Saturday, 7 September 2013

சூயிங்கம் சாப்பிடலாமா ? கூடாதா ? மத்தபடி சூயிங்கம் நல்லதா?இல்லை கெட்டதா?






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம் !!


விண்ணுக்கு !!





அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய


உலகெங்கிலும் வாழ்ந்து வரும்


என் இனிய தமிழ்உடன் பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது


பணிவான வணக்கங்கள் !!




பொதுவாக இன்றைய நவநாகரீக


உலகினில் இளைஞர்கள் முதல்


நடுத்தர வயதினைத் தாண்டியோர்


வரை அவர்கள் தெரிந்தோ அல்லது


தெரியாமலோ சவைத்துக்கொண்டு


இருக்கும் பொருள்தான் " சூயிங்கம் "


இதை உண்பதினால் என்னென்ன


கேடுகள் நமது வயிற்றுக்கும்


இரைப்பைக்கும்வரகாத்திருக்கிறது


என்பதை அறியாது இருப்பதால்தான்


அவர்கள் அந்த சூயிங்கம் என்னும்


சிறு விஷத்தை சவைத்துக்கொண்டு


இருக்கிறார்கள் அன்பர்களே !!





இறைவன் நமக்கு அளித்தஉடல்கூறு


தத்துவப்படி நம் வாய் அசைபோட


ஆரம்பித்த உடனேயே மூளையில்


இருந்து இரைப்பைக்கு ஒருகட்டளை


பிறப்பிக்கப்படுகிறது. 


அது என்னவென்றால்ஏதோ ஒரு 


உணவுப்போருள் ஒன்றினை


தற்போதுவாய்அசைபோட்டுக்


கொண்டுஇருக்கிறது. எனவே 


அதனை செரிமானம்செய்திட, ஏய் 


இரைப்பையே நீ அமிலத்தை


உடனே சுரக்க ஆரம்பித்துவிடு 


என்பதேஅந்த கட்டளை ஆகும். 


ஆனால் இங்கே உண்மையில்


என்னநடைபெறுகிறது,சூயிங்கத்தை


வெறுமனே வாய் அசைபோடுகிறது 


அதைத்தவிரவேறு ஒன்றும் அங்கே 


நடைபெறுவதுஇல்லை. வேறுஎந்தப் 


பொருளும்இரைப்பைக்குசெல்லு-


-வதும் கிடையாது. அப்படி என்றால்


சுரந்து இரைப்பையில் தயாரான 


அமிலம்என்ன செய்யும் ? 


அந்த அமிலம் வேறு எங்கும் அது 


செல்லவும்முடியாது.எனவே அந்த 


அமிலத் துகள்கள் நமது 


இரைப்பையிலேயே தங்கிவிட


ஆரம்பிக்கிறது  இது நாளாக நாளாக


தேங்கிவிடவும் ஆரம்பிக்கிறது. 


அப்படிதேங்க ஆரம்பிக்கின்ற 


அமிலக்  கூட்டங்கள் பின்னர் 


இரைப்பையில் என்ன செய்யும்


என்று கேட்டால், ஆற்ற முடியாத 


அளவுக்கு புண்களை ஏற்படுத்தும். 


அதன் விளைவாக நாம் உண்ணும் 


உணவுப் பொருட்களில் உள்ள 


காரம்,புளிப்பு,உப்புத் தன்மையுள்ள 

உணவுப் பொருட்களைசெரிமானம் 


செய்திடமுற்படும்போது 


புண்ணின்மேற்பரப்பில்  அந்த


கார உணவு படும் வேளையில் 


நமக்கு லேசாக வயிற்றுவலி 


உருவாக ஆரம்பிக்கும்.அவை 


கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி 


இரைப்பையில் உள்ள புண்ணும் 


பெரிதாக ஆகி அதன் பின்னர் 


நாம் ஒரு மாபெரும் வயிற்றுவலி 


நோயாளியாகவே (PEPTIC ULCER)


மாறிட நேரிடும் அன்பர்களே. இந்த 


வலி தீரவே தீராத நோயாக 


மாறிவிடும். நாம் அரும்பாடுபட்டு, 


கஷ்டப்பட்டு, ஈட்டியபொருளை,


பணத்தை,  நாம் செலவுசெய்து 


பாழாய்ப்போன இந்த சனியனை 


விலைக்கு வாங்குவானேன் ?


அதனை மெல்லுவானேன் ?


அதன் பின்னர் இப்படி வயிற்று 


வலியால் துடிதுடிச்சு 


அவதிப்படுவானேன் ? சிந்தியுங்கள் 


என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 


வேண்டாம் அந்தத் தீய பழக்கம் 


நமக்கு. ஏதோ உங்களைப் பெற்ற 


அன்னை சொல்லுவதுபோல 


உங்களுக்கு அறிவுரை 


சொல்லிவிட்டேன். வேலியிலே


போகின்ற ஓணானை எடுத்து


வேட்டிக்குள்  விடுவானேன்?பின்னர் 


அய்யோ !! அம்மா!! குத்துதே !!


குடையுதே என்று கத்துவானேன்? 


கதறுவானேன் ? எனவே என் அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே !! நீங்கள் 


இதுவரை சவைத்த சூயிங்கமே 


போதுமானது.  எனது இந்தக் 


கட்டுரையைப் படித்தபிறகாவது 


அந்தப் பழக்கத்தில் இருந்து 


நீங்கள் வெளியே வந்துவிட்டீர்கள் 


என்று கேள்விப்பட்டால் அதுஒன்றே 


போதுமானது எனக்கு. இந்தக் 


கட்டுரையை நான் உயிரைக் 


கொடுத்து எழுதியதற்கு, ஒருவர்,


ஒரே ஒருவர், அதனை, அந்தப் 


பழக்கத்தை விட்டுவிட்டேன் 


என நடைமுறை வாழ்கையில் 


கடைபிடித்தால் அது போதும் 


நேயர்களே. அது நான் எழுதிய 


எழுத்திற்கு நீங்கள் தருகின்றமதிப்பு. 


நல்ல பழக்கங்கள் என்று 


நாட்டினில் ஆயிரம் இருக்கு. அதை 


நாம் கடைப்பிடிப்போம்.


உங்களை நான் ரொம்ப நேரம் இந்த 


மிக நீண்ட கட்டுரையை படிக்க 


வைத்து உங்கள் கழுத்தை 


ஒருவேளை அறுத்து இருந்ததாக 


நீங்கள் உங்கள்மனதில்,உள்ளத்தில் 


எங்காவது ஒரு மூலையில் 

நினைத்தீர்கள் என்றால் அதற்காக 


நான் உங்களிடம் மன்னிப்பு பெறவும் 


தயாராக உள்ளேன்.மற்ற, பிற, பின்.


வாழ்வோம் நாம் அனைவரும் 


நலமுடன்!! உடல் வளமுடன்!! தேக 


பலமுடன் !! அன்புடன் !! நல்ல தமிழ் 


பண்புடன் !! நெஞ்சினில் 


இரக்கத்துடன்!! ஈகை நிறைந்த 


உள்ளத்து உணர்வுடன் !!

நன்றி !! வணக்கம் !!.


அன்புடன்,


மதுரை TR.பாலு.


No comments:

Post a Comment