Sunday, 1 September 2013

பிழைமொழியாகிப்போன பழமொழிகள் !!--சிறு விளக்கம் !!(புதுப்பிக்கப்பட்ட மறுபதிவு)



உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு !!                         


இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!! 


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!                     



உலகெங்கிலும் வாழ்ந்துவரும்என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே !!                 


முதற்கண் உங்கள் அனைவரின் 


பொற்கமல பாதங்களை வணங்கி 


எனது கட்டுரையை சமர்பிக்கிறேன்  


பழமொழிகளா அல்லது 


பிழைமொழிகளா?—சிறு விளக்கம்.



நான் ஏற்கனவே பிழை மொழிகள் 


ஆகிப்போனபழமொழிகள் 


பலவற்றைப்  பற்றி விளக்கம்தந்து 


உள்ளேன்.அந்த வரிசையில் இன்று 


மேலும் ஒன்று. அந்த மகுடத்தில் 


இன்றுமேலும்ஒருவைரக்கல்லினை 

உங்கள் முழு ஒப்புதலுடன் பதியம் 


செய்கிறேன்.


     சோழியன் குடுமி சும்மா                        

             ஆடாது.


இந்த பழ மொழிக்கு நாம்இதுவரை 


கொண்ட பொருள் யாதெனின் 


சோழியன் என்று ஒருவன் அவன் 


ஒரு காரியவாதி. அவன் குடுமி 


காரியம் இன்றி ஆடாது. 


இப்படித்தான் நம்மில் பலரும் 


இன்றுவரை பொருள் கொண்டு 


வந்துள்ளோம்.ஆனால் அதுவன்று 


உண்மை. இதற்கு சரியானபொருள் 


என்னவென்றால் சோழியன் என்று 


அழைக்கப்படுவோர் கோவிலில் 


ஊழியம் செய்பவர்கள். அவர்கள் 


அனைவர்க்கும் குடுமி உண்டு. 


கோவிலில் குடமுழுக்கு என்று 


வரும்போது புனித நீரை 


கலசங்களில் தெளிப்பதற்குகோபுர 


உச்சிக்கு இவர்கள் மட்டுமே 


கும்பங்களில்(குடங்களில்)எடுத்துச் 


செல்லவேண்டும். அந்த பாரம்பரிய 


உரிமை இவர்களுக்கு மட்டுமே 


வழங்கப்பட்டு உள்ளது.ஆனால் 


அந்த புனிதநீர் உள்ள குடத்தை 


வெறும் தலையில் வைத்து 


கொண்டு செல்லுதல் 


கூடாது. அப்படி கொண்டு 


செல்லுதல் ஆகம விதிகளுக்கு 


புறம்பானது/எதிர் மறையானது 


என்று சொல்லப்பட்டதால் அதற்கு 


என்று உள்ள சும்மாடு எனப்படும் 


வட்டவடிவில்உள்ள பிரிமனையை 


தலைமேல்வைத்துத்தான்சோழியன் 

கோபுரஉச்சிக்குபுனிதநீர் குடத்தை 


கொண்டு செல்லவேண்டும்.ஒரு 


சோழியன் என்ன செய்தான் 


என்றால் சும்மாடு எதற்கு? 


என்னிடம்தான் மிக  நீண்ட குடுமி 


உள்ளதே.அதனால்அந்த குடுமியை 


வட்ட பிரிமனையாக ஆக்கி 


சும்மடாக வைத்து கொள்கிறேன் 


என்று சொன்னான். ஆனால் 


பெரியோர்கள்/மதவாச்சாரியார்கள் 


மறுத்து சொன்ன வாசகம்தான்:-     

    சோழியன் குடுமி சும்மாடு                     

              ஆகாது 


என்று சொன்ன சொல்லைத்தான்      

      சோழியன் குடுமி சும்மா                       ஆடாது 


எனநாம் மாற்றி பொருள்கொண்டு 


வந்தோம். இனிமேல் திருத்தி 


பொருள்கொள்ள வேண்டுகிறேன் 


என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!. 


மிக்க நன்றி !! வணக்கம் !!.


அன்புடன், 


மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment