உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !! உங்கள்
அனைவருக்கும்எனது உளங்கனிந்த
வாழ்த்துக்களோடு இணைந்திட்ட
வணக்கங்கள் உரித்தாகுக !!
இன்று நாம் பார்க்க, படிக்க,இருக்கும்
பொருள் என்னவென்றால், அது நாம்
இதுவரையிலும் எட்டிக்கூட
பார்த்திடாத ஒரு விஷயம்.
அட.......அது........என்ன.....பாலு......சார்....
யென்னா..........புதிர் போடுதீய........
அட..... சும்மாச்சொல்லவே.....
....ஆமலே........அப்டியே பொங்கி
வழியப்போவுதில்ல..கமகமன்னு
மணக்கப் போவுதுல்ல......நீரு...........
பாட்டுக்கு புரியாமப் பேசுதீரும்........
ஆம்.அன்பர்களே..நெல்லைத் தமிழ்,
இந்தக் கட்டுரை முழுவதும்,
அப்படியே, சும்மா ஜோரா
எதிரொலிக்கப் போகிறது
அன்பர்களே!! பார்த்துப் பின்னர்
படித்து இரசியுங்கள் என்று
மனமாரக் கேட்டுக்கொள்ளக்
கடமைப் பட்டுள்ளேன்.
மகாகவி பாரதியாரால் பாராட்டுப்
பெற்ற "சொல்வழங்கு தமிழ்"
என்பது இரண்டே இரண்டுதான் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! அவை
எவை என்று கேட்டால் முதலிடம்
வகிப்பது எங்கள் மதுரைத்தமிழ்,
இரண்டாவது இடம் நெல்லைத்
தமிழுக்கு !! இந்தக் கருத்தை
பாரதியார் தமது :-
செந்தமிழ்நாடென்னும்போதினிலே!!
இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே!
என்றபாடலில்நீங்களேபார்க்கலாம்.
காவிரிதென்பெண்ணை பாலாறு !!
தமிழ் கண்டதொரு வைகை !!
பொருணை நதி !!
இந்தப் பாடலின் பொருள்
என்னவென்றால் :-
காவிரி, தென்பெண்ணை, மற்றும்
பாலாறு,இவைகள் எல்லாம் வெறும்
ஆறுகள் அல்லது நதிகளே ஆகும்.
ஆனால் அதே நேரம் நான் பிறந்து,
என்னை வளர்த்த , என்னை
ஆளாக்கிய, என்னை மனிதனாக
மாற்றிய, என்னை ஒரு தமிழ்
நேசனாக, உருவாக்கி, முத்தமிழுக்கு
சங்கம் வளர்த்த பெருமை கண்ட
மதுரை நகரினில் பாய்ந்து வரும் (?)
(இப்போது அல்ல அன்பு நேயர்களே!!
முன்பு ஒரு காலத்திலேதான் !!) நதி
"வைகை" மற்றும் நெல்லையை
செழிக்க வைத்திடும் பொருணை
என்று முன்பு அழைக்கப்பட்ட,
இப்போது தாமிரபரணி என்று
அனைவராலும் அழைக்கப்படும்
இந்த இரண்டு நதிகளும் அந்தந்த
நகரங்களில் பேசப்படும் தமிழால்
அதன் உச்சரிப்பால், அது தந்திடும்
உணர்வுகளால், அந்த உணர்வுகள்
நமக்கு அளித்திடும் உள்ளத்து
உவகையினால், அந்த உவகையை
மனதினுள் இரசித்திடும் மனிதர்கள்
அவர்களது மேனியானது அந்தந்த
நதிகளில் ஒன்றாக சங்கமிப்பதால்
அந்த நதிகளும் தமிழ் மொழிக்கு
உள்ள சிறப்புகளையும் பெற்று
தனித்துவமாக விளங்குகிறது என்று
பொருள் உரைத்த பாரதி வாழ்க!!
அவனது புலமைக்கு,அந்த
புலமையின் பெருமைக்கு எனது
தலை தாழ்ந்த வணக்கங்களை
நான் இந்த இடத்தினில் பதிவு
செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
சரி !! நேயர்களே !! இப்போது நான்
மதுரைதரும் செந்தமிழை விடுத்து
நெல்லைதரும் அருமைத்தமிழில்
இனிமுதற்கொண்டு எழுத,பேசிட,
என்னை நான் ஆயத்தம் செய்து
கொள்கிறேன்!!
அட!!....என்னங்க!!..உம்மைத்தானே!!
நீரு!! ஒரு பஸ்-ஸ்டாண்டுக்கு
புரத்தாலே நின்னுட்டு இருந்தீயன்னு
வையும் !! அப்பாலே உம்மகிட்ட
ஒத்த பொம்பளை ஏலே !!(?) இந்த
பஸ் எந்த ஊருக்குலே போவுதுன்னு
கேக்குன்னு வச்சிக்கிடுங்க !! நீரு
எந்த ஊரு பேரை சொன்னாலும்
உமக்கு எவளும் எந்த ஏச்சும்
பேச்சும் சொல்லமாட்டாளுவ!! இந்த
ரெண்டு ஊரு பேரை மட்டும் நீரு
சொல்லாங்காட்டியும் !! அப்படி எந்த
ஊருலே !! நம்மளுக்கு ஏச்சும்
பேச்சும் வாங்கியாந்து தாறது !! அட..
என்னாலே!! நாம் பாட்டுக்கு
கூவிக்கிட்டே இருக்கேன். நீ
உம்பாட்டுக்கு பேசாம வாயைப்
பொத்திக்கிட்டு குத்தவச்சுக்கிட்டு
கிடக்கீரு. உம்ம வாயில என்ன
கொழுக்கட்டையா வச்சிருக்கீரும்.
பேசும்..இப்ப..பேசுதீயளா !! இல்ல
நாம் போட்டா !! சொல்லுவே !!
அடடா.. யோவ்..உமக்கு இன்னைக்கு
பொழுதுக்கே கிறுக்கு கிறுக்கு
புடிச்சுப்ப்போச்சா!!
சொல்லுதேனுல்ல !! அந்த ரெண்டு
ஊரு பேரு தான் :-
1) ஏர்வாடி !!
2) போடி !!
(ஆகா !! இந்த லொள்ளு எப்படிலே
இருக்கு !! சொல்லுதீயளே !!புரவு!!)
அன்பர்களே !! இத்துடன் நெல்லைத்
தமிழும் நிறைவு பெறுகிறது !! நமது
கட்டுரையும் தற்காலிகமாக
முடிவடைகிறது !! மீண்டும் எமது
அடுத்த பதிவினில்
உங்களனைவரையும் நான்
சந்திக்கிறேன். அதுவரை
உங்களிடம் இருந்து அன்புவணக்கம்
கூறி விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் !! மதுரை T.R. பாலு.
(தொடரும்)...
No comments:
Post a Comment