தொடர்ச்சி.....பாகம் எண் :-2....விடிஞ்சாத்தான் தெரியும் !! உங்க ஆத்தாவா? இல்ல !! எங்க ஆத்தாவா?--ஒரு சிரிப்புக்கதை--தொடரும் நினைவுகள் !!
அறிவுரை. இதை இன்று எத்தனை
ஆண்கள் தங்கள் புத்தியில் ஏற்று
செயல் படுகிறார்கள்? இது தான்
இன்றுஇளையசமுதாயத்தின்முன்
நான் எழுப்ப விரும்பும் கேள்வி
அன்பர்களே!!
இவன் மட்டும் பார்த்தால்
கண்டங்கருவாயனாக
இருப்பானாம்.
ஆனால் இவனுக்கு மனைவியாக
வருபவள் மட்டும் "ஐஸ்வர்யாராய்"
போல சிவப்பாக ,அழகாக ,
இருக்க வேண்டும் என்று இவன்
எதிர்பார்ப்பானாம். இது எந்த ஊர்
நியாயம். இல்ல நான் கேட்கிறேன்.
அது நியாம்தானா நீ சொல்லு.
ஆக இங்கேயே மனதில்வித்தியாசம்
தொடங்க ஆரம்பித்துவிடுகிறது
அன்பர்களே. அடுத்த
வித்தியாசம் தொடங்கிடும் இடம்
வருமானத்தில். இவனைவிடவும்
அதிகமாக பணம் சம்பாதிக்கும்
பெண்ணாக என்றைக்கு இவன்
விரும்பஆரம்பிக்கின்றானோ
அப்போதே முடிந்துவிட்டது
இவனுக்கு இவனே, இவனது
தன்மான உணர்வுகளுக்கு,
இவனது கணவன் என்னும் உயரிய
நிலைபாட்டிற்கு, அந்த உயர்வான
பொறுப்புக்கு இவனே சவக் குழி
தோண்டிடத்துணிந்து விட்டான்
என்பதே உண்மை. சரி!!
அன்பர்களே !! இப்போது
கட்டுரையும், கதையும், வேறு
திசைநோக்கிப் பயணிக்க
ஆரம்பித்துவிட்டது என்பதை நான்
இங்கே உணர்ந்திட
ஆரம்பித்துவிட்டதால் இந்த
அளவோடு சமூக சிந்தனையை
நிறுத்திக் கொண்டு கதைக்குள்ளாக
செல்கிறேன் !!
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஆனால்,
அந்தக் கதை, சற்று ஒருசிறிய
விளம்பர இடைவேளைக்கு
பிறகுதான். என்ன சரியா? சற்றே
பொறுமையுடன் காத்திருக்கவும்.
(தொடரும்).....
அன்பர்களே !!
கதை இப்பொழுது தொடர்கிறது !!....
சோழவந்தானில் வாழ்ந்து வரும்
நமது கதையின் நாயகன் 37 வயது
உடைய திரு.வஜ்ரவேலு, மற்றும்
அவரது அழகிய இளம் மனைவி
வனிதா வயது 22 ஆக இந்த
இருவரும் ஏதோ, கணவன் மனைவி
என்று ஆகிவிட்டோமேஎன்பதற்காக
குடித்தனம் நடத்தி வரும் போதிலே
(இதற்கு மூல காரணம் என்ன
என்றால், எல்லாம் அந்த வயது
வித்தியாசம்தான்) வனிதாவின்
அம்மா பெயர் குருவம்மா (65)
இவர்களுடன் சேர்ந்து ஒரே
வீட்டினில் வசித்துவந்தார் அதாவது
திரு வஜ்ரவேலு அவரது
மாமியாரையும் தனது
குடும்பத்தோடு ஒன்றாகவே
வைத்துப் பராமரித்து வந்தார்.இப்படி
இவர்களது வாழ்க்கை (அம்மாவும்
தன்னுடன் இருக்கிறார் என்ற ஒரே
மன நிம்மதியுடன் வஜ்ரவேலுவின்
மனைவி வனிதா வாழ்ந்து வந்தார்)
ஒருவாறாக உருண்டு
ஓடிக்கொண்டு இருக்கும்போது
வனிதாவின் நிம்மதியைக்
குலைக்கும் விதமாக,
வஜ்ராவேலுவின் தாயார்
கனகாம்பரமும் கிராமத்தில் இருந்து
வஜ்ரவேலுவுடன் சேர்ந்து வாழ
வந்து சேர்ந்தார். அங்கே பிடித்தது
சனியன், வனிதாவுக்கும் அவரது
தாயார் குருவம்மாளுக்கும்.
வனிதாவுக்கு எப்படியாவது தனது
மாமியாரைத் தனது வீட்டில் இருந்து
வெளியேற்றிவிட வேண்டும். அந்த
அம்மையாரை எப்பாடு பட்டாவது
ஒன்று, வீட்டை விட்டு விரட்டி
அடிக்கணும், அல்லது, தனது மாமி
கனகாம்பரத்தை எப்பாடுபட்டாவது
கொன்றுவிடவேண்டும்,மாமியாரை
சாவுக் குழியில் தள்ளிடனும்
என்பதில் மிகவும் குறியாகவே
இருந்துவந்தார், மாமியார்
கனகாம்பரம் தனது புருஷன்
வீட்டுக்கு குடிவந்த நாள்
முதலாகவே !! இவர்கள் வீட்டின்
முன்புற வாசலில் இரண்டு
உயரமான,அகலமானதிண்ணைகள்
இரண்டு உண்டு. இதில் வடக்கு
பக்கம் உள்ள திண்ணையில்
வனிதாவின் அம்மாவும் தெற்கு
பக்கம் உள்ள திண்ணையில்
வஜ்ரவேலுவின் தாயார்
கனகாம்பரமும் இரவினில் படுத்து
உறங்குவது வழக்கம். வனிதாவோ
தனது மாமியார் வீட்டுக்கு வந்தநாள்
முதலாகவே புருஷனை நச்சரிக்க
தொடங்கி விட்டாள்.
ஏங்க...உங்களுக்கு நான் வேணுமா?
இல்ல உங்க அம்மா வேணுமா ?
நீங்களே முடிவு பண்ணிக்குங்க !!
நான் வேணும்னா நீங்க உங்க
அம்மாவைக் கொன்னுடனும். என்ன
நான் சொல்றத அப்படியே
கேப்பீங்களா ? இந்தத் துயரம்
தினமும் வஜ்ரவேலு தூங்கப்
போகும் முன்னர் கணவன் மனைவி
இருவரிடமும் விவாத மேடைப்
பிரசங்கமாகவே தினம் தினம்
நடப்பது வாடிக்கையாக
மாறிவிட்டது. பொறுத்துப்
பொறுத்துப் பார்த்தார் வஜ்ரவேலு.
கடைசியில் ஒரு நாள் இந்தப்
பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு
ஒன்றை எடுக்க வேண்டிய கட்டாய
சூழ்நிலைக்கு அவர் தள்ளப் பட்டார்
தனது மனைவி வனிதாவினால்.
அப்படி அவர் என்னதான் முடிவு
எடுத்தார்?
கொஞ்சம் இடைவேளை!! நாளை
இந்தக் கட்டுரை இறுதிபாகத்தை
அடையப் போகிறது. தயவு செய்து
சற்று அதுவரை பொறுத்து
இருங்களேன்.
(தொடரும்............)
No comments:
Post a Comment