Tuesday, 3 September 2013

கணவனை விட்டுக்கொடுக்காத குணம் கொண்ட அந்தக் கால பெண்கள் !!




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு !!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!


தனித்தமிழில்மட்டுமேபேசுக !!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள்


நடுவில் உரையாடும் போது !!


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும்மேலாகபோற்றிவணங்கி


வரும் எனது அன்புத்தமிழ் உடன்-


-பிறப்புகளே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும் 


எனது சிரம் தாழ்ந்த கரம் குவிந்த 


வணக்கத்தோடுகூடியவாழ்த்துக்கள்.


மீண்டும் சற்று வித்தியாசமான ஒரு 


தலைப்பினை தேர்ந்து எடுத்துஇந்தக்


கால பெண்களின் கோபத்தை எதிர் 


கொள்ளத் துணிந்து விட்ட உங்கள் 


அன்பு இளவலின் கட்டுரைதனை 


சற்றே பொறுமையுடன், உள்ளே 


இருக்கும்  கருத்தின் உண்மைகளை 


புரிந்துகொள்ளவேணுமாய் 


நான் இந்தக் கால் பெண்களிடம் 


பணிந்துவேண்டிகேட்டுக் 


கொள்கிறேன் 


பொதுவாக தனக்கு தாலி கட்டிய 


கணவனின்பெருமைகளுக்குஅவரது 



உரிமைகளுக்கு பெயருக்குஒருகேடு 


வந்தால்அதைதடுக்கசீரும்புலியின் 


வீரத்தைகாட்டியவர்களே



அந்தக் கால பெண்கள்.இதற்குஎன்று 



ஒரு கால அளவு ஒன்று வேண்டும் 



அல்லவா.அந்தக் கால அளவு 


சற்றேறக்குறைய 4௦ ஆண்டுகள் 



முன்பாக என்று வைத்துக் 



கொள்ளலாம்.அதாவது 1973 முதல் 



1975ம் ஆண்டுவரையில் என 



நாம் பொருள் கொள்வோம் என் 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே ( ஏன் 



என்றால் எனக்கு திருமணம் நடந்த 



ஆண்டு 1975.ஆகவே எனது 



பெருமைக்கு உரிய இல்லாளை 



அந்தவட்டத்திற்குள் கொண்டு வர 



வேண்டியது எனது கடமை 



அல்லவா. அந்த வட்டத்திற்குள் 



அவளை கொண்டு வந்துள்ளதற்கு 



நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.)            

 

இப்போது நாம் கட்டுரைக்குள் 



செல்வோமா?


ஒரு கணவன்-மனைவி. இதில் 



கணவன் ஏறக்குறைய ஒரு 



பயந்தாங்கொள்ளி.



(இந்தக்கால ஆண்களில் 



பெரும்பான்மையான ஆண்கள்இந்த 



ஜாதிதான் அதுவேறு விஷயம்) 



கணவன் தீபாவளிக்குவெடி 



வெடித்தால் கூட அறைக்குள் 


சென்று காதுக்குள் பஞ்சு அடைத்துக் 


கொண்டு கதவை சாத்திகொள்ளும் 


மதுரை வீரன் அவள் கணவன். 


அப்படிப்பட்ட கணவனோடு இவள் 


குடும்பம் நடத்தியதற்கு அவன் தந்த 


பரிசு ஒரு ஆண் குழந்தை. அந்தக் 



காலத்திரைப்படமான 



"பார் மகளே பார்" என்ற படத்தில் 



கவிஞர் கண்ணதாசனின் 



காவியப் பாடல்களுள் ஒன்றான 



"நீரோடும் வைகையிலே நின்றாடும் 



மீனே !! நெய் ஊரும் கானகத்தில் 



வந்தாடும் மானே"என்றபாடலில்ஓர்  


வரி வரும். நடிகர் திலகம்-சௌகார் 



ஜானகி இருவரும் வாயசைக்க 




மறைந்த மதுரை மண்ணின் 



மைந்தன் (எங்க ஊர்க்காரர்)


T.M.சவுந்திரராஜன் மற்றும் 



குயிலோசை P.சுசீலா அவர்களும் 



ஒருசேர இணைந்து பாடி 



இருப்பார்கள். அந்த வரிகளை 


இப்போது நீங்களே பாருங்கள்:-


T.M.S.:- நான் காதல் என்னும்கவிதை            

          சொன்னேன் கட்டிலின் மேலே !!


P.சுசீலா:- அந்தக் கருணைக்கு நான் 

  

 பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!!


இந்த பாடலில் உள்ள வரிகளைப் 



போல அந்தக் கணவன் இவளுக்கு 



ஒரு மகனை பரிசு தந்தான். அந்தக் 



காலத்தில் பிறந்த குழந்தைகளை 



தூங்க வைக்க தொட்டில் 



என்று ஒரு சேலையில்/அல்லது 



வேஷ்டியில்கயிறுகட்டிதொங்க



வைத்திருப்பார்கள். (இதை நான் ஏன் 



இவ்வளவு விவரமாக சொல்கிறேன் 



என்று சொன்னால் இந்தக் கால 



இளம்பெண்களுக்கு கட்டில் 



என்றால் என்ன என்று தெரிந்த 



அளவிற்கு தொட்டில் என்றால் 



என்ன என்று தெரியாது 



அதனால்தான் ) நள்ளிரவு 



நேரம் தொட்டிலில் குழந்தை. 



கட்டிலில் அருகருகே கணவன் 



மனைவி  உறங்கிக் கொண்டு 



இருக்கும் வேளையில் 



அடுப்படியில் பூனை ஒன்று 



பாத்திரங்களை உருட்டும் ஓசை 



கேட்கிறது. இந்த பயம் 



நிறைந்த கணவன் சத்தம் கேட்டு 




பயந்து மனைவியை இறுக கட்டிப் 




பிடித்துக் கொள்கிறான். அப்படிப் 




பட்ட பயம் நிறைந்த ஒருவன்தனக்கு 




கணவனாக இருந்தாலும் கூட இந்த 




மனைவி அதனை யாருக்கும் 



விட்டுக்கொடுக்க மாட்டாள். அந்தக் 




குழந்தை அழுதிடும் போது இந்த 




மனைவி தாலாட்டு பாடி தூங்க 




வைப்பாள். (இப்போது இந்தக் 



காலப் பெண்களுக்கு தாலாட்டா? 




அப்படி என்றால் என்ன அது? எந்தக் 




கடையில் C.D.(COMPACT  DISC.)   




விற்கும்? என கேட்பார்கள்) அவள் 




தனதுகணவனை விட்டுக்கொடுக்கா




மல் பாடிடும் அந்த தாலாட்டினை 




நீங்களும்தான்சற்றுபடியுங்களேன் !!



என் கண்ணே !! நீ கண்ணுறங்கு !!



உங்க அப்பா காட்டுக்கு போனாராம் !!



அங்கே வேட்டைக்குப் போனாராம் !!



அங்கே சிங்கத்தைச் சுட்டாராம் !!



புலிக் கூட்டத்தைச் சுட்டாராம் !!



கண்ணே !! நீ கண்ணுறங்கு !!



என் கண்ணே !! நீ கண்ணுறங்கு !!


பார்த்தீர்களா நேயர்களே !! 



அடுப்படியில் பூனை பானைகளை 



உருட்டும் சத்தம் கேட்டால் 



மனைவியைக் கட்டிபிடித்து



பயந்துபோய் தூங்கும் நபராக தனது 



கணவன் இருந்தாலும்கூட மனைவி 



எப்படி விட்டுகொடுக்காமல் 



தனது மகனிடம் பாடிடும் தாலாட்டு 



பாட்டில்எப்படிகணவனின்




மானத்தை காப்பாற்றுகிறாள் என்று 




பார்த்தீர்களா ?




இதுதான் அந்தக் காலப் பெண்களின் 



அடிப்படை குணம் அன்பர்களே !!



இந்த மிக நீண்ட கட்டுரையை 




பொறுமையோடு படித்த அன்பு 




உள்ளங்களுக்கு எனது சிரம் 



தாழ்ந்த கரம் குவிந்த நன்றிகளும் 


 

வணக்கங்களும்.



மீண்டும் சந்திப்போம்.



அன்புடன்,



மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment