Thursday, 19 September 2013

எவை எல்லாம் ஆணுக்கு இளைமையாக இருத்தல் வேண்டும் ? (திருத்தப்பட்ட புதிய பதிவு)






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!



தமிழ் இனம் காத்திட வாழ்ந்திடுக !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுக !!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்


நடுவில் உரையாடும் பொழுது!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்


உயிரினும் மேலான அன்புத் தமிழ்


உடன்பிறப்புகளே !! அனைவருக்கும்


என் இதயம் கனிந்த காலைவேளை


நான் அன்புடன் அளிக்கும் நல்


வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.




உங்கள் இமைகள் திறந்திடும் இந்த


இனிய காலை வேளையில் உங்கள்


வாழ்கையில் சுமைகள் ஏதும் இன்றி


சுகமாய் அமைந்திட எல்லாம் வல்ல


இறைவனைப் பிரார்த்தனை செய்து


கொள்கிறேன் என் அன்புத் தமிழ்


நெஞ்சங்களே !!





அன்பர்களே !! உலக வாழ்கையில்


நாம் வாழ்ந்திடும் கணவன் மனைவி


உறவில் தேவைப்படுவது என்பது


நாங்கள் வாழ்ந்தகாலம் வரையில்


கணவன் சொல்லுக்கு மனைவி


என்பவள் கட்டுப்பட்டு,கீழ்படிந்து


வாழ்ந்திருந்த பொற்காலம் அது.


அன்று குடும்பத் தலைவனான


கணவன் மட்டுமே பொருள்தனை



ஈட்டித்தரும் நபராக இருந்திட்ட


காரணமே முக்கியம் மனைவி


கணவனுக்கு கீழ்படிந்து நடந்த


முறைக்கு.  ஆனால் அந்த


பொற்காலம் இன்று எங்கேயோ


காணாமல் போய்விட்டது. என்ன


காரணம் என்றால் இன்று மனைவி


கணவனுக்கு இணையாக, சில


வீடுகளிலோ கணவனைவிடவும்


மனைவியாகப்பட்டவள் அதிகம்


பொருள் ஈட்டிடும் நபராக மாறி


இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட


வீடுகளில் திருவாளர் கணவன்


கிட்டத்தட்ட ஒரு சம்பளம்


இல்லாத வேலையாள் போலவே


வாழ்ந்துகொண்டு இருப்பதை


நான் கண்கூடாகவே பல வீட்டில்


பார்த்திருக்கிறேன். அது ஒரு


புறம் இருக்கட்டும். இப்போது நாம்


கட்டுரையின்  தலைப்பு சம்பந்தமான


விஷயத்திற்கு வருவோம்அன்பர்களே 


சங்ககால பாடலில் இதுபற்றி


சற்று  விரிவாகவே சொல்லப்பட்டு


இருக்கிறது.




முதலில் பாடலில் உள்ள ஒவ்வொரு


வரிகளைப்பற்றியும் ஒரு கற்பனை


காட்சிதனை விரிவாக உங்களிடம்


விளக்கி சொல்லிவிட்டு அதன்பின்


இறுதியில் பாடலை உங்களுக்குச்


சொல்லிட விரும்புகிறேன் எனதன்புத்


தமிழ் நெஞ்சங்களே !!


வரி எண் :- 1.


" பிள்ளைதான் வயதில் மூத்தால்

 பிதாவின் சொற்புத்தி கேளான் "



அப்பா :- மகனே !! மதிவாணா !


மகன்:- என்னங்க அப்பா !!


அப்பா :- ஒழுங்காகப் படிச்சு நீ


கல்லூரியிலேயே முதல் மாணவனாக


தேர்ச்சிபெறனும் மகனே !! அப்பத்தான்


உனக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல


வேலை கிடைக்கும். நீயும் கை


நிறைய சம்பாத்தியம் செய்திட


முடியும். பெரிய இடத்துலே இருந்து


உனக்கு பெண் தேடி வருமப்பா.


மகன் :- அப்பா. நீங்கசொன்னபடியே


நடந்து கொள்கிறேன் அப்பா.



அப்பா அறிவுரையைக் கேட்டதால்


மகன் நன்கு படித்து தேர்ச்சி பெற்று


மாநிலமுதல்மாணவனாக வருகிறான்.


நல்ல நிறுவனத்திலும் வேலை


கிடைக்கிறது. பெரிய இடத்திலிருந்து


பெண்ணும் கிடைத்து மகன் இப்போது


அப்பாவின் தயவு இல்லாமல் தனது


சொந்தக் காலில் நிற்கும் தகுதி


பெற்றுவிடுகிறான்(எல்லாம்அப்பா


சம்பாத்தியத்தில்தான். ஆனால் இதை


நினைச்சுப் பார்க்கிறது பையனின்


அப்பாவும் அம்மாவும் மட்டுமே.)



(இப்போது காட்சி எப்படி மாறுகிறது


பாருங்கள் நண்பர்களே !!)



அப்பா:- மகனே மதிவாணா !!


(மகனிடம் இருந்து எவ்வித பதிலும்

இல்லை.)



அப்பா :- ( சற்று உரத்த குரலில் )


மதிவாணா. அப்பா மதிவாணா.



மகன் :- ஏன் இப்படி காலங்காத்தாலே


கத்தி உசிரைவாங்குறீங்க? உங்களோட


ஒரே தொல்லையாப் போச்சு.


அப்பா :- என்னடா நான் பெத்த மகனே.


இப்படி பேசுற. உன்னையை அந்தக்


காலத்திலே படிக்கவச்சு பாட வச்சு


வேலை வாங்கித்தர என்ன பாடு


பட்டு இருப்பேன். கொஞ்சம் அதை


எல்லாம் மறந்துடாதடா.



மகன் :- நீங்க ஒன்னும் ஊர் உலகத்தில


யாரும் செய்யாததை செஞ்சுரல.


புள்ளையைப் பெத்த ஒவ்வொரு


அப்பனும் செய்ய வேண்டிய கடமை


அது. சரி..சரி.. இப்ப எதுக்கு என்னை


கூப்பிட்டீங்க. விஷயத்தைச்


சொல்லுங்க.



அப்பா :-  சரிப்பா.சரிப்பா. உன் அக்கா


மகன் அன்பு நேசனுக்கு அடுத்த மாசம்


கல்யாணம்.


மகன்:-  அதான் தெரியுமே. சீக்கிரம்


சொல்லுங்க.எனக்கு ஆபீஸ்க்கு


நேரம் ஆச்சு.



அப்பா :- அதான் அக்கா கொஞ்சம்


பண உதவிகேட்டா. பத்தாயிரம் ரூபா

கடனாத்தான் கேட்டா. அதான் அந்த


விசயமாத்தான் உன்கிட்ட கேட்டேன்.


மகன் :- என்னது ? பத்தாயிரமா ?


அய்யா நான் ஒன்னும் ரிசர்வ்


பாங்கில வேல பார்க்கல. யார்வேணா


கேட்டவுடன் பணத்தை அள்ளி எறிய.


நானே கௌசல்யாவோட (மனைவி


தங்கை,இவருக்கு கொழுந்தியாள் ) 


கல்யாணத்துக்கு 5 பவுன் மட்டும் 


போடறதா  வாக்கு கொடுத்துட்டேன்.


அதுக்கே பணத்துக்கு அல்லாடிட்டு


இருக்கேன்.எங்கிட்ட பத்துப் பைசா


எதிர்பார்த்துராதீங்க. நான் வரேன்.


அப்பா :- (கண்களில் நீர் வழிய) அம்மா


பூங்கோதை (தன் மனைவி) பாத்தியா


உம் மவன் என்ன சொல்லிட்டுப்


போறான்னு. அதான் அந்தக் காலம்


சும்மாவா சொன்னாங்க.


ஆதி உறவு அடியோடு அத்துப் போகும்.


பொஞ்சாதி உறவு கொழுந்துவிட்டு


எரியும்னு. (அவை கண்ணியம் கருதி


வார்த்தை  மாற்றி  சொல்லப்பட்டு


உள்ளது)



நேயர்களே!பார்த்தீர்களாபாடல்வரிகள்


எப்படி சரியாகப் பொருந்துகிறது என்று.


"பிள்ளைதான் வயதில் மூத்தால்


 பிதாவின் சொற்புத்தி கேளான் "



( இன்னும் மேற்சொன்ன பாடலில் மீதி


மூன்று வரிகள் உள்ளது.அவை அடுத்த


"எண்ணத்தில் தோன்றியவை" இதழில்


வெளிவரக் காத்து இருக்கிறது.பார்த்து


பின் படிக்கவும்.அதுவரை சற்று நீவிர்


இளைப்பாறுங்கள் அன்பர்களே !!



(கட்டுரை தொடரும்.............................)



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment