அனைவருக்கும் வணக்கம்!!
சிரித்து வாழ வேண்டும் !! பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே !! என்று
பாடல் எழுதியவர் காவியக்
கவிஞர் வாலி. புரட்சி நடிகர் M.G.R.
நடித்து 1972 ஆம் ஆண்டு வாக்கில்
பெரும் போராட்டத்திற்கு பிறகு
கடுமையான முயற்சிக்கு பின்னர்
வெளிவந்த " உலகம் சுற்றும்
வாலிபன் " படத்தில்தான் மேலே
சொன்ன பாடல் இடம் பெற்றது.
அந்த அடிப்படையில் இறைவனின்
படைப்பினில் உருவான அத்தனை
ஜீவ ராசிகளில் சிரிக்கும்சக்தியைப்
பெற்ற ஒரே இனம் மனித இனம்
மட்டுமே. ஆனால் இன்று
எல்லோரும் வாய் விட்டு சிரிப்பது
என்பது கிடையாது. 1௦௦ நபரில்ஒரு
1௦ நபர்கள் மட்டுமே வாய் விட்டு
சிரிக்கும்வல்லமைபெற்றவர்களாக
இங்கே இருக்கிறார்கள். (அந்த 1௦
நபர்களுள் நானும்/அடியேனும்
ஒருவன்.)
ஆக இந்தக் கட்டுரை நாம்
அனைவரும் சிரித்திடவேண்டும்
என்ற அடிப்படையில் எழுதப்
பட்டுள்ளது. படித்துப் பார்த்து
சிரிங்க. முடிந்தால் வாய் விட்டு
சிரிங்க. என்ன சரியா ?
சிந்திக்க! சிரிக்க!!
பொதுவாக நாம்
செய்யும் தொழில்
விருத்தி அடைய வேண்டும் என
நாம் விரும்பும்போது அதற்குஎன்று
ஏற்பட்ட விளம்பர நிறுவனங்களை
அணுகுவது என்பது இயல்பான
ஒன்று. அதற்கேற்ப ஒரு
மருத்துவமனை நிறுவனம் தனது
வாடிக்கையாளர்களை/
நோயாளிகளை அதிகப்படுத்திட
வேண்டும் என்று எண்ணி ஒரு
விளம்பர
நிறுவனத்தை
அணுகியது. இரண்டு வரிகளில்
விளம்பரம் இருக்க வேண்டும்
என்று
கேட்டுக்கொண்டதற்கு
இணங்க அந்த நிறுவனமும்
கீழ்க்கண்ட விளம்பரத்தை
வழங்கியது:-
“கூட்டிக்கிட்டு வாங்க"!
"தூக்கிக்கிட்டு போங்க"!!
“பணம் எங்களுக்கு"!
"பிணம்
உங்களுக்கு”
இது எப்படி
இருக்கு? (பதினாறு
வயதினிலே ரஜினி/கமல் டயலாக்)
நன்றி! வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment