Saturday, 21 September 2013

முகம்மதியர்களின் மதத்திற்கு " இஸ்லாம் " என பெயர் வந்த காரணம் --இது எனது கண்டுபிடிப்பு !!--திருத்தி வடிவமைக்கப்பட்ட புதிய பதிவு.!!




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!




வீரர்கள் வாழும் திராவிட நாட்டை


வென்றவர் கிடையாது !!


வேலும் வாளும் தாங்கிய மறவர்


வீழ்ந்ததும் கிடையாது !!




குள்ள நரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!


நல்லவர்க்கு தொல்லை தந்து


மடக்கிடும் !!--நீ


எள்ளளவும் பயம் கொண்டு 


மயங்காதேடா!!


அவற்றை எமனுலகுக்கு அனுப்பி


வைக்கத் தயங்காதேடா!!




அன்பும் பண்பும் ஒருங்கே அமைந்த 


உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


அருமைத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


சிரம் தாழ்ந்த,கரம் குவிந்த மாலை 


வணக்கங்கள் உரித்தாகுக !!




நான் இன்று தேர்ந்து எடுத்துள்ள 


தலைப்பு ஏறத்தாழ 6 மாதங்களுக்கு 


முன்பாக முகப் புத்தகத்தில் அதில் 


ஆங்கில விளக்கங்களுடன் கூடிய 


ஒரு விரிவான கட்டுரைதனை 


அதில் நான் பதிவு செய்து 


இருந்தேன் 




இன்று அதன் தமிழ் விரிவுரையை 


உங்களுக்கு வழங்குவதில் பெரும் 


மன மகிழ்ச்சியுடன் கூடிய மட்டற்ற 


மன நிறைவு அடைகின்றேன் 




பொதுவாக இந்துக்களுக்கும் 


முகம்மதியர்களுக்கும் அநேகமாக 


எல்லா விஷயங்களிலும் நேர் 

எதிர் மறையான அணுகுமுறை 


உள்ளது என்பது ஆதிகாலம் 


தொட்டே நடைமுறையில் உள்ள 


ஒரு விஷயம். எப்படி என்றால்:-


1) நாம் கிழக்கு திசைநோக்கி 

சூரியனை வணங்குகிறோம்.


அவர்கள் மேற்கு திசை நோக்கி 

சந்திரனை வணங்குவார்கள்.



2) நமக்கு நாள் பிறப்பது என்பது 

காலைவேளை என்றால் 


அவர்களுக்கு நாள் பிறப்பது 

இரவு வேளை.



3) நாம் நின்றுகொண்டு எல்லாம் 

வல்ல இறைவனை வணங்குதல்  

என்றால் 


அவர்கள் முட்டிக்கால் தரையில் 

இருக்க முதுகு வளைந்து எல்லாம் 

வல்ல இறைவனை தொழுவார்கள்.



4) நாம் நமது தலையில் ஏதாவது 

தொப்பி அணிந்து இருந்தால் அதை 

கழட்டி விட்டு இறைவனை நாம் 

வணங்குவோம்.



அவர்கள் தலையில் குல்லா or

கைக்குட்டை எதாவது கட்டியபின் 

மட்டுமே இறைவனை தொழுவர்.




நான் இந்த எதிர்மறை வேறுபாடு-


-களை எதற்காக இங்கே குறிப்பி-


-டுகிறேன் என்றால். இந்தக் 


கட்டுரையின் முக்கிய அம்சம் நாள் 


துவங்குவதில் இருப்பதால்.



பொதுவாக முகம்மதியர்களின் 


முக்கிய கடமைகள் 5 என்பதே.



1) அல்லா ஒருவரே இறைவன். 

   முகம்மது நபி அவரின் தூதர்.

   (லா இலாஹி இல்லல்லா !!   
   முஹம்மது ரசூலில்லா!!)



2) ஒரு நாளில் 5 வேளைகள் 

தொழுகை நடத்தி எல்லாம் 

வல்ல இறைவனை வணங்கிட 

வேண்டும்.



3) புனித ரம்சான் மாதத்தில் 

நோன்பு காத்து அன்ன ஆகாரம்,

நீர் ஏதுமின்றி விரதம் இருந்து 

மாலை விரதம் முடித்து 3௦ 

நாட்களும் அதுபோல இருத்தல்.



4)  தனது ஆண்டு மொத்த 

வருமானத்தில் 2.5% வறுமையில் 

வாடிடும் ஏழை,எளியவர்கட்கு 

தர்மம் செய்திடல் வேண்டும்.



5) தனது ஆயுள் காலம் முடியுமுன்

ஒருமுறையாவது மெக்கா-மதீனா 

சென்று அங்கு உள்ள முகமது 


நபிகள்சமாதிஉள்ள 


இடத்தில்வைத்து 

எல்லாம் வல்ல அல்லாவை 

நினைத்து தொழுகை நடத்திட

வேண்டும். ஏன் என்றால் 

முஹம்மது நபி இந்த உலகத்தின் 

கடைசி நபிகள் ஆவார் என்பதால்.

(இந்த உலகம் தோன்றிய நாள் முதல்

 முகம்மது நபி தோன்றியதையும் 

சேர்த்து மொத்தம்1,76,௦௦௦நபிமார்கள் 

இந்த துனியாவில் தோன்றியதாக 

அவர்கள் வரலாறு)



ஆக இந்த ஐந்து கடமைகளுள் நான் 


மேலே குறிப்பிட்ட 2 ஆவது 


கடமையான 5 வேளை தொழுகை 


என்பதற்குள்தான் எனது 


கண்டுபிடிப்பு அங்கே உருவானது 


எனது அன்புத் தோழர்களே !!



நான் முதலிலே குறிப்பிட்டதுபோல 


இந்துக்களுக்கு நாள் துவங்குவது 


காலை வேளை என்றால் 


முகம்மதியர்களுக்கு நாள் 


துவங்குவது 


இரவுதான். அந்த இரவு வேளையில் 


நடத்திடும் தொழுகையின் ஆங்கில 


பெயரின் முதல் எழுத்தை மட்டும் 


எடுத்து வைத்துக்கொண்டு 


அதேபோல 


ஏனைய மீதி உள்ள நான்கு வேளை 


தொழுகைகளின் ஆங்கில 


வார்த்தையில் 


முதல் எழுத்தினைமட்டும் நாம் 


ஒருசேரப் பார்த்தால் அந்த மதத்தின் 


பெயர் இஸ்லாம் (ISLAM) என மிகச் 


சரியாக வந்துவிடும் என் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!



எப்படி என்றால் இதோ விபரம் கீழே 


பாருங்கள் :-  


1)  இரவுநேர இறுதித் தொழுகை 

      

    அதன்  பெயர் :-


     ISHSHAA (இதிலிருந்து      I


2)  அதிகாலைவேளை தொழுகை 


    அதன் பெயர் :-


    SUBAH  ( இதிலிருந்து       S 



3)  நண்பகல்வேளை தொழுகை                  

    அதன் பெயர் :-


      LOHAR (இதிலிருந்து        L  



4)  மாலை வேளை தொழுகை அதன் 

     பெயர் :-
   

      ASAR   (இதிலிருந்து          A

5)  முன் இரவு வேலை தொழுகை 


     அதன் பெயர் :-

    

       MAHRIFF. (இதிலிருந்து   M


ஆக இப்போது அந்த 5 ஆங்கில 

எழுத்துக்களை ஒன்றுசேர்த்துப் 

படியுங்கள்.
         

                I   S   L   A  M 



இந்த கண்டுபிடிப்பை நான் 


நினைத்து உருவாக்கிட எனக்கு 


அறிவு வல்லமை 


தந்தது அந்த எல்லாம் வல்ல 


இறைவனே !!




எல்லாப் புகழும் இறைவனுக்கே !!



ஆண்டவன் ஒருவனே துணை 


நமக்கு!!




நீங்கள் நினைக்கலாம்என்னடா இது 


ஒரே அதிசயமாக இருக்கிறது நம்ம 


மதுரை T.R. பாலு   பிறப்பால் இந்து 


இவருக்குஎப்படிஇப்படிஇந்த ஞானம் 


வந்தது இஸ்லாமியமத சம்பந்தமாக 


என. அதற்கும் ஒருகாரணம் உள்ளது 


என் அன்புத் தோழர்களே !!


அதுதான் நான் உயிருக்கும் உயிராக,


நகமும் சதையும்போல விழியும் 


பார்வையும் போல உடலும் உயிரும் 


போல அப்படி ஒரு ஒட்டு உறவாக 


இருந்துவாழ்ந்துமறைந்தஎன் 


அன்புத் தோழர் அவர் இஸ்லாமியர் 


ஆவார்,அவர் பெயர் அல்ஹாஜ். 


முகம்மது யூனுஸ் என்பது தற்போது 


அவர் உயிரோடு இல்லை. காலமாகி 


(மர்ஹூம்)விட்டார். அவர் இருக்கும் 


வரை நான் ஓரு இந்துவாக 


இருந்தாலும்கூட ஏறத்தாழ 2௦ 


ஆண்டுகள் அவருடன் சேர்ந்து 3௦ 


நாளும் ரம்சான் நோன்பு காத்து 


விரதம் அனுஷ்டித்தவன் 


இந்த மதுரை TR. பாலு. அது தவிர 


எனக்கு இஸ்லாமிய மதக்கொள்கை,


கோட்பாடுகள் நிறைய எனது 


மனதுக்கு பிடித்தவையாக 


இருந்ததும் ஒரு காரணம். 


அதில் மிக முக்கியமான 


கொள்கை பெண்களுக்கு பர்தா 


எனும் உடல் முழுக்க மறைத்து 


(வீதியில் வரும்போது மட்டும்)


போடும் ஆடை அணிவித்தல் ஆகும்.


கணவனின் கண்களிலே நிறைந்து 


வாழுவாள். பிறர் கண்களுக்கு 


என்றுமே மறைந்து வாழுவாள் 


என்ற பாடல் வரிகள் எனக்கு 


மிகவும் பிடிக்கும் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!



மிக்க நன்றி. இவ்வளவு பெரிய ஒரு 


கட்டுரையைப் படித்த உங்கள் 


கண்களுக்கு.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !!



நன்றி !! வணக்கம் !!




அன்புடன். மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment