உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதிலும் வாழ்ந்து
வரும் எங்கள் தமிழ்த் தாயின்
தொப்புள் கொடி உறவுகளான,
அன்பு,பாசம்,நேசம்,உண்மை,
தூய்மை இது போன்ற நல்ல
குணங்களை மட்டுமே தாங்கள்
அணிந்திடும் அணிகலன்களாக
எண்ணி வாழ்ந்துவருகின்ற எனது
உயிரினும் மேலாக நான்
எப்பொழுதும் போற்றி, வணங்கி
வரும் அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே!! முதலில்உங்கள்
அனைவரையும் வணங்கி எனது
காலை நேரத்து இனிமை நிறைந்த
இதய சுத்தியான வாழ்த்துக்களை
நான் உங்கள் முன்னிலையில் பதிவு
செய்து கொள்கிறேன் அன்பர்களே !!
இன்றைய தினம் நான் எனது
இணைய வலைதளமான
"எண்ணத்தில் தோன்றியவை "
பகுதியில் ஒரு சிந்திக்கக் கூடிய
கருத்துக்களைத் தன்னகத்தே
கொண்ட ஒரு சீரிய அதே நேரத்தில்
ஆழமான நல்ல செறிவுடன் கூடிய
விஷயம் ஒன்றினை தலைப்பாகத்
தெரிவு செய்து அதற்கு பெண்
என்பவள்" தர்ம பத்தினியா ?
இல்லை !! அதர்ம பத்தினியா ?
என்னும் ஆராய்ச்சிக்குரிய கட்டுரை
ஒன்றினை நான் இந்தக் காலை
வேளையில் பதிவு செய்வதில்
மட்டற்ற மனமகிழ்ச்சி
அடைகின்றேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
பெண் என்பவள்தான் இந்த
சமூகத்தில் மிக முக்கியமான,
பெருமைக்கும், கண்ணியத்திற்கும்,
புகழ் மற்றும் கௌரவத்திற்கும்
உரிய போற்றுதலுக்கும்,
வணங்குதலுக்கும் ஏற்றதொரு
பொறுப்புமிக்கவளாகவே விளங்கி
வருபவள் இந்தப் பெண் என்பவள்
என்பதில் இருவேறு
கருத்துக்களுக்கோ அல்லது
சிந்தனைகளுக்கோ இடமில்லை
அன்பர்களே !! நான் மேலே
குறிப்பிட்டுள்ள அத்தனை
நற்குணங்களும் இன்றைக்கு
ஏறத்தாழ 3௦ முதல் 35
ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து
வந்த பெண்களைப் பற்றிய ஒரு
சிறந்த அதே நேரத்தில் மிகச்சரியாக
கால அளவினைப் பற்றிக்
குறிப்பிட்டுள்ள ஒரு தேர்வு என்று
நான் கருதுகிறேன். (யோவ்..மதுரை
T.R.பாலு அய்யா. அப்படீன்னா இப்ப
இந்தக் காலத்தில் வாழ்ந்துவரும்
இளைய சமுதாயத்தினைச் சேர்ந்த
இளம் பெண்களுக்கு இந்த
உயர்வான கருத்து முத்திரைகள்
என்பது பொருந்தாத ஒன்று என்று
நீங்கள் கருதுகிறீர்களா ? அல்லது
இந்த நல்ல போற்றுதலுக்கு உரிய
நற்குணங்கள் எவையுமே இந்தக்
காலப் பெண்களிடம் இல்லை என்று
நீங்கள் சொல்லுகிறீர்களா ? எனக்கு
இப்ப..ஒரு.உண்மை.தெரிஞ்சாகனும்)
அன்பரே உங்கள் கேள்வியிலேதான்
பதிலும் அடங்கி உள்ளதே !! அது
உங்களுக்குப் புரியவில்லையா?
அல்லது புரியாதவர்போல
என்னிடமே நடிக்கிறீர்களா ? ஆக
இப்படிப்பட்ட நற்குணங்கள்
நிறைந்த அந்தக் காலப்பெண்களை
மட்டுமே தர்ம பத்தினிகள் என்று
கற்று அறிந்தோர்கள் சொல்வது
உண்டு. என்றைக்கு பொருள்
சம்பாதித்திடவேண்டும், புருஷன்
கொண்டுவரும் பணம் குடும்பச்
செலவுகளுக்குப் போதவில்லை,
எனவேதான் நாங்களும்
வேலைக்குச்செல்லுகிறோம் என்ற
இறுமாப்பு உணர்வுகளுடன் வீட்டு
வாசல்படியைப் பெண் ஒருத்தி
தாண்டி வெளியில் வருகிறாளோ
அன்றோடு முடிந்து விட்டது நான்
மேலே குறிப்பிட்ட அந்தனை
பெருமைகளும் நிறைவுகளும்
அவளை விட்டு போனது என்று
எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த
என் குரு குணசீல முதலியார்
அவ்வப்போது இங்கே மேலே
சொன்ன கருத்துக்களை எங்களைப்
போன்ற மாணவர்கள் நடுவினில்
ஆசிரியர் உரையாடிடும் போது
அவ்வப்போதுசொல்வதுண்டு.இந்தக்
கருத்தில் எங்களுக்கு உடன்பாடா ?
அல்லது இல்லையா என்பது மற்றும்
ஒரு மேடை அமைத்து அதில் பேசப்
பட வேண்டிய பட்டி மண்டபத்துக்கு
உட்பட்ட ஒரு விஷயம் அன்பர்களே!!
சரி !! இப்போது நாம் கட்டுரைக்கு
உள்ளாகச் செல்வோமா எனது
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி
என்ற ஊர். அதில் செல்வச்
செழிப்புடன் வாழ்ந்துவருபவர்தான்
கணேசன் என்பவர். தனதுஉதிரத்தை
கடுமையான உழைப்பினால் நெற்றி
வியர்வையாகச் சிந்தி அதன்மூலம்
பெரும் பொருள் சம்பாதித்து ஊரே
வியந்திடும் செல்வந்தராக வாழ்ந்து
வருபவர். இவரின் அன்புக்கும்
பாசத்திற்கும் நேசத்திற்கும்
உண்மைக் காதலுக்கும்
உரியவள்தான் இவரது பாகம்
பிரியாள் என்ற மதிப்புமிக்க
அந்தஸ்த்தினை பெற்றவள் இவர்
மனைவி கனகா என்பவள்.
கணேசனுக்கு உசிலம்பட்டியில்
வசிப்பதற்கு மாட மாளிகை போன்ற
அமைப்பு உள்ள வீடு,நஞ்சை,புஞ்சை
நிலங்கள் ஏராளம். வண்டி
வாகனங்கள். வீட்டின் முன்பாக
இரகத்திற்கு ஒன்று என நிற்பது
கண்டு ஊரே மனதுக்குள் புழுங்கும்.
செங்கல்சூளை, மாபெரும்
பல்பொருள்கள் விற்பனை
செய்திடும் வணிக நிறுவனங்கள்
என்று பல பிரிவுகள் அந்த
உசிலம்பட்டி நகரின் பல பகுதிகளில்
ஆங்காங்கே அமையப்பெற்று வெகு
சிறப்புடன் வருமானம் என்பது
தினசரி ஐப்பசி மாதத்து அடைமழை
போல (இங்கு நான் குறிப்பிடும்
மழையும் அந்தக் காலத்தில்
உள்ளதே ஆகும்) பணம் குவிந்து
வந்து கொண்டு இருந்தது. ஒரு
மனிதனுக்கு அவனது பிறந்த
ஜாதகத்தில் நல்ல நேரம்,நல்ல
திசை,நல்ல புண்ணிய கிரகங்களின்
புத்தி இவைகள் நடைபெற்று
வருமாயின் அவன் எந்தவிதமான
சிரமமும் படவேண்டிய அவசியமே
இல்லை அன்பர்களே !! செல்வம்
அதுதானேவந்து குவிந்துகொண்டே
தான் இருக்கும். ஆனால் அதற்கு
நேர்மாறாக கெட்ட நேரம்,கெட்ட
திசா,புத்தி,பாவ கிரகச்
சேர்க்கைகளுடன் கூடிய காலம்
நடந்திடுமாயின் எத்தனை
கோடிப்பணம் அவன் சேர்த்து
வைத்திருந்தாலும் அவை
அத்தனையும் திரை அரங்கினில்
புதிய படம் வெளிவரும் அன்று
அரங்கு முழுவதும் வெள்ளமென
மக்கள் கூட்டம் நிறைந்திருந்து
படம் முடிவடைந்து எப்படி சில
நிமிடங்களில் அந்தத் திரைஅரங்கம்
காலியாகி வெறிச்சோடிக்
காணப்படும் அல்லவா ?
அதுபோல் காலியாகிவிடுமாம்
அவன் தேடிய செல்வங்கள்
அனைத்தும். இந்தக் கருத்து நான்
சொல்லிடவில்லை என்
அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!
வான்புகழ் வள்ளுவன் அருளிச்
சென்ற ஒரு குறளில் உள்ளதொரு
நல்ல கருத்து.
திருக்குறள் !!
அதிகாரம் :-நிலையாமை.
குறள் எண்:- 332.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று... ... ... ... ...
வள்ளுவர் தரும் விளக்கம் :-
மிகப் பெரும் செல்வம் வந்துசேர்தல்
என்பது கூத்தாடும் இடத்தினில்
கூட்டம் வந்து சேருவதைப்
போன்றது. அதே செல்வம் நீங்கிப்
போவதும் கூட்டம் கலைந்து
போவதைப் போன்றதே என்றார்
வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை.
அது போலவே நமது கட்டுரையின்
கதாநாயகன் கணேசனிடமும்
செல்வம் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
அமாவாசையிலிருந்து பவுர்ணமி
நோக்கிப் பயணித்திடும் முழு
நிலவுபோல வளர்ந்து கொண்டு
இருந்த காலம் அது. கணேசன்
அவருக்கு அவர் மனைவி
கனகாதான் எல்லாமே. இவள்கோடு
போடுங்கள் என்று சொன்னால்
போதும் இவர் ரோடே
போட்டுவிடுவார். அந்த அளவிற்கு
அவளை மனமார, உயிராக, கண்
இமைபோல காத்து,காதலித்து,
(திருமணத்திற்குப் பிந்திய காலத்து
காதல் நிகழ்வுகள்தான் நாங்கள்
வாழ்ந்திருந்த அந்தக்காலத்தில்)
நேசித்து வந்த காலையிலேதான்
இவர்களது இல்லற வாழ்வின்
உண்மை சொரூபத்தை
உணர்த்திடும் வேளை வந்தது. அது
எப்படி ? இமயமலையின்
அடித்தளத்தில் வாழ்ந்திருந்த
முக்காலமும் அறிந்த ஒரு
சுவாமிகள், முனிவர், ரிஷி (இவை
எல்லாமே அவரது தூய கற்பு
நெறியின்பால் அவர் கொண்டுள்ள
உண்மையும் மாறாப்பற்றும்
உள்ளவராகவே வாழ்ந்திருந்ததால்
அவருக்கு மக்கள் வழங்கிய
அடையாளங்கள் இவைகள்.
பிரேமானந்தாவைப்போலவோ
அல்லது நித்தியானந்தாவைப்
போலவோ இவர் இல்லை.இல்லவே
இல்லை.) ஒருவர் நமது கணேசன்
வசிக்கும் உசிலம்பட்டிக்கு ஒரு
கோவில் குடமுழுக்கு ஒன்றினில்
சுவாமிகள் கலந்துகொள்ள
வந்திருந்த வேளையில் அவரைச்
சந்திக்கும்போது, அவருடன்
உரையாடிடும்போது நமது
கணேசனின் வாழ்கையில் ஒரு
பெரும் சோதனை வந்தது. அது
எப்படி? அது என்னவாயிற்று? எதில்
போய் முடிந்தது? அன்பர்களே !!
உங்களின் அனைத்துக்
கேள்விகளுக்கும் நாளைய தினம்
இந்தக் கட்டுரையின் இரண்டாம்
பாகம் விளக்கங்களையும், நடந்த
உண்மைகளையும் விளக்கிக்
கூறிடக் காத்துக்கொண்டு
இருக்கிறது.அதுவரை ஒரு சிறிய
விளம்பர இடைவேளை. மீண்டும்
நாளை நாம் சந்திப்போம். பிறகு
என்ன நடந்ததென்று சிந்திப்போம்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
(கட்டுரை நாளை தொடரும்)
கட்டுரைதொடர்ச்சி...பாகம் எண்.2......
இமயமலை அடிவாரத்தில் இருந்து
இங்கே உசிலம்பட்டி கோவில்
குடமுழுக்கு நிகழ்வினில் கலந்து
கொள்ள வந்திருந்த சுவாமிகளின்
திருப் பெயர். சத்தியவந்தன்
ஸ்வாமிகள் என்பதே. ஒருவரைத்
தனது அருள் நிறைந்திட்டவிழியால்
சுவாமிகளைப் பார்க்கவருபவரின்
இரண்டு புருவங்களுக்கு
இடைப்பட்ட இடத்தினை சற்றே
உற்றுநோக்கினால் போதும் அவரது
கடந்த,நிகழ்,எதிர்காலப் பலன்களை
மிகத் துல்லியமாக சொல்லிடும்
ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்
இவர். குடமுழுக்கு விழாவிற்கு
வந்தவர்களில்மிகப்பெரும்பான்மை
யோர்கள் சத்தியவந்தன்ஸ்வாமிகள்
அவர்களையும் சந்தித்து ஆசிகளைப்
பெற்றுவந்தனர். நமது கதையின்
நாயகன் கணேசனும் வந்து
ஸ்வாமிகளை சந்தித்தார். அவரை
உற்று நோக்கிய சத்தியவந்தன்
அவரை தனது இருக்கையின்
அருகினிலே அமரச் சொன்னார்.
வந்திருந்தோர் அனைவரயும்
பார்த்து ஆசிகளைவழங்கிமுடித்த
பிறகு அறையின் கதவுகளை
மூடிவிட்டு கணேசனைப் பார்த்து
பேசினார். அந்த உரையாடல்களை
இப்போது உங்களது விழிகளுக்கு
"நேரலையாக" வழங்குகிறேன்.
ஸ்வாமிகள்:- பக்தனே !! கணேசா !!
உன்னை மட்டும் நான் தனியாக
சந்தித்து ஆசிகளை வழங்குகிறேன்
ஏன் என்பதை நீ அறிவாயா?
கணேசன்:- இல்லை ஸ்வாமி
எனக்குத் தெரியவில்லை. தாங்களே
பதிலைக் கூறிவிடுங்கள்.
ஸ்வாமி:- உன்னிடம் ஒரு மாபெரும்
குறை ஒன்று உள்ளது பக்தனே. நீ
ஒரு ஏமாளியாகவும் இருக்கிறாய்.
அதனை உன்னிடம் சொல்லி அந்த
மாயையிலிருந்து நீ விடுபட்டு அந்த
அன்பு வளையத்தினை விட்டும் நீ
வெளிவந்து இனிமேலாவது
ஏமாறாத மனிதனாக நீ வாழ்ந்திட
வேண்டும் என்பதற்காகத்தான்
உன்னை தனியே சந்தித்துஆசிகளை
இப்போது வழங்குகிறேன்.
கணேசன்:- சுவாமி !! தாங்கள்
கூறுவது ஒன்றும் எனக்குப்
புரியவில்லை. நான் ஏமாளியா?
நான் எந்த மாயைக்குள்
மாட்டிக்கொண்டு இருக்கிறேன்.
தாங்கள் தயைகூர்ந்து அதனை
எனக்கு இப்போதே தெரிவியுங்கள்
ஸ்வாமி.
ஸ்வாமி:- அட!! மட மனிதனே !! நீ
வேறுயாரிடமும்ஏமாறவில்லையே.
ஆசை மனைவியிடம் அல்லவோ
ஏமாந்து கொண்டு இருக்கிறாய்.
கணேசன்:- (சற்றே அதிர்ந்துபோய்)
ஸ்வாமி !! தாங்கள் என்ன
கூறுகின்றீர்கள் ? உண்மையாகவா?
சுவாமி:- ஆம் மகனே!! உனக்கு
இந்த சேதி சற்று அதிர்ச்சியாகவே
இருக்கும். ஆனால் அதைத்தான்
நான் உண்மை என்று கூறுகிறேன்.
உனக்கு எனது பேச்சில் நம்பிக்கை
இல்லை என்றால், அதை சோதித்து
பார்த்திட உனக்கு ஓர் வாய்ப்பு
தருகிறேன். ஒரு அதிசயமானகல்பம்
(மாத்திரையைப் போன்றது)
தருவேன். நீ அதை இரவு படுக்கப்
போவதற்கு முன்பாக உட்கொள்.
அதன் பலன் உனது பூத உடலின் மீது
முழுவதுமாக பரவிட சுமார் எட்டு
மணி நேரமாவது ஆகும். இரவு 1௦
மணிக்கு நீ இந்தக் கல்பத்தை
உட்கொள்.காலை6மணிக்குஎல்லாம்
நீ உயிருள்ள பிணம்போல
மாறிடுவாய். உனது விழிகள் மட்டும்
மூடி இருக்கும். ஆனால் உனது
செவிகள் திறந்தே இருக்கும்.
அப்போது உன்னைச் சுற்றி என்ன
நடக்கிறது என்பதை நீ உற்றுக்
கவனி. அப்போதாவது உன்
மனைவியைப் பற்றி நீ அறிந்து
கொள்வாய். அவள் விரும்புவது
உன்னை அல்ல. உன்னிடம் உள்ள
பணத்தை மட்டுமே. இந்த
சோதனையில் உனதுமனைவியைப்
பற்றிய உண்மையை நீ தெரிந்து
கொள்வாய்.ஆனால் இதில் ஒரு
விஷயம் மிகவும் முக்கியமாக
கவனிக்கவேண்டும்.
கணேசன் :- அது என்ன சுவாமி ?
ஸ்வாமி:- உனது உடல் ஏதாவது
ஒன்றின்மீது முட்டினாலோ அல்லது
மோதினாலோ கல்பம் தனது செயல்
இழந்து நீ உயிர்பெற்றிடுவாய்.இந்தா
மகனே!!பிடி. இன்று இரவு நீ உண்ண
வேண்டிய கல்பம்.
கணேசன் :- மிக்க நன்றி ஸ்வாமி.
இந்த அக்னிப் பரீட்சையில் யார்
வெல்லப் போகிறார்கள் என்று
பார்ப்போம். தாங்களா ? அல்லது
எனது மனைவியின் மேல் நான்
வைத்து இருக்கும் பாசம்,நேசம்,
அன்பு மற்றும் காதலா என்று !! நான்
வருகிறேன்.(வீட்டுக்கு கிளம்பினார் )
அன்பர்களே !! கட்டுரையின் நீளம்
ஹனுமார் வால் போல நீண்டு
கொண்டே போவதால் ஒரு சிறிய
இடைவேளை !! இப்போது. நன்றி!!
வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
(கட்டுரையின் இறுதி பாகம் மீண்டும்
நாளை தொடரும்.)
No comments:
Post a Comment