தொடர்ச்சி...மற்றும் இறுதி பாகம் எண்:-3.....விடிஞ்சாத் தெரியும் உங்க ஆத்தாவா? இல்லை !! ..எங்க ஆத்தாவா...ஒரு சிரிப்புக் கதை...உங்களின் கனிவான கவனத்திற்கு !!
தொடர்ச்சி ...பாகம் எண்:-2.
இவர்கள் வீட்டின்
முன்புற வாசலில் இரண்டு
உயரமான,அகலமானதிண்ணைகள்
இரண்டு உண்டு. இதில் வடக்கு
பக்கம் உள்ள திண்ணையில்
வனிதாவின் அம்மாவும் தெற்கு
பக்கம் உள்ள திண்ணையில்
வஜ்ரவேலுவின் தாயார்
கனகாம்பரமும் இரவினில் படுத்து
உறங்குவது வழக்கம். வனிதாவோ
தனது மாமியார் வீட்டுக்கு வந்தநாள்
முதலாகவே புருஷனை நச்சரிக்க
தொடங்கி விட்டாள்.
ஏங்க...உங்களுக்கு நான் வேணுமா?
இல்ல உங்க அம்மா வேணுமா ?
(இந்தக் கேள்வி என்னவோ இந்தக்
காலத்து இளம் தலைமுறையில்
உள்ள கிட்டத்தட்ட அனைத்துப்
பெண்களுமே அவரவர்களுடைய
வீட்டுக்காரரிடம் பொதுவாகக்
கேட்டிடும் கேள்வி என்று எனது
நண்பன் நாராயணன் அடிக்கடி
என்னிடம் சொல்வதும் உண்டு)
நீங்களே முடிவு பண்ணிக்குங்க !!
நான் வேணும்னா, நீங்க உங்க
அம்மாவைக், கொன்னுடனும்.
என்ன நான் சொல்றத அப்படியே
கேப்பீங்களா ?
அன்பர்களே !! இந்த இடத்தில் ஒரு
சிறு குறுக்கீடுக்காக என்னை நீங்க
மன்னிக்கவேண்டும். சீட்டாட்டத்தில்
இருப்பதிலேயே மிக மிகப்
பெரியவன் யார் என்று கேட்டால்
அன்பர்களே !! அந்தப் பெருமை
என்றும் இஸ்பட் ராசாவுக்குத்தான் !!
ஆனாலும் இந்த இஸ்பட் ராஜா
என்பவன் ஆட்டின் இரானிக்குள்
அடக்கம் !!என்று நான் அடிக்கடி என்
நண்பர்கள் மத்தியில் சீட்டாடிடும்
போது சொல்வேன். அந்த கருத்து
இங்கே மெய்ப்பிக்கப் படுகிறது
அன்பர்களே !!
இந்தத் துயரம்
தினமும் வஜ்ரவேலு தூங்கப்
போகும் முன்னர் கணவன் மனைவி
இருவரிடமும் விவாத மேடைப்
பிரசங்கமாகவே தினம் தினம்
நடப்பது வாடிக்கையாக
மாறிவிட்டது. பொறுத்துப்
பொறுத்துப் பார்த்தார் வஜ்ரவேலு.
கடைசியில் ஒரு நாள் இந்தப்
பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு
ஒன்றை எடுக்க வேண்டிய கட்டாய
சூழ்நிலைக்கு அவர் தள்ளப் பட்டார்
தனது மனைவி வனிதாவினால்.
அப்படி அவர் என்னதான் முடிவு
எடுத்தார்?
கொஞ்சம் இடைவேளை!! நாளை
இந்தக் கட்டுரை இறுதிபாகத்தை
அடையப் போகிறது. தயவு செய்து
சற்று அதுவரை பொறுத்து
இருங்களேன்.
(தொடரும்............)
தொடர்ச்சி.....பாகம் எண்:-3.
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
ஆக இளம் மனைவி வனிதாவின்
அனுதின நச்சரிப்பு தாளாமல், நம்
கதையின் கதாநாயகன் வஜ்ரவேலு
ஒரு தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு
வந்தார். அது என்னவென்றால்
போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்.
ஆனால், யாரை? அதுதான் இப்போது
நம் முன்னே உள்ள கேள்வி. ஒரு
நாள் இரவு தனது தாயாரை
அழைத்தான் வஜ்ரவேலு. அம்மா நீ
எந்தப் பக்கம் உள்ள திண்ணையில்
படுத்துத் தூங்குவாய் என? அதற்கு
இவன் தாய் கனகாம்பபரம் எதுக்கு
கேக்கிறே ? என வினவினாள்.
உடனே அதற்குத் தக்கவாறு பதில்
தந்து சமாளித்துகொண்ட இவனோ
யம்மா, கேக்குற கேள்விக்கு பதில்
சொல்லும்மா ..என்றான். உடனே
அதற்குப்பதில் தந்த கனகாம்பரம்
...மவனே அவ என் சம்பந்தியம்மா
வடக்குத் திண்ணையிலும், நான்
தெற்குப் பக்கம் உள்ள
திண்ணையிலும்தான் படுப்போம்
என்றாள். இன்னைக்கு நீ என்ன
செய்றீன்னா அம்மா, அந்த அம்மா
படுக்கப் போறதுக்கு முன்னாடி நீ
போயி வடக்குப்பக்கம் படுத்துக்கோ
அந்த அம்மா தெற்குப் பக்கம் உள்ள
திண்ணையில படுக்கட்டும்என்றான்
வஜ்ரவேலு.சரி என்றாள் அவன்
அன்னை கனகாம்பாரம். இரவும்
வந்தது. முன்கூட்டியே மகன்
சொன்னபடியே கனகாம்பரம்
வடக்குப்பக்கம் உள்ள
திண்ணையில் போயி
படுத்துக்கொண்டாள். சற்று நேரம்
கழித்துவந்த வனிதாவின் தாய்
குருவம்மா, தனது இடத்தில் சம்பந்தி
அம்மா உறங்கிக் கொண்டிருப்பதால்
இவள் தெற்குப் பக்கம் உள்ள
திண்ணையில்படுத்துக்கொண்டாள்.
இவர்கள் இருவருக்கும் ஒரு
பொதுவான பழக்கம் உண்டு. அது
என்னவென்றால், குளிர்தாக்காமல்
இருப்பதற்காக இருவரும்
போர்வையை எடுத்து, உள்ளங்கால்
முதல் உச்சிவரை போத்திப் படுப்பது
வழக்கம். இருவரும் இடம்மாறி
படுத்து போர்வையைகொண்டு
உடல் மறைத்து உறங்கிக்கொண்டு
இருந்தனர். இங்கே, நம் வஜ்ரவேலு
படுக்கை அறையில் என்ன நடக்குது
என்று பார்ப்போம்.வனிதா வழக்கம்
போல் தன் கணவனிடம்
எண்ணையில் போட்ட கடுகு போல
படபடவென பொரிந்து தள்ளிக்
கொண்டு இருந்தாள்.கணவனைப்
பார்த்து கேட்டாள்,ஏங்க நான் என்ன
கிறுக்குச் செருக்கியா? (வஜ்ரவேலு
மனசுக்குள் மிகவும் ஆனந்தம்
அடைந்தான். அப்பாடா,
இப்போதாவது ஒத்துக்கொண்டாளே
மனைவிதான் ஒரு கிறுக்கு செருக்கி
என்று.) சரிம்மா. இப்ப என்னையை
என்ன செய்யச் சொல்றே? கேட்டான்
வஜ்ரவேலு. உடனே அதற்கு வனிதா
உங்க அம்மாவோட கதையை
இன்னைக்கு நீங்க முடிக்கணும்.
ஏண்டி !! வனிதா!! நீ சொல்றது
உனக்கே நியாமா? உம்..என்னபெத்து
வளர்த்து ஆளாக்குன அன்புத்
தெய்வம் எங்க அம்மா. அவள என்
கையாலேயே கொல்லச்
சொல்றே.உம்...யோசி...கொஞ்சம்
யோசி....என்றான். உடனே அதற்கு
வனிதா....உம்...எல்லாம் நல்லா
யோசிச்சாச்சு. இப்ப நான் சொல்றத
நீங்க செய்யுறீங்க. இப்ப நம்ம
வீட்டுத்திண்ணையிலே தெற்குப்
பக்கமாஉள்ள திண்ணையில் தானே
உங்க ஆத்தா படுத்துக்கிடக்கா?
(உண்மையிலே
அன்று இருவரும் இடம் மாறி
படுத்துக்கொண்டு இருப்பது
வனிதாவுக்குத் தெரியாது.ஆனால்
வஜ்ரவேலுவுக்குத் தெரியும். அவன்
தானே அம்மாகிட்டே சொல்லி இடம்
மாறி படுத்துக்கிட சொன்னது) நான்
போர்வையைவச்சுப் போத்திப்
படுத்திருக்கும் உங்க ஆத்தாவின்
வாயைப் பொத்திக்கிடுவேன்.நீங்க
அரிவாளை வச்சு உங்க
ஆத்தாவோட கழுத்த நற,நறன்னு
அறுத்துக்கொன்னு
போடுங்க..என்றாள். நல்லா
யோசிச்சுக்கிட்டயாடி..கேட்டான்
வஜ்ரவேலு. ஆமா..எல்லாம்..நல்லா.
எடுத்த முடிவுதான்இது..வனிதாவின்
வாக்குமூலம் இது..சரி!! (மனசுக்குள்
வஜ்ரவேலு..உம்..எல்லாம் தலை
எழுத்துப்படிதான் நடக்கும்..விதி..
யாரைத்தான் விட்டதுஎன எண்ணிக்
கொண்டே) வாடி..இன்னைக்கு நீ
நினைச்சதை முடிச்சுருவோம் என்று
சொல்லியபடியே இருவரும்
கதையை முடிக்க கிளம்பினார்கள்.
வனிதா தெற்குப் பக்கம் இருப்பது
தன் தாய் குருவம்மாள் என்பதைத்
தெரியாமல் மாமியார் கனகாம்பரம்
எனஎண்ணிக்கொண்டுஅவளின்
வாயைப்பொத்திக் கொள்கிறாள்
இறுக.உம்..சீக்கிரம்..அறுங்க..அட.....
உங்களைத்தானே..என்றாள்வனிதா.
சரி!! உன் விருப்பப்படிதான் நான்
இந்தப்பாவகாரியத்தை செய்யுறேன்.
இறைவா!! இந்தப் பாவகாரியத்தின்
மூல காரணம் என் மனைவியை நீ
மன்னித்து அருள்புரிவாயாக!! என்று
சொல்லிவிட்டு தனது மாமியாரின்
கழுத்தை அரிவாளால் கர..கர..கர..
என அறுத்துவிட்டு கதையை
முடிக்கிறான் வஜ்ரவேலு. அதன்
பின்னர் வனிதா,வஜ்ரவேலு
இருவரும் தங்கள் படுக்கை
அறைக்குத் திரும்புகின்றனர். என்
ராசான்னா ராசா தான்.
இன்னைக்குத் தான் நீங்க என்
சொன்னபடிகேட்டு என்
எதிரியோட(?)கதையை
முடிச்சிருக்கீங்க!! அதனால ரெண்டு
மாசமா நான் உங்களை எங்கிட்ட
நெருங்க விடலை.
இன்னைக்குத்தான்அதுக்குவட்டியும்
முதலும்சேத்து உங்களுக்கு இன்பம்
வாரி வழங்கப் போறேன் மச்சான்
வாங்க !! மச்சான்!! வாங்க !!
என்னையை உங்க ஆசைதீரக்
கொஞ்சுங்க !!
என்று சொல்லியபடியே தனது
ஆருயிர் கணவனை இறுகக் கட்டித்
தழுவி ஆசைதீர அவன்
கன்னங்களில் காதல்
முத்திரைகளை முத்தங்களாக
பதித்து மனம் மகிழ்கிறாள் வனிதா.
அப்போது தனது மனமதில் என்ன
நினைத்துக்கொண்டு இருந்தானோ
அதுதான் நண்பர்களே!! இங்கே
இந்தக் கட்டுரைக்கு நான்
தலைப்பாக தந்து இருக்கிறேன்.
தலைப்பு இதுதான் :-
"விடிஞ்சாத் தெரியும்................................
உங்க ஆத்தாவா? ......................................
இல்ல !!எங்க ஆத்தாவாஎன்று"........
அன்பர்களே!! இந்தக் கதையில்
இருந்து நாம் அறிந்துகொள்ளும்
கருத்து என்னவென்றால், நாம்
நல்லது நினைத்தால் நமக்குநல்லது
நடக்கும். அதற்கு நேர்மாறாக நாம்
கெட்டது நினைத்தால்,செய்தால்,
அது நமக்கே கெட்டதாகத்தான்
முடியும் என்ற உண்மைத் தத்துவம்.
எனவே நாம் அனைவரும் நல்லதே
நினைப்போம். நல்லதே
செய்திடுவோம். நமக்கும் நல்லதே
நடக்கும். உருது மொழியில் ஒரு
பழமொழி ஒன்று உண்டு
அன்பர்களே !! அது இதுதான்:-
ஹைசா நியத் !! உஸ்ஸா பரக்கத்!!
என்று. அதன் பொருள் கிட்ட்டத்தட்ட
நான் மேலே குறிப்பிட்டிருந்த அந்தக்
கருத்துக்கு நிகரானதுதான் என்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!! உன்
எண்ணம்,உன் சிந்தனை,உன்
செயல்பாடு, இவைகள் எவ்வளவு
உண்மையாகவும்,நல்லவைகளாக
வும்,நேர்மையானதாகவும்
இருக்கின்றதோ அது போலவே
உனக்கு செல்வங்களும் நல்ல
நிகழ்வுகளும் எல்லாம் வல்ல
இறைவன் " அல்லாவின்
கருணையாலே" உனக்கு வழங்கப்
படும் என்பதே அதன் பொருள்.
அன்பர்களே !! இவ்வளவு மிக நீண்ட
கட்டுரையைப் பொறுமையுடன்
படித்து இரசித்த உங்கள் அன்பு
உள்ளங்களுக்கும்,உங்கள் அருமை
விழிகளுக்கும், என் இதயம் கனிந்த
நன்றியையும் வணக்கங்களையும்
காணிக்கையாக சமர்பித்துவிட்டு
மீண்டும் நாளை மற்றும் ஒரு
தலைப்பினில் உங்கள்
அனைவரையும் நான் சந்திக்கிறேன்.
நன்றி!! வணக்கம்!!
அஸ்ஸலாமு அலைக்கும்!!
அன்புடன்.மதுரை T.R.பாலு.
பின் குறிப்பு :- நான் மேலே
எழுதியுள்ள இந்தக் கதை, நான் 1௦
வயது பாலகனாக இருந்தபொழுது
எனது அன்புத் தந்தையார் அவரது
நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு
இருக்கும்போது திரை மறைவினில்
நான் என் செவியால்ஒட்டுக் கேட்டு
உள்மனத்தில் பதிவு செய்துகொண்ட
கதை இது. இன்றைய தினம்
ஏறத்தாழ 5௦ ஆண்டுகளுக்கும்
மேலாக எனது இதயக் கூட்டினுள்
சிறை வைத்திருந்த அந்த " கதைப்
பறவை " இப்போது இங்கே
இணையதளத்தில் வெளியிட்டதன்
வாயிலாக தனது இரண்டு
சிறகுகளையும் விரித்து வானில்
பறந்து கொண்டு இருக்கிறதுஉங்கள்
அனைவரின் கருத்துகளிலும்
இரண்டற அந்தப் பறவை கலந்து
கொண்டு இருக்கிறது என்பதே
உண்மை. நன்றி !! வணக்கம்!!
அஸ்ஸலாமு அலைக்கும் !!(இந்த
இஸ்லாமிய வாசகத்தின் பொருள்
என்னவென்றால் உங்களுக்கு
சாந்தியும் சமாதானமும்
இறைவனின் அருளால்
கிடைக்கட்டும் என்பதே )
அன்புடன் !! மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment