உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்பு ஏதும் இன்றி !!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடும் போது !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக மனிதனுக்கு உள்ள
உணர்ச்சிகளுள் அவனுக்கு மிகமிக
ஊறு விளைவிக்கும் உணர்ச்சியே
" கோபம் " என்பது. சம்பந்தப்பட்ட
நபருக்கு இந்த கோபம் என்பது
பெற்றோர்,அண்ணன்,அக்கா,தம்பி,
தங்கை,மனைவிஎனஎல்லோரிடம்
உள்ளபடியே இவர் வெளிப்படுத்தும்
கோபத்தின் காரணமாக இவர்மேல்
வெறுப்பையும்,மனக்கசப்பையும்
மட்டுமே வெளிப்படுத்தும். இதை
எவர் உணர்ந்துகொள்கிறாரோ
அவர் உண்மையிலேயே இந்தக்
கோபத்தைவெளிப்படுத்தும் பழக்க
வழக்கத்தை நிச்சயமாக விட்டு
விடுவார் என்றே எதிர்பார்க்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
நிறுவனர் தலைவர் காலஞ்சென்ற
அறிஞர் அண்ணா எப்போதும் கூறும்
ஒரு கருத்து அந்தக் கட்சியின்
பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின்போது
தவறாமல் ஒலிபரப்பப்படும் இசைத்
தட்டு ஒன்றினில் மறைந்த
வெண்கலக் குரலோசைக்கு உரிய
சிதம்பரம் ஜெயராமன் பாடிடும்
பாடல்ஒன்றின்மூலம்அண்ணாவின்
கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும்.
பாடல் இதோ உங்கள் பார்வைக்கு:-
தம்பி !! கோபத்தை மறந்து விடு !!
அந்தக் கொடிய பழக்கத்தை
நிறுத்திவிடு !!
நாவடக்கம் இல்லா வாழ்க்கையில்
ஆபத்து !! நாடி வரும் !! உன்னைத்
தேடி வரும் !!தம்பி !! கோபத்தை
மறந்து விடு !!
என்ற மேலே சொன்ன பாடல்
இந்தசந்தர்ப்பத்தில்எனக்கு
நினைவுக்கு வருகிறது அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
வான் புகழ் திருவள்ளுவர் என்ன
சொல்லியிருக்கிறார் என்று
பார்ப்போமா அன்பர்களே இந்தக்
கோபத்தைப் பற்றி.
அதிகாரம் :- அடக்கமுடைமை.
குறள் எண்:- 127.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு... ...
விளக்கம் :- காக்கவேண்டியவற்றுள்
எவற்றைக் காக்காவிட்டாலும்
நாவையாவது காப்பாற்ற வேண்டும்.
காக்கத்தவறினால்சொற்குற்றத்தில்
அகப்பட்டுதுன்புறுவர்.இதுவள்ளுவர்
நமக்குத் தந்த குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நாம் எதையும் அவசரப்பட்டுபேசிடக்
கூடாது அதற்காகவே இறைவன் 32
கற்கோட்டைகளின் நடுவினிலே நம்
நாக்கைப்படைத்ததை நாம் சற்று
உற்றுநோக்கிகவனித்தோம்எனில்
அவனதுபடைப்பின் சூட்சுமம் நமக்கு
புரியும். எந்த ஒரு விஷயத்தையும்
அவசரப்பட்டுநாம்பேசிவிடக்கூடாது.
அந்த32பற்கள்என்னும்கோட்டையை
தாண்டி நாக்கை வெளியே கொண்டு
வருவதற்கு முன் நன்றாக யோசித்து
இந்தப் பேச்சு நாம் பேசித்தான் ஆக
வேண்டுமா என்று சற்றே சிந்தித்து
பேசினோமேயானால் எந்தவிதமான
கோபதாபத்திற்கும் வில்லங்க
விவகாரங்களுக்கும்இடமளிக்காது
நாம் நமதுவாழ்க்கையைக்கொண்டு
செல்லமுயற்சிப்போம்.
இனிமேலாவது.
மிக்க நன்றி !! வணக்கம் !!
வாழ்வோம் வளமுடன் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment