே
திரிந்திடும் இளம் வாலிபனின்
செயலுக்கும் இதற்கும் அவ்வளவு
பெரிய வேறுபாடுகள் இருப்பதாக
எனக்குத் தோன்றவில்லை என்
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே!!
ஆகவே இவ்வுலகில் நடைபெறும்
எந்தச் செயலையும் அதன் காரணம்
தெரிந்து,அறிந்து,புரிந்து,தெளிந்து
பார்த்திடுங்கள்அதுதான் ஆறுஅறிவு
படைத்த மனித இனம் செய்திடும்
செயலாகத்தான் நான் இதுவரை
எனது வாழ்வினில் பார்த்து
செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறேன்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
சரி !! இப்போது இந்தக்கட்டுரை
நமக்கு முன் எழுப்பியுள்ள
வினாக்களுக்கு விடை அளித்திடும்
முகமாக, சில விளக்கங்களை
உங்களிடம்வைத்திடவிரும்புகிறேன்
முதல் வினா ?
ஆண்கள் கால் விரலில்
திருமணத்தின்போது மெட்டி
அணிந்து கொள்வது எதற்காக ?
இந்தக் கேள்விக்கு சமூக ரீதியாக
ஒரு பதிலும், உடற்கூறு தத்துவ
ரீதியாக மற்றும் ஒரு பதிலும்
உங்களுக்கு நான் அளிக்கக் காத்துக்
கொண்டு இருக்கிறேன் என் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
ஆனால், அதற்கு முன், ஒரு சிறிய
இடைவேளை. சற்றே பொறுத்து
இரும் பிள்ளாய் !! .................
(தொடரும்)
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலான (சற்றே
காலதாமதமான கட்டுரையின்
தொடர் பதிவுக்கு நேயர்கள் என்னை
அருள்கூர்ந்து மன்னித்திட
வேண்டுமாய் பணிவன்புடன்
கேட்டுக்கொள்ளக்
கடமைப்பட்டுள்ளேன்) என்அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
பொதுவாகவே மனித உடற்கூறு
தத்துவத்தின்படி, மனித இனத்தின்
நரம்பு மண்டலங்களின் கட்டுப்பாடு
பற்றிய ஆய்வு அறிக்கையின்படி
இந்த மனித இனத்திற்கு காம
உணர்வுகள் என்பது இருவேறு
இனங்களான ஆண்களுக்கு 2பங்கும்
அதே காம உணர்வுகள்
பெண்களுக்கு 4 பங்குமாகவே
எல்லாம் வல்ல இறைவன் படைத்து
இருக்கிறான் என்பதை நான்
ஏற்கனவே எனது முந்திய கட்டுரைப்
பதிவுகளில் இருந்து நீங்கள் அந்த
கட்டுரைதனைப் படித்து இருந்தால்
புரிந்து கொள்ளலாம். ஆனால்
அந்தக் கட்டுரையை இதுவரை
படிக்காத நேயர்களுக்காக
சுருக்கமாக அதனை நான் இங்கே
மீண்டும் பதிவு செய்கிறேன். 4 பங்கு
காம உணர்வுகள் உள்ள ஒரு
பெண்ணை 2 பங்கு மட்டுமே உள்ள
ஒரு ஆண்மகனால் எப்படிசமாளிக்க
முடிகிறது? இது ஒரு உண்மையான,
நியாயம் நிறைந்த, கேள்வியாகவே
நான் கருதுகிறேன் அன்பர்களே !!
(இங்குதான் எல்லாம் வல்ல
இறைவன் ஆண்மகனுக்கு சில வழி
முறைகளை எவ்வாறெல்லாம்இந்த
பெண்களுக்கு உள்ள 4 பங்கு காம
உணர்வுகளை குறைத்திடலாம்
என்பதற்கு அறிவினைத் தந்து
உள்ளான். அது பற்றிய விபரங்கள்
இதோ உங்களின் கனிவான
கவனத்திற்கு :-
1) தங்க நகைகளை பெண்களின்
மேனியில் அணிவிப்பதன் மூலமாக
ஒரு பங்கு காம உணர்வு குறைக்கப்
படுகிறது. ( இதனால்தான்
அன்பர்களே எனது அன்புக்கும்
பாசத்துக்கும் உரிய இஸ்லாமியத்
தோழர்கள் ஆண்களுக்கு தங்கநகை
எதுவும் அணிந்திடக் கூடாது என்று
இறைவன் சொன்ன அறிவுரையை
ஏற்று அவர்கள் வெள்ளியை
மட்டுமே அணிவதிலிருந்து நீங்கள்
கண்டுகொள்ளலாம். ஏன் என்றால்
தங்கத்துக்கு அந்தக் காம
உணர்வுகளை பெண்களுக்கு
குறைத்திடும் ஆற்றல், மற்றும்
வல்லமையை இந்த தங்க
உலோகத்திற்குவழங்கிஇருக்கிறான்
என்ற அரும்பெரும் இரகசியத்தை
இஸ்லாம் மதம் அவர்களுக்கு
போதித்து உள்ளது. இப்போது 4ல்
1போக மீதம் இருப்பது 3 பங்கு.
2) வாசனைகள் மிகவும் நிறைந்த
மலர்களான மல்லிகை,முல்லை,
பிச்சிப்பூ போன்றவற்றை தலையில்
சூடிக்கொள்வதினால் மேலும் ஒரு
பங்கு காம உணர்வு இந்த இடத்தில்
குறைக்கப்படுகிறது அன்பர்களே !!
இப்போது 3 ல் 1 போக மீதம் இருப்பது
2பங்கு(அட.....என்ன.......ஆண்டவா......
அதான் சரிக்கு சரி ஆயிருச்சே...இந்த
பொம்பளைகளை வுட்ர
வேண்டியதுதானே ?
அட..என்ன..நான்...சொல்றது !!-அடே
மனிதா !! நீ இன்னும் இந்தப்
பெண்களைப்பற்றி சரியாகப்
புரிந்துகொள்ளவே இல்லை. தனது
மேனியில் சரி பங்குகொடுத்துவிட்டு
அந்த ஈசன் என்ன பாடுபட்டார்
என்பதைத்தான் புராண மற்றும்
இதிகாச நூல்களின் வரலாறுகளில்
பார்த்திருக்கிறோமே நாம் !!
3) இறுதியாக பெண்கள் அணிந்து
கொள்ளக்கூடிய அந்தப் பட்டாடை
(அதாவது பட்டுச் சேலை,இரவிக்கை
இது போல ஆடை அணிவதினால்
மேலும் 1 பங்கு குறைக்கப் பட்டு 2ல்
1கழிந்தது போக மீதம் இருப்பது
ஒன்றே ஒன்றுதான் அன்பர்களே !!
அதனால்தான் மட்டுமேஆண்களால்
அவர்களை "எதிர்கொண்டு"(?) அந்த
"யுத்தத்தில் "ஆண்கள் வெற்றி
அடைவதும் இதில்தான் அந்த
சூட்சுமம் அடங்கி இருக்கின்றது.)
அன்பர்களே !! இந்தக்
கட்டுரையின்இறுதி மற்றும் பாகம்
எண் .3 அநேகமாக இன்று
மாலையோ அல்லது நாளை
அதிகாலையிலோ நிச்சயமாக நான்
உங்களுக்குத் தந்து விடுகிறேன்
என்று உறுதிமொழி தந்து
உங்களிடம் இருந்து அன்புவணக்கம்
கூறி விடை பெற்றுச் செல்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
பின் குறிப்பு :- எனது அன்புக்கு உரிய
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும்
தமிழ் நேசர்களே / இணையதள
பார்வையாளர்களே !! நீங்கள் எனது
கீழ்க்கண்ட 5 விதமான வலை
தளங்களை பார்த்து,படித்து, ரசித்து
வருவது என்னவோ உண்மைதான்.
அதனை நான் இல்லை என்று
மறுப்பதற்கு இல்லை. ஆனால்
அந்தக் கட்டுரைகளை நீங்கள்
விரும்புவதாகவோ (LIKE) அல்லது
விமர்சனம் செய்வதாகவோ ஏதும்
(COMMENT) நான் இதுவரை எந்த
குறியீடுகளையும் உங்களிடம்
இருந்து நான் பெற்றதாக வரலாறே
இல்லை என்றும் சொல்லலாம்.
1) குறள் விளக்கம்.
2) கவிதை தொகுப்பு .
3) எண்ணச் சிறகுகள்.
4) எண்ணத்தில் தோன்றியவை.
5) எனது எண்ணங்கள்(MY
PERSONAL VIEWS)
தயவு செய்து நீங்கள் blogger.spot.
தளத்தின் கீழே அடியினில் உள்ள
கட்டத்தில் ஏதாவது ஒன்றினை
நீங்கள் குறியீடு செய்யுங்கள்
அல்லது எனது
Facebook.com/MaduraiTRBalu என்ற
தளத்திற்குள்ளாகச் சென்று அதில்
உள்ள Astrology For All என்னும்
பக்கத்திற்குள்ளாகச் சென்று
தங்களது குறியீடுகளைப்
பதிவு செய்திடுங்கள் என்று
வேண்டிவிரும்பிக்கேட்டுக்கொண்டு
விடை பெறுகிறேன் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! மீண்டும் நன்றி!!
வணக்கம்!! அன்புடன்.மதுரை
TR.பாலு)
No comments:
Post a Comment