உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
அன்புத் தமிழ் உள்ளங்களே !!
உங்கள் அனைவருக்கும் ஒரு சிறு
அறிவிப்பு:- நீங்கள் உங்களின்
இமைகள் திறக்கின்ற இந்த இனிய
நாள், சுமைகள் எதுவும் இல்லாமல்
சுகமாக அமைந்திட என் இதயம்
கனிந்த நல் வாழ்த்துக்களுடன்
கூடிய காலை வணக்கம்.
அது 1963ம் ஆண்டு. இன்றைக்கு
ஏறத்தாழ 5௦ ஆண்டுகள் கடந்து
முடிந்து விட்டது. தமிழ்த்திரை
உலகின் முடிசூடா மன்னனாக
இயக்குனர் திலகம் என்று
எல்லோராலும் மனதார போற்றப்-
-பட்ட K.S.கோபாலகிருஷ்ணன்
கதை,திரைக்கதை,வசனம் எழுதி
இயக்கிய எத்தனை எத்தனையோ
வெற்றிப் படங்களுள் ஒன்றுதான்
" கற்பகம் ". இந்தப் படத்தில்தான்
புன்னகை அரசி என்று பிற்காலத்தில்
அனைவராலும் பட்டம்பெற்ற சேர
நாட்டினைச் சேர்ந்த பிஞ்சு இளம்
நடிகை திருமதி K.R.விஜயா -
-வேலாயுதம் அவர்களை திரை
உலகிற்கு இயக்குனர் திலகம்
K.S.கோபாலகிருஷ்ணன் முதன்
முதலாக அறிமுகம் செய்து
வைத்தார்.இந்தப் படத்திற்கு
இசை அமைத்த பெருமை
மெல்லிசை மன்னர்கள் என்று
போற்றப்பட்ட திரு விஸ்வநாதன்-
மறைந்த இராமமூர்த்தி ஆகிய
இரட்டையர்கள் ஆவர். இந்தப்
படத்தில் காவியக்கவிஞர் வாலி
பல பாடல்கள் புனைந்து இருந்தார்.
சூழ்நிலைக்கு ஏற்பவும் ஆனால்
அதே நேரம் அந்த சூழலில் இடம்
பெற்று நடிக்கும் கதாபாத்திரத்தின்
தனித்தன்மை கெடாமலும் பாடல்
எழுதிடும் பல வல்லவர்களுள்
காவியக் கவிஞர் வாலியும்
ஒருவர்.
கற்பகம் படத்தின் கதை இதுதான்.
ஒரு கிராமத்தில் சிறு ஜமீனாக
ஜெமினிகணேசனும் அவரது முதல்
மனைவியாக " கற்பகம்" பெயரில்
K.R. விஜயாவும் 2ஆவது
மனைவியாக (விஜயா மறைந்த
பின்னர்)
(விஜயாவின் தோழியாக வரும்)
நடிகையர்திலகம் சாவித்திரியும்
இணைந்துநடிக்கமுதல்மனைவி
நினைவாகவே வாழ்ந்திடும் ஜெமினி
எப்படி பின்னர் அவளை மறந்து
2ஆவதுமனைவியுடன் வாழ்கையை
முடிக்கிறார்என்பது தான் கதை.
அதில் KR.விஜயாவை திருமணம்
செய்த பின் அன்று நடைபெறும்
முதலிரவின்போதுதோழிசாவித்திரி
பாடும் (தோழிக்காக ) பாடலில் வரும்
வரிகளை கவனியுங்கள். பிறகு நான்
அதற்கு விளக்கம் தருகிறேன்.
பாடல் இதோ :-
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு !!
ஆனால் இதுதான் முதலிரவு!!
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு!!
ஆனால் இதுதான் முதல்உறவு!!
(ஆயிரம்)
வயதில் வருவது ஏக்கம் !!அது
வந்தால் வராது தூக்கம் !!
வந்ததம்மா மலர் கட்டில் !!இனி
வீட்டினில் ஆடிடும் தொட்டில்!!
(ஆயிரம்)
வருவார் !! வருவார் !! பக்கம் !!
உனக்கு வருமே வருமே (வெட்கம்)*
தருவர் !!தருவார் !! நித்தம் !!
இதழ் தித்திக்க தித்திக்க !!(முத்தம்)*
(ஆயிரம்)
யாரோ சொன்னார் கேட்டேன் !! நான்
கேட்டதை உன்னிடம் சொன்னேன் !!
நானாய் சொன்னது பாதி !!இனி
தானாய்த் தெரியும் மீதி!!***
(ஆயிரம் )
* (வார்த்தையை உச்சரிக்காமல்
பாவனையில் காட்டுவது)
***( ஹம்மிங்.)(நீளமான குரல்
ஒலித்தல்)
இந்தப் பாடலில் தோழியாக வரும்
கதா பாத்திரத்துக்கு உரியவள்
திருமணம் ஆகாத கன்னிப்பெண்.
இவளுக்கு எப்படி முதலிரவு
அனுபவம் தெரிந்திருக்க முடியும்
என்று கேள்வி எழுவதுடன் அந்த
பாத்திரத்தின்தன்மைக்குசற்றுஊறு
வருவது போன்று ஒரு சூழல்
வருகிறது அல்லவா நேயர்களே!!
அந்த கறைதனைப் போக்கிடவே
காவியக் கவிஞர் வாலி இந்தப்
பாடலின் கடைசி பாராவைப்
பயன்படுத்திக்கொள்கிறார் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே!! எப்படி ? இதோ
இப்படி :-
யாரோசொன்னதைகேட்டேன் !!நான்
கேட்டதைஉன்னிடம்சொன்னேன்!!
நானாய் சொன்னது பாதி !!
இனி தானாய்த் தெரியும் மீதி!!................
என்னேமறைந்தகாவியக்கவிஞரின்
மதி நுட்பம். கதாபாத்திரத்தின் தனித்
தன்மை கெட்டு விடாமல் பாடல்
புனைவதில் வாலிக்குநிகர்வாலியே
என்பது இப்போதுநிரூபணம்ஆகிறது
அல்லவா நேயர்களே !!
மீண்டும் நாம் வேறு ஒரு தலைப்பில்
நமது தமிழ்கட்டுரைப்பயணத்தினை
தொடர்ந்திடுவோம்.அதுவரைஉங்க--
--ளிடமும் மற்றும் உள்ள
அனைவரிடமும் அன்பு வணக்கம்
கூறி விடை பெறுவது உங்கள் அன்பு
உடன் பிறப்பு மதுரை T.R. பாலு .
வணக்கம் நேயர்களே !!
No comments:
Post a Comment