உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
இமைகள் திறக்கின்ற இந்த இனிய
நாள் உங்கள் வாழ்வினில் எந்த
சுமைகளும் இல்லாமல் சுகமாக
அமைந்திட என் இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள் !!
இப்போது நாம் கதைக்குள்
செல்வோமா அன்பு நெஞ்சங்களே!!
சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த
காலம் இந்தக் கதை நடந்ததாக
சொல்லப்படும் கால கட்டம்.
தஞ்சைத் தரணியில் ஒரு புகழ்
மிக்க இசைச் சக்கரவர்த்தி ஒருவர்
இருந்தார் பெயர் திரு.சோமநாத
பாகவதர். திருவிழா,கோவில்
நிகழ்ச்சி, பொது அமைப்புகள்
நடத்தும் கூட்டங்கள் என
எங்கு எல்லாம் அவர்தம் குரல்
ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம்
மக்கள் வெள்ளம் அலை மோதிய
காலம் அது.
அப்படி இருக்கின்ற ஒரு கால
கட்டத்தில் அரண்மனையில்
மன்னரது மகளின் திருமண
வைபவ வரவேற்பு நிகழ்ச்சி
அரண்மனை மைய மண்டபத்தில்
நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
அதில் நமது கதாநாயக பாகவதர்
சோமநாதர் இசை என்னும் இன்ப
வெள்ளத்தைப் பொழிந்து தள்ளிக்
கொண்டு இருந்தார். இசை
இரசிகர்கள் அவரது இசை இன்ப
வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்
கொண்டுஇருந்தனர். அப்போது
அங்கே மன்னர்வந்தார்.
அவரிடம் ஒரு கெட்டகுணம்
உண்டு. அது என்ன என்றால் அவர்
பேசுகிற பேச்சைக் கேட்டு மட்டுமே
மற்றவர்கள் தலை ஆட்டவேண்டும்.
வேறுயார்பேச்சையும்கேட்டு எவரும்
தலையைஆட்டிடலாகாது.இது அவர்
கொள்கை. (இன்று நாட்டினில் உள்ள
நிறையப் பேர்களிடம் இந்த குணம்
உள்ளது.அது வேறு விஷயம்.) ஆக
இப்படிப்பட்ட தங்கமான குணம்
உள்ள மன்னர் கச்சேரி நடைபெறும்
இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே
இசைநதியில்நீந்திக்கொண்டிருந்த
இரசிகப் பெருமக்கள் பாகவதரின்
இசையை,அதன் சுவையை நன்கு
உணர்ந்து இரசித்துக்கொண்டு
இருந்த நேயர்கள் அவ்வப்போது
ஆகா!! ஓகோ!! பேஷ்!!பேஷ்!! என
தலையைஆட்டிக்கொள்வதைக்
கண்ட மன்னர் மிகுந்த கோபம்
அடைந்தார். உடனே மன்னர் ஆணை
இட்டார். நிறுத்துகச்சேரியை.
என்றாரே பார்க்கலாம். உடனே
சபையில் மரண அமைதி.
பாகவதர் உட்பட மக்கள்
எல்லோரும் மெளனமாகி அடுத்து
மன்னர்என்னசொல்லப்போகிறாரோ
என்றோ உள்ளத்தில் பயம் கவ்வ,
நடுநடுங்கிக் கொண்டு இருந்தனர்.
இப்போது மன்னர் உரைநிகழ்த்த
துவங்கினார் :- என் அருமை நாட்டு
குடிமக்களே. தன்னிகரில்லாத
இசையை தரணி எங்கும் வாரி
வழங்கிக்கொண்டு இருக்கும்இசைச்
சக்கரவர்த்தி சோமநாத பாகவதர்
அவர்களே !!
அனைவருக்கும் வணக்கம். எனது
மகள் திருமணவரவேற்புநிகழ்வில்
கலந்துகொண்டு சிறப்பித்த உங்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
நன்றி.நிற்க.எனக்குநீண்டநாட்களாக
பெருத்த சந்தேகம் என் உள்ளத்தைக்
குடைந்து கொண்டே இருக்கிறது.
அதற்கு விடிவு தேட, விடைகாண,
இன்று எனக்கு நேரம் வந்துவிட்டது
என்றே கருதுகிறேன்.நான் இப்போது
உங்கள்எல்லோருக்கும்ஒருபரீட்சை
வைக்கப்போகிறேன்(காவலாளியை
பார்த்துஅனைத்துரசிகர்களின்தலை
மீதிலும் ஒவ்வொருஎலுமிச்சம்பழம்
ஒன்றை வைக்க உத்தரவிடுகிறார்)
இப்போது உங்கள் ஒவ்வொருவரின்
தலைமீதிலும் ஒரு எலுமிச்சம்பழம்
வைக்கப்பட்டு உள்ளது. பாகவதர்
இப்போது தம் இசைக் கச்சேரியைத்
தொடர்ந்து நடத்துவார். உங்களில்
யாராவது தலையை ஆட்டிஅதனால்
அந்த அதிர்வில் தலையில் வைத்த
பழம் கீழே விழுந்துவிடுமேயானால்
எவர் தலையில் உள்ள பழம் கீழே
விழுகிறதோ அவர்கள் அனைவரின்
தலையும்வெட்டிவீழ்த்தப்படும்.
ஆனால்
அதற்கு மாறாக யார் தலையில்
வைக்கப்பட்டுள்ள பழம் ஆடாமல்
அசையாமல் அப்படியே நிலைத்து
நிற்கிறதோ அவர்கள் தலைமட்டும்
வெட்டுவதில்இருந்து விலக்கு
அளிக்கப்பட்டு அவர் தலை மட்டும்
காப்பாற்றப்படும். நான் ஏன்
இப்படி ஒரு கடுமையான பரீட்சை
வைக்கிறேன் என்றால் நீங்கள்
உண்மையிலேயே இசை இரசித்து
உங்கள் தலையை ஆட்டுகிறீர்களா ?
அல்லது எல்லோரும் தலையை
ஆட்டுகிறார்கள்நாமும்நம்தலையை
ஆட்டுவோம் என்று எண்ணி ஆட்டிக்
கொண்டு இருக்கிறீர்களா? இந்த
சந்தேகத்திற்கு இன்று நான் விடை
காண வேண்டும். அதற்குத்தான்
இந்த பரீட்சை என்றாரேபார்க்கலாம்.
(இரசிகர்கள் ஒவ்வொருவரின்தலை
மீதிலும் எலுமிச்சம்பழம் ஒன்று
வைக்கப்பட்டாகிவிட்டது) உடனே
மன்னர் சோமநாத பாகவதரைப்
பார்த்து ,அய்யா பாடகரே நீங்கள்
இப்போது உங்கள் கச்சேரியை உடன்
துவக்கலாம் என்று சொல்லிட,
பாகவதரும் மிகுந்த பயத்துடன் தமது
இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆரோகணத்திற்குச் சென்று
ஆலாபனைகளை அள்ளிவீசிவிட்டு
பிறகு அவரோகணம் வந்தடைந்து
இசையில் புகுந்து விளையாடிக்
கொண்டு இருந்தார். அவையில்
மக்களிடையே நிசப்தம் எல்லோரும்
மெழுகு பொம்மைகளாக கவனம்
முழுவதையும் தலை மீது உள்ள
பழத்தின் மீது வைத்து அது விழுந்து
உருண்டு ஓடிவிடாமல் இருக்க
வேண்டுமே என்ற எண்ணத்தில் மிக
முனைப்போடு பார்த்துக் கொண்டு
இருந்தனர் அப்போது அந்த ஆயிரம்
இரசிகர்களுள் அமர்ந்து இருந்த ஒரு
இரசிகர் தன்னையும் மீறி இசையை
இரசித்துஅதன்எல்லையைத்தொட்டு
விடுவதால் தன்னை மறந்தார். அரச
கட்டளையை மறந்தார். இவை
எல்லாவற்றையும் மறந்த அவர்,
தனது தலையை ஆட்டி, ஆகா!!
ஓகோ!!பேஷ்!!பேஷ்!! என
சப்தம் போட்டுஇசையைஇரசித்ததன்
விளைவு அவர் தலைமீது வைக்கப்
பட்ட எலுமிச்சம்பழம் கீழே விழுந்து
உருண்டோடி மன்னரின் காலடிக்கு
அந்த பழம் வந்து சேர்ந்தது.
இப்போது மன்னர் :- பாகவதரே
நிறுத்தும் உமது கச்சேரியை. எனது
சந்தேகத்திற்கு இன்றுதான் விடை
கிடைத்தது. உயிரே போனாலும்
கவலைப்படாமல்இந்தக்கூட்டத்தில்
அஞ்சாநெஞ்சர்இசையைஇரசித்தார்
அவரை மேடைக்கு தனது அருகிலே
அழைத்தார். உமது பெயர் என்ன என
மன்னர் வினவினார். அவரும் தமது
பெயர் அழகிரி என்று சொல்லிட,
மன்னர் அவையோர்களே
உண்மையில் தலையை
ஆட்டி இரசித்த இவர் ஒருவரே
உண்மைக் கலை இரசிகர். எனவே
இவர்மட்டுமேஅந்தத் தண்டனையில்
இருந்து தப்பிக்கிறார்.
ஏனையோர் அனைவரும் சும்மா
ஒப்புக்கு தலையைஆட்டிக்கொண்டு
இருந்தீர்கள் என்பது இப்போது
நிரூபணம் ஆகி விட்டது. எனவே
காவலாளிகளே இவர் ஒருவரின்
தலையை மட்டும் விட்டு விடுங்கள்.
இவர்போக மீதம்உள்ள அனைவரின்
தலையையும் வெட்டி விடுங்கள்
என்றாரே பார்க்கலாம்.
(இது எப்படி இருக்கு?)
( இத்துடன் கதை முடிகிறது.)
இந்தக் கதையில் இருந்து நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் :-
எந்த சூழல் வந்தாலும்
எத்தனை சோதனைகளும்
வேதனைகளும் வந்து நம்மை
தாக்கி அழித்திட நினைத்தாலும்
எவர் ஒருவர் தாமது கொள்கை,
இலட்சிய எண்ணத்தோடும்
தூய்மையான உள்ளத்து
உணர்வுகளோடும் பாடுபட்டு
அவரவர் தத்தமது கடமைகளை
பணிகளை செய்கிறார்களோ
அவர்களுக்கு நிச்சயம் வெற்றி
என்னும் கனி அவர்களது மடிதேடி
வந்துசேரும்.எந்தப்பணிசெய்தாலும்
அதில் தீவிரமாக, உண்மையாக,
நேர்மையாக நாம் உழைத்தால்
வெற்றி நிச்சயம்.இது வேத
சத்தியம். கொள்கை வாழ்வதே நாம்
கொண்ட இலட்சியம் என்று கூறி
பொறுமையுடன் என்னுடைய
இந்த மிக மிக நீண்ட கட்டுரையைப்
படித்திட்ட உங்கள் அனைவருக்கும்
நன்றி பாராட்டி விடை பெறுகிறேன்.
நன்றி !!வணக்கம் !!.
அன்புடன், மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment