உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு!!
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது !!
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது !!
குள்ளநரிக்கூட்டம்வந்துகுறுக்கிடும்!
நல்லவர்க்குத் தொல்லை தந்து
மடக்கிடும் !! நீ
எள்ளளவும் பயம்கொண்டு
மயங்காதிரு !!
அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி
வைக்கத் தயங்காதிரு !!
என் உயிரினும் மேலாக நான்
போற்றி வணங்கி வரும் எனது
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
அதனுடன் இணைந்த வணக்கங்கள்.
நான் இங்கே சொல்லப்போகின்ற
கதை, எனது கற்பனையில்உருவான
ஒரு அற்புதக் காவியம். இந்தக் கதை
நடைபெற்றதாகச் சொல்லப்படும்
கால கட்டம் எது என்றால் பல்லவ
மன்னர்கள் ஆட்சி புரிந்திட்ட ஒரு
சாம்ராஜ்ஜியத்தில் நிகழ்ந்ததாக
இங்கே புனையப்பட்டுள்ளது எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஒரு பல்லவ மன்னன் அவன் பெயர்
நரசிம்மன். மிகவும் கொடுமை
மிகுந்த உள்ளக்காரகனான அவன்
அரசாங்கத்தின் வருமானத்தை,
உணவுக் களஞ்சியத்தின் இருப்பை
அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு
அடிப்படையில் என்ன செய்வான்
என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள
ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்க
நெற்களஞ்சியத்தில் இருந்து
ஒவ்வொரு மூட்டை நெல்மணியை
பிரதி மாதம் முதல் தேதி அனுப்பி
வைப்பான். ஸ்ரீமான் பொதுஜனம்
என்ன செய்ய வேண்டும் என்றால்
அந்தந்த மாதத்தின் இறுதி தேதிக்கு
முன்பாக அவர்கள் அரசாங்கத்தில்
பெற்றுக்கொண்ட ஒரு மூட்டை
நெல்லுக்கு பதிலாக ஒரு மூட்டை
அரிசியாக அதனைத் திருப்பிச்
செலுத்திட வேண்டும் என்பதே
அரசின் ஆணை. இந்த சட்டத்தை
யார் மீறினாலோ அல்லது
நிறைவேற்றிட மறுத்தாலோ,
தயங்கினாலோ, காலம் கடத்தி
வந்தாலோ அவர்களுக்கு 5
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
உண்டு. பொதுமக்கள் மனத்தில்
மிகுந்த வேதனைகளுடன் நம் தலை
எழுத்து இப்படிப்பட்ட கொடுமைகள்
நிறைந்த அரசின் பிடியில் நம்மை
அந்த எல்லாம் வல்ல இறைவன்
இப்படி ஒரு கொடுமைக்கார
அரசாங்கத்திடம் சிக்கிட வைத்து
விட்டானே என மனதுக்குள் எண்ணி
புழுங்கியே தத்தமது
வாழ்க்கையைநடத்தி வந்தனர்.
என்று இந்தக் கொடுமைக்கார
அரசாங்கம் தொலைந்து போகும்
என்று எண்ணி மக்கள் காத்துக்
கொண்டு இருந்தனர்.(என்ன பாலு
சார் !! கதையைப் பார்த்தால் நம்ம
தமிழ்நாட்டினில் நடைபெற்றுக்
கொண்டு இருக்கும் அரசை நினைவு
படுத்துகிற மாதிரி இல்ல இருக்குது)
இப்படி இருந்த ஒரு கால கட்டத்தில்
மன்னர்பல்லவவர்மன்திடீரென்று
மாரடைப்பினால் மரணம் அடைய
அவரது மகன் இளவரசன் சோம
பல்லவ வர்மன் பதவிப் பொறுப்பு
ஏற்று அரசாங்க நடவடிக்கைகளை
கவனித்து வந்தான். அப்படி
இருக்கும்போதுதான் அரண்மனை
ஜோதிடர் ஜெகன்னாதன் அங்கே
வந்தார். அவரிடம் இளவரசர்
வினவினார் என்ன என்றால்மரணம்
அடைந்து விட்ட தந்தை தற்போது
இருப்பது சொர்கத்திலா அல்லது
நரகத்திலா என வினவினார்
இளவரசர். உடனே ஜோதிடர்
கட்டங்களில் சில கணக்குகளைப்
போட்டு விட்டு அய்யா தங்கள்
தந்தை மக்களை எவ்வளவு
கொடுமை படுத்தி இருந்தாலும்கூட
சில பல நன்மைகளையும் கூடவே
செய்து வந்துள்ள காரணத்தாலே
அவர் சொர்கத்தின் வாயிலில்
தொங்கிக்கொண்டுஇருக்கிறார்.அது
சிலர் இவர் எவ்வளவு நல்லவர்
என்று சொன்னால் போதுமானது.
உங்கள் தந்தைஅங்கே சொர்கத்தின்
உள்ளாக சென்றிடுவார் என்று
உரைத்தார். பூ... இவ்வளவுதானா
யாரங்கே மந்திரி மணாளா இங்கே
வாரும் இப்படி.. என்றார் இளவரசர்.
மந்திரி:-மன்னா ? அழைத்திட்ட
காரணம் யாதோ.
இளவரசர்:- அரசாங்க அரிசி
கஜானாவின் திட்டத்தில்
இன்றுமுதல் மாற்றங்கள்செய்திடுக.
மந்திரி :- என்ன மாற்றங்கள் ?
இள:-இதுவரைஉள்ள நடைமுறை?
மந்திரி:- ஒருமூட்டை
நெல்கொடுத்து ஒரு மூட்டை அரிசி
இதுதான் நடைமுறை.
இளவ:- இனிமுதல் மாற்றுக.
ஒருமூட்டை உமி. ஒருமூட்டை
அரிசி. அரசாங்கத்தின் அரிசி
கஜானாவிற்கு மக்கள் செலுத்திட
வேண்டும்.இது மன்னர் உத்தரவு.
மந்திரி:- அப்படியே ஆகட்டும்.
மன்னரின் புதிய மக்கள் மத்தியில்
சலசலப்பை ஏற்படுத்திட மக்கள்
மத்தியில் மாறுவேடம் தரித்து
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என
ஒட்டுக் கேட்கிறான் இளவரசன்.
மக்கள்:- அடப் பாவி மட்டை. இவங்க
அப்பனாச்சும் ஒரு மூட்டை
நெல்லைக் குடுத்து ஒரு மூட்டை
அரிசி கேட்டாரு. நாம தந்தோம்.
பாதிக்கு பாதிதான் கை நட்டம். இப்ப
என்னடான்னா, மகன் ஆட்சிக்கு
வந்தவுடன் ஒரு மூட்டை உமிக்கு
ஒரு மூட்டை அரிசிஇல்லை
கேக்கான். நாம எங்க போறது. யக்கா
இவனுக்கு இவன் அப்பன் எவ்வளவு
நல்லவன்.(என்று மக்கள் பேசுவதை
காத்து குளிரக் கேட்ட மைந்தன்
வேகமாக அரசவைக்கு வந்து
ஜோதிடரை அழைக்கிறான்.அவரும்
வருகிறார். இப்ப பாரும் ஒய்
ஜோசியரே என் அப்பன் எங்கே
இருக்காரு என்று. சொர்கத்தில்
தொங்கிகிட்டு இருந்தவர் உங்க
புண்ணியத்தாலே சொர்கத்தின்
உள்ளே சென்று விட்டார் என்று
சொல்லவே மனம் நிம்மதி
அடைந்தான் இளவரசன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன், மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment