Tuesday, 5 November 2013

காதல் மொழியின் சிறப்பு !! கவிஞர்களின் பார்வையில் !! ஒரு சிறப்புக் கட்டுரை !! உங்கள் அனைவரின் கனிவானா கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 



வணக்கம் !!                                               




இன்றையதினம், நான் மனித 



வாழ்க்கையின் மிக முக்கியமான 



ஒரு அம்சம் என்று கருதப்படும் 



வணங்குதற்கும்,போற்றுதற்கும் 



உரிய உணர்ச்சியான "  காதல்  " 



அதன் சிறப்புகளைப் பற்றியும், 



பெருமைகளைப் பற்றியும் தமிழ் 



சினிமா உலகத்தில், கவிஞர்கள் 



பார்வையில் உருவான/பதிவு 



செய்திட்ட ஒரு சில பாடல்களின் 



வாயிலாக இந்த உலகம் எவ்வளவு 



முக்கியத்துவத்தை இந்தக் " காதல் " 



என்னும் ஒரே உணர்ச்சிக்கு வழங்கி 



உள்ளது என்பது  வெட்ட வெளிச்சம் 



ஆகும். 1966ம் ஆண்டு.புரட்சி நடிகர் 



என்று முத்தமிழ் அறிஞர், தமிழனின் 



ஒரே இனமானம் காத்திடும்தானைத் 



தலைவர், பேரறிஞர் அண்ணாவின் 



மறைவிற்குப் பிறகு அவரது 



ஆசைகளை,எண்ணங்களை, இந்தத் 



தாழ்ந்த தமிழகம், எந்தெந்த 



வகையில் முன்னேற வேண்டும் 



என்ற அவரது ஆசைக்கனவுகள் 



அனைத்தையும் உண்மை 



நனவுகளாக மாற்றிடும் ஆற்றல் 



படைத்த ஒரே தலைவர் கலைஞர் 



திரு  மு.கருணாநிதி  அவர்களால் 



பட்டம் பெற்ற M.G.R. &ஆந்திர 



அழகியான பாரதியுடன் இணைந்து 



நடித்து வெளிவந்த படம்தான்               



"நாடோடி". அதில் கவிஞர் வாலி 



அவர்களின் கைவண்ணத்தில் 



உருவான பாடலைப் பாருங்கள். 



அதில் காதலின் பெருமை பற்றியும் 



சிறப்புகள் பற்றியும் எவ்வளவு 



விரிவாக, விளக்கமாக, அங்கே 



அந்தப் பாடலில் படம் பிடித்துக் 



காட்டி உள்ளார்கள் என்பதனை 



எண்ணிப்பாருங்கள். பாடல் இதோ 



உங்களின் கனிவான பார்வைக்கு:- 




உலகம் எங்கும் ஒரே மொழி !!       


உண்மை பேசும் காதல் மொழி !!   


ஓசையின்றிப் பேசும் மொழி !! 


 உருவம் இல்லா தேவன் மொழி !!   


                                                            (உலகம்) 


கதா நாயகன் :-


பறவை ஒன்று !! வர்ணங்கள்வேறு!! 


பாட்டு ஒன்று!! இராகங்கள் வேறு !! 


இரவு ஒன்று !! பருவங்கள் வேறு!! 


இன்பம் ஒன்று!! உருவங்கள் வேறு !! 



கதாநாயகி :-                                                   


கடலும்வானும்பிரித்துவைத்தாலும் 


காதல் பேதம் காற்றிலும் இல்லை !!


உடல்கள் இரண்டும் வேறு                       


                                                     பட்டாலும் !!


ஒன்று காதல்!!அதன் பேர் தெய்வம்!! 


ஒன்று காதல் !!அதன் பேர் தெய்வம்!!




எப்படிப் பார்த்தீர்களா, அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!                                       



 மேலே குறிப்பிட்டுள்ள பாடலை 



நாம் வேறு ஒரு கருத்துக்கும்கூட 



ஒரு உதாரணமாக 



எடுத்துக்கொள்ளலாம். அது 



என்னவென்றால், ஒன்றே குலம் !! 



ஒருவனே தேவன் !! என்றார் 



பேரறிஞர் அண்ணா. அது போலவே 



இந்தப் பாடலில் உள்ள இரண்டாவது 



பாராவைப் பார்த்தோமேயானால் 



அது நமக்கு வழங்கிடும் நீதி என்ன 



என்று கேட்டால் அது இந்த நீதிதான். 



எப்படி பறவைஇனம் என்பது 



அதனதன் நிறங்களால் 



மாறுபட்டாலும் அவை அனைத்தும் 



நம்மால் அழைக்கப்படுவது 



என்னவோ பறவைகள் என்று 



மட்டும்!! 




அது போலவேதான் பாட்டு என்பதும் 



இராகங்களால் அவைகள் 



வேறுபட்டு இருந்தாலும், பொதுவாக 



அவைகளை நாம் பாட்டு என்றுதான் 



அழைக்கிறோம் !! அதே கருத்துதான் 



இரவிற்கும் பொருந்துபவையாக 



உள்ளது. வசந்த கால இரவு, 



மழைக்காலஇரவு,வெயில்காலஇரவு



குளிர்கால இரவு என்று அவைகள் 



அந்தந்த பருவங்களால் வேறு 



பட்டாலும் அவை இரவுஎன்றுதானே 



நம்மில் பொதுவாக அழைக்கப் 



படுகிறது. அது போலத்தான் 



பெண்களும் அவர்கள் தரும் தேக 



சுகங்களும். அந்தப் பெண்களால் 



இந்த ஆண்கள் அடைகின்ற இறுதிக் 



கட்ட இமாலய சுகம் என்பது 



ஒன்றுதான். ஆனால் அந்தஇலக்கை 



அவன் அடைந்திடத் துணை 



செய்திடும் இந்தப் பெண்களின் 



உருவங்கள் வேண்டுமானாலும் 



மாறு பட்டு இருக்கலாம். ஆனால் 



இறுதியில் அந்த ஆண் இனம் 



அடைகின்றதே,  கடைசிக்கட்ட 



இன்பம் அது ஒன்றே ஓன்றுதான் 



என்பதை, என்ற கருத்தை இங்கே 



காவியக் கவிஞர் வாலி எவ்வளவு 



நாசூக்காக கையாண்டிருக்கிறார் 



என்பதைப் பாருங்கள். ஆனால் அந்த 



வாழ்நாள் சாதனைக் கவிஞர் 



நம்மை எல்லாம் விட்டுமறைந்திட்ட 



போது அவருக்கு செய்திருக்க 



வேண்டிய அரசு மரியாதையை 



ஏனோ நம் தமிழக அரசு வழங்கிட 



மறுத்தது. ஒரு வேளை மரியாதை 



என்ற சொல்லிற்கு அங்கே 



தலைமைப் பீடத்தில் 



உள்ளோர்களுக்கு பொருள் 



புரியாமல் போயிருக்கலாம்.அல்லது 



அந்த மரியாதை என்றால் என்ன 



என்று அவர்கள் அறியாத 



பிறவிகளாகக்கூடஇருந்திருக்கலாம்



எல்லாம் அரசியல் பழி வாங்கும் 



படலத்தில் இதுவும் ஒரு 



அத்தியாயமாகக் கூட இருக்கலாம். 



யார் கண்டது? அது ஆண்டவனுக்கே 



வெளிச்சம். ஆங்கிலத்தில் ஒரு 



பழமொழி ஒன்று உண்டு 



அன்பர்களே. என் மதிப்பிற்குரிய 



எனது தந்தை அடிக்கடி என்னைப் 



பார்த்துச் சொல்லிக்கொண்டே 



இருப்பார். அது என்னவென்றால் 



இதோ இங்கே நான் கீழே குறிப்பிட்டு 



உள்ளதுதான் :-                                           



WE CALL OUR FATHER FOOLS !!           


SO WISE WE GROW !!                                   


THAT OUR YOUNGER GENERATION 


WILL CALL US SO !!                                      



என்று சொல்லுவார். இதற்குப் 



பொருள் என்ன என்றால் :-                       



 நாம் நமது தந்தைமார்களை 



முட்டாள்கள் என நினைத்தே/ 



அழைத்தே,  வாழ்கிறோம்/



வளர்கிறோம் !! நாளை நமது 



எதிர்கால சந்ததியார்கள் நம்மையும் 



அப்படித்தான் அழைப்பார்கள் !!       




 என்பது அந்த ஆங்கில 



சொற்றொடரின் உண்மைத் 



தமிழாக்கம் ஆகும் என் அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !! அது தான் 



இங்கே காவியக் கவிஞருக்கு அரசு 



மரியாதையைதர 



மறுத்தவர்களுக்கும் கிடைக்கும். 



இதில் எனக்குஎள்ளின் முனையளவு 



கூட மாறுபட்ட கருத்து என்றுமே 



இருந்தது இல்லை அன்பர்களே !! 



எல்லாம் அரசியல் காழ்ப்பு 



உணர்ச்சியின் வெளிப்பாடுகளே 



ஆகும். ஆனால் ஒன்று மட்டும் 



நிச்சயம். இது போன்ற (தமிழ் இனத் 



தலைவர் கலைஞர் அவர்களை 



இந்திய சினிமா நூற்றாண்டு 



விழாவினில் முறையாக 



அழைத்திடாமல் அன்னாரைப் 



புறக்கணித்தது/ அவமதித்தது ) 



அநீதியான அரசின் செயல்பாடுகள் 



அனைத்தும் ஒருவனால் 



(இறைவன்)குறித்துக்கொண்டே 



எழுதப் பட்டுக்கொண்டு வருகிறது. 



காலம் வருகின்றபோது இப்படி 



அநியாயம், அக்கிரமம் 



செய்தோருக்கு எல்லாம் அது 



வட்டியும் முதலுமாகவே திரும்பக் 



கிடைத்திடும் என்பது உறுதி. எனது 



இந்த 6௦ வயது பிராயத்தில் நான் 



எத்தனை பேர்களைப் 



பார்த்திருப்பேன். முத்துராமன், 



ஜெயலலிதா இருவரும் ஏற்றத் 



தாழ்வுகள் நிறைத்திட்ட கணவன் 



மனைவி போல நடித்து வெளிவந்த 



திரைப்படம்தான் " சூரியகாந்தி" 



அதில் கவியரசர் ஒரு தத்துவப் 



பாடல் ஒன்று புனைந்து அந்த 



இடத்தில் அவரே வேடம் தரித்து 



நடித்தும் இருப்பார். அந்தப் பாடலில் 



பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 



கேட்டது!! கருடா !!சௌக்கியமா? 



என்று. அதற்கு கருடன் பதில் 



சொல்லுமாம். யாரும் இருக்கும் 



இடத்தில் இருந்து கொண்டால் 



எல்லாம் சௌக்கியமே !! என்று. 



அந்த வரிகள் தான், நடந்த கசப்பான 



சம்பவங்கள் அந்த இந்திய 



சினிமாவின் நூற்றாண்டுகள் 



கொண்டாட்டத்தின் போது 



நடைபெற்ற நிகழ்வுகளின்போது, 



எனக்கும் நினைவுக்கு வந்தது. 



அதுபோலவேதான்  அந்தப் 



பாடலில்கவிஞர் எழுதியது போல 



இன்றையதினம்  கொடிய 



விஷங்களைத் தனது உள்ளத்தில் 



நிரப்பி இருக்கும் பாம்பு, இராஜநாகம் 



பரமசிவன் கழுத்து என்று 



சொல்லப்படுகின்ற ஆட்சிசெய்திடும் 



அதிகார அமைப்பு என்ற உச்ச கட்ட 



அமைப்பினில் பதவி வகித்துக் 



கொண்டு இருக்கிறது. காலம் 



ஒருநாள் மாறும்.நம் கவலைகள் 



யாவும் தீரும்!! வருவதை எண்ணிச் 



சிரித்து இருப்போம். வந்ததை 



எண்ணி வருத்தப்பட்டு 



வாழ்ந்திடுவோம் என்று சொல்லி 



இந்தக்கட்டுரையின் தொடர்ச்சி எண் 



பாகம் 2ல் நாம் கூடிய விரைவினில் 



சந்தித்து அளவளாவுவோம். 



அதுவரை நாம் சற்றே 



பிரிந்திருப்போம். நன்றி !!வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R.பாலு.                     



                                                     (தொடரும்)

No comments:

Post a Comment